தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள ஆடவருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் தமிழ்பேசும் வீரர் சாருஜன் சண்முகநாதன் இணைக்கப்பட்டுள்ளதுடன், அணியின் தலைவராக சினெத் ஜயவர்தன பெயரிடப்பட்டுள்ளார்.
இலங்கை மகளிர் அணிக்கான புதிய தேர்வுக்குழு நியமனம்!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இளையோர் ஆசியக்கிண்ணத்தில் விளையாடிய 14 வீரர்கள் உலகக்கிண்ணத்துக்கான குழாத்தில் இடத்தை தக்கவைத்துள்ளனர். இந்த குழாத்திலிருந்து தினுக தென்னகோன் நீக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்துக்கு சுபுன் வாதுகே அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்வரும் 21ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், அடுத்த குழுநிலை போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த இந்த போட்டிகளுக்கு முன்னர் எதிர்வரும் 14 மற்றும் 17ம் திகதிகளில் முறையே பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இலங்கை 19 வயதின் கீழ் குழாம்
சினெத் ஜயவர்தன, மல்ஷ தருபதி, புலிந்து பெரேரா, ருஷாந்த கமகே, ரவிஷான் டி சில்வா, சாருஜன் சண்முகநாதன், தினுர கலுபான, விஷ்வ லஹிரு, குருக சங்கெத், விஹான் ஹலம்பகே, ருவிஷான் பெரேரா, விஹாஸ் தெவ்மிக, துவிந்து ரணதுங்க, ஹிருன் கபுருபண்டார, சுபுன் வாதுகே
மேலதிக வீரர்கள் – மனுல குலரத்ன, தினுக தென்னகோன், ஹிரான் ஜயசுந்தர
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<