மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள இளையோர் உலகக்கிண்ணத் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இளையோர் ஆசியக்கிண்ணத்தில் விளையாடிய இலங்கை குழாமனது, நேரடியாக நேற்றைய தினம் (02) மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>>இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி
இளையோர் ஆசிய கிண்ணத்தில் லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதி என அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த இலங்கை U19 அணி, துரதிஷ்டவசமாக அரையிறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. எவ்வாறாயினும், பலமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை குழாம், தற்போது U19 உலகக்கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் நோக்கில் புறப்பட்டுள்ளது.
துனித் வெல்லாலகேவின் தலைமையில் களமிறங்கவுள்ள இலங்கை அணி D குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு போட்டிகளும் 17ம் மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இதேவேளை, U19 உலகக்கிண்ணத்தொடரானது மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை U19 குழாம்
துனித் வெல்லாலகே (தலைவர்), ஷெவோன் டேனியல், அன்ஜல பண்டார, பவன் பதிராஜ, சதீஷ ராஜபக்ஷ, வனுஜ சஹான் குமார, ரவீன் டி சில்வா (உப தலைவர்), ரேனுத சோமரத்ன, மல்ஷ தருபதி, டிரவீன் மெதிவ், யசிரு ரொட்ரிகோ, மதீஷ பதிரண, சமிந்து விக்ரமசிங்க, வினுஜ ரன்போல், சகுன லியனகே, அபிஷேக் லியனாராச்சி, சதீஷ் ஜயவர்தன
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<