பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் ஹெட்ரிக் வெற்றிகளைப் பதிவுசெய்த இலங்கை அணி, ஒட்டுமொத்த நிரல்படுத்தல் போட்டியில் பஹ்ரைன் அணியிடம் தோல்வியைத் தழுவி பத்தாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
20 வயதின் கீழ் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை
பஹ்ரெய்னின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20..
இம்முறை போட்டிகளில் சி குழுவில் இடம்பெற்ற இலங்கை அணி, முதல் சுற்றில் கஸகஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றது.
அதன்பின்னர், கடந்த புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மீண்டும் கஸகஸ்தான் அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி, துரதிஷ்டவசமாக 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், கட்டார் அணியுடன் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற நிரல்படுத்தல் போட்டியில் 3-1 செட்களில் (25-21, 21-25, 25-18, 26-24) இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் பஹ்ரெய்ன் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது
இதனையடுத்து, 9ஆம், 10ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் வரவேற்பு நாடான பஹ்ரைன் அணியை எதிர்த்து இலங்கை வீரர்கள் ஆடினர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் (25-21, 25-19, 24-17) பஹ்ரைன் அணி வெற்றி பெற்று 9ஆவது இடத்தை உறுதி செய்தது.
ஆசிய கழக கரப்பந்தாட்ட தொடருக்காக மியன்மார் சென்றுள்ள இலங்கை அணி
இலங்கை இராணுவ வீரர் சாமர சம்பத் தலைமையிலான…
இதேநேரம் இம்முறை போட்டிகளில் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் போட்டியில் நடப்புச் சம்பியனான ஈரான் மற்றும் தென் கொரிய அணிகள் மோதின. இதில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற ஈரான் அணி, 5ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
இதேநேரம், 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் ஈராக் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய தாய்லாந்து அணி, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்து, 32 வருடங்களுக்குப் பிறகு ஆசிய இளையோர் கரப்பந்தாட்டத் தொடரில் பதக்கமொன்றை வென்று அசத்தியது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<