இலங்கை ரக்பி சம்மேளனமானது (SLR) 17 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் ரக்பி அணியினை ஆசிய எழுவர் ரக்பி (17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான) தொடரில் பங்கெடுக்க வைப்பதன் மூலம், இதோடு சேர்த்து அடுத்த வருடத்திற்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குரிய தகுதிகாண் ஆட்டத்திலும் விளையாட வைக்கின்றது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியினைப் பெற முக்கியமான ஒன்றாக எழுவர் ரக்பி தொடர் போட்டிகள் அமைகின்றன. அந்த வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெறவிருக்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய எழுவர் ரக்பி தொடர் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளாக அமைகின்றது. இத்தொடர் நவம்பர் 29 மற்றும் 3௦ ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளர்களாக பெரேரா மற்றும் கொஸ்தா
இலங்கை ரக்பி சம்மேளனமானது, 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை ரக்பி..
12 நாடுகள் பங்குபெறும் இத் தொடரில் வெற்றியாளராக மாறும் ஒரு நாட்டு அணி மாத்திரமே, இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஆர்ஜென்டீனாவின் புய்னோஸ் ஏய்ரஸ் நகருக்கு பறக்கும். ஆண்கள் அணிக்கு வழங்கப்படாத சிறப்பு சலுகைகளை இலங்கை ரக்பி ஒன்றியம் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் முன்னேறுவதற்காக இந்த மகளிர் அணிக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்த சம்பியன்ஷிப் தொடருக்கான அணியினை தேர்வு செய்யும் பொருட்டு மேல் மாகாணம் மற்றும் ருவன்வெல்லவில் மகளிர் எழுவர் அணிகளுக்கான ரக்பி தொடர்கள் நடாத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு தற்போது கொழும்பில் தேசிய மகளிர் ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளர் சுதத் சம்பத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
“இந்த வீராங்கனைகளின் ரக்பி விளையாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சிறந்த அடைவுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, துபாயில் இவர்கள் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்க்க முடியும் “ என சுதத் சம்பத் கூறியிருந்தார். அதோடு சம்பத் தமது மகளிர் அணி உறுதியாக சாதிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
குழு C இல் இந்த ரக்பி தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் காணப்படுகின்றது. குழுவில் முதல் இரண்டு இடங்களினைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
“இந்த வீராங்கனைகள் ரக்பி விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதுவே பெண்கள் இவ்விளையாட்டில் சாதிக்க முக்கியமானது. ” என இலங்கை எழுவர் ரக்பி அணியின் பயிற்சியாளர் பீட்டர் வூட்ஸ் கொழும்பு CR & FC மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது கூறியிருந்தார்.
12 பேரைக் கொண்ட 17 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணிக்குழாம் இந்த வார இறுதியில் தீர்மானிக்கப்பட்டு நவம்பர் 26ஆம் திகதி துபாய் நகருக்கு பறக்கின்றது.
இலங்கை மகளிர் அணியின் போட்டி விபரம்
நவம்பர் 29 – இலங்கை எதிர் பிலிப்பைன்ஸ் – நேரம் பி.ப 2.40 மணி
நவம்பர் 29 – இலங்கை எதிர் ஹொங்கொங் – நேரம் பி.ப 6.46 மணி
(போட்டிகளின் நடைபெறும் நேரம் இலங்கை நேரப்படியே குறிப்பிடப்பட்டுள்ளன.)