ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை இரண்டாவது சுற்றுக்கு தகுதி

253

பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கனிஷ்ட ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் கஸகஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பதிவுசெய்த இலங்கை அணி, இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.  

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணி பஹ்ரைன் பயணம்

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெறவுள்ள..

இம்முறை போட்டிகளில் சி குழுவில் இடம்பெற்ற இலங்கை அணி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கஸகஸ்தான் அணியுடனான முதலாவது லீக் போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் (23-25, 25.16, 29.27, 25-10) வெற்றியைப் பதிவுசெய்தது.  

இப்போட்டியில் இலங்கை அணி சார்பாக விதுர பிரபாத் பெரேரா, மஹேல இந்தீவர மற்றும் சங்க டில்ஷான் ஆகியோர் சிறந்த முறையில் ஆடி அணிக்கு அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு (22) அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 24-26, 25-13, 26-24, 25-21 என 3-1 என்ற செட் கணக்கில் இலங்கை அணி வெற்றியைப் பதிவு செய்து குறித்த குழுவில் முன்னிலை பெற்று அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி, இம்முறை போட்டிகளில் இறுதி எட்டு அணிகள் மோதும் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பஹ்ரைனின் மனாமா நகரில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியைக் காண அந்த நாட்டில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் மைதானத்துக்கு வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பராலிம்பிக்கில் இலங்கை வீரரின் உலக சாதனையை அங்கீகரிக்க மறுப்பு

தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் 18ஆவது…

கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகிய இம்முறை போட்டித் தொடரில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, துர்க்மெனிஸ்தான், தென் கொரியா, கட்டார், பஹ்ரைன், ஈராக், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராட்சியம், ஜோர்தான், சீன தாய்ப்பே, கஸகஸ்தான், நியூசிலாந்து, மாலைதீவுகள், மலேசியா, இந்தியா, ஈரான், அவுஸ்திரேலியா, மக்காவோ, ஹொங்கொங், நியுஸிலாந்து, உஸ்பகிஸ்தான், மலேசியா மற்றும் இலங்கை என 24 ஆசிய நாடுகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இப்போட்டித் தொடரில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு தகுதிபெறும்.