சந்திமாலோடு இணைந்து இலங்கையை மீட்டினார் சில்வா

324

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகியது. பல சாதனைகளை நிகழ்த்தி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்த  3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியையும் வென்று தொடரை 3-0 என்ற ரீதியில் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது.

போட்டியின்  நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ்  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இரண்டு  அணிகளின்  விபரம்

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, கௌசல் சில்வா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், எஞ்சலோ மெதிவ்ஸ் , தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், லக்ஷன் சந்தகன், சுரங்க லக்மால்

அவுஸ்திரேலிய அணி

டேவிட் வோர்னர், சோன் மாஷ், ஸ்டீவ் ஸ்மித் , எடம் வோஜஸ், மொயிசஸ்  ஹென்ரிக்கியுஸ், பீட்டர் நெவில், மிச்சல் ஸ்டார்க், ஜொஸ் ஹெசல்வுட், நேதன் லயோன், ஜொன் ஹொல்லன்ட்

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய 1ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.  ஆரம்பத்தில் இலங்கை அணி ஒருநிலையில் 5 விக்கட்டுகளை இழந்து 26 ஓட்டங்களை மட்டுமே பெற்று பாரிய தடுமாற்றத்துக்குள்ளாகி இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த உப தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் இளம்வீரர் தனஞ்சய டி சில்வா ஆகியோர் மிக மிக அருமையாக விளையாடி 1ஆவது நாள் ஆட்ட நேரம் முடியும் வரை விக்கட்டுகளைப் பறி கொடுக்காது வீழ்த்தப்படாத 188 ஓட்டங்களை 6ஆவது விக்கட்டுக்காகப் பகிர்ந்தார்கள். இதில் தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 24 வயது நிரம்பிய தனஞ்சய டி சில்வா தனது டெஸ்ட் வாழ்க்கையில் 1ஆவது சதத்தைப் பெற்று ஆட்டம் முடியும் போது ஆட்டம் இழக்காமல் 16 பவுண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்களையும் உப தலைவர் தினேஷ் சந்திமால் ஆட்டம் இழக்காமல் 04 பவுண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களையும் பெற்று இருந்தனர். இவர்களைத் தவிர குசல் பெரேரா 16 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலிய அணி சார்பாக மிச்சல் ஸ்டார்க் 3 விக்கட்டுகளையும் நேதன் லியன் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி – 214/5

தனஞ்சய டி சில்வா 116*, தினேஷ் சந்திமால் 64*, குசல் பெரேரா 16

மிச்சல் ஸ்டார்க் 47/3, நேதன் லியன் 72/2

Sri Lanka (1st Innings)

Batsmen Dismissal Runs Balls
Kaushal Silva  c Smith b Starc 0 15
Dimuth Karunarathne   b Starc 7 34
Kusal Janith Perera c Smith b Lyon 16 32
Kusal Mendis c Smith b Starc 1 12
Angelo Mathews  c Starc b Lyon 1 4
Dinesh Chandimal  Not Out 64 204
Dhananjaya De Silva Not Out 116 240
Dilruwan Perera
Rangana Herath
Lakshan Sandakan
Suranga Lakmal
Extras (9) TOTAL 214/5 (90 overs)

Fall of wickets :  1-2 (Silva, 4.4 ov), 2-21 (MDKJ Perera, 11.6 ov), 3-23 (Karunaratne, 14.1 ov), 4-24 (Mathews, 15.1 ov), 5-26 (Mendis, 16.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  18 7 47 3
Josh Hazelwood 11 3 27 1
Nathan Lyon 34 9 72 2
Jon Holland 21 5 34 0
Mitchell Marsh 5 0 20 0
Steve Smith 1 0 5 0