இந்திய அணியின் இமாலய ஓட்டங்களை எட்ட இலங்கை போராட்டம்

419

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி பெற்ற 613 என்ற இமாலய ஓட்டங்களை நோக்கி தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டுள்ளது.

அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று (25) தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழைந்து 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணியின் மிகப்பெரிய இணைப்பாட்டத்தை முடித்தார் வியாஸ்காந்த்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை…

இதன் மூலம் 6 விக்கெட்டுகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியாவை விடவும் 473 ஓட்டங்களால் பின்தங்கி இருக்கும் இலங்கை அணி பலோ-ஓன் (Follow on) நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. பலோ-ஓனை தவிர்க்க இலங்கை இன்னும் 323 ஓட்டங்களை எடுக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், 428 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய இளையோர் அணி மேலும் தனது ஓட்டங்களை அதிகரித்துக் கொண்டது. குறிப்பாக 177 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தை தொடங்கிய பவன் ஷாஹ் இரட்டைச் சதம் எட்டினார்.

இதன்போது பவன் ஷாஹ் 5ஆவது விக்கெட்டுக்கு நெஹால் வதேராவுடன் இணைந்து 160 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். நிதானமாக ஆடிய வதேரா 136 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்ற நிலையில் கல்கிசை, புனித தோமியர் கல்லூரியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலன பெரேராவின் பந்துக்கு போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும் மறுமுனையில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய பவன் ஷாஹ் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றார். 332 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 33 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 282 ஓட்டங்களை பெற்று முச்சதத்தை நெருங்கிய நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

குறிப்பாக கலன பெரேரா வீசிய 108 ஆவது ஓவரில் பவன் ஷாஹ் அடுத்தடுத்து 6 பௌண்டரிகளை விளாசினார். 1995 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளின்டன் பீக் ஆட்டமிழக்காது 304 ஓட்டங்களை பெற்றது மாத்திரமே இளையோர் டெஸ்ட்டில் பவன் ஷாஹ்வின் ஓட்டங்களை விடவும் அதிகமாகும்.

ஏற்கனவே இந்திய இளையோர் அணியின் அதர்வா டயிட் 177 ஓட்டங்களை பெற்று இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி 613 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க இளையோர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து பெற்ற 646 ஓட்டங்களே முதலிடத்தில் காணப்படுகிறது.

இலங்கை சார்பில் பந்துவீச்சியில் யாழ் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்றைய தினம் மூன்று ஓவர்களே பந்துவீசினார். இதன்படி அவர் மொத்தம் 21 ஓவர்கள் பந்துவீசி 94 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்போது இந்திய அணியின் நான்கு விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இது இளையோர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த புதிய சாதனையாக இருந்தது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹிர் ஜங்ரா வீசிய 4 ஆவது ஓவரில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த அணித் தலைவர் நிபுன் தனஞ்சய அடுத்த பந்துக்கே ஓட்டமேதுமின்றி வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து நுவனிது பெர்னாண்டோவும் ஜங்ராவின் பந்துக்கு 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 34 ஓட்டங்களுக்கே 3 விக்கெட்டுகளை பயிகொடுத்தது. மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த பாணந்துறை மஹானாம கல்லூரியின் ஆரம்ப வீரர் கமில் மிஷாரவும் 94 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது விக்கெட்டை பறிகொடுக்க இலங்கை இளையோர் அணி நெருக்கடியை சந்தித்தது.

இந்நிலையில் மத்திய வரிசையில் துடுப்பாட வந்த பசிந்து சூரியபண்டார மற்றும் செனால் தினுஷ ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 49 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் கொழும்பு றோயல் கல்லூரின் பசிந்து சூரியபண்டார 51 ஓட்டங்களுடனும் தினுஷ 24 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய இளையோர் அணி சார்பில் அதிரடி பந்துவீச்சை வெளிக்காட்டிய மொஹிர் ஜங்ரா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கள் 6 ஓவர்கள் பந்துவீசியபோதும் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

நான்கு நாட்கள் கொண்ட இந்த இளையோர் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

India U19

613/8 & 0/0

(0 overs)

Result

Sri Lanka U19

316/10 & 150/10

(62.2 overs)

India U19 won by an innings & 147 runs

India U19’s 1st Innings

Batting R B
Atharva Taide c N.Madushka b V.Viyaskanth 177 172
Anuj Rawat b K.Senaratne 11 38
Pawan Shah (runout) N.Madushka 282 332
Devdutt Paddikal (runout) K.Mishara 6 16
Aryan Juyal (runout) V.Viyaskanth 41 61
Nehal Wadhera b K.Perera 64 136
Ayush Badoni c N.Madushka b N.Malinga 1 2
Arjun Tendulkar (runout) K.Perera 14 18
Mohit Jangra not out 6 5
Extras
11 (lb 4, nb 7)
Total
613/8 (128.5 overs)
Fall of Wickets:
: 1-40 (A. Rawat, 11.2 ov), 2-303 (A Taide, 57.4 ov), 3-331 (D Padikkal, 65.2 ov), 4-407 (A Juyal, 80.4 ov), 5-567 (N Wadhera, 120.4 ov), 6-570 (A Badoni, 121.1 ov), 7-605 (A.Tendulkar, 127.2 ov), 8-613 (P.Shah, 128.5 ov)
Bowling O M R W E
Kalana Perera 25.2 2 135 1 5.36
Nipun Malinga 19 1 92 1 4.84
Kalhara Senaratne 39 1 177 1 4.54
Sandun Mendis 14 2 67 0 4.79
Vijayakanth Viyaskanth 21 2 94 1 4.48
Sonal Dinusha 10 0 44 0 4.40

Sri Lanka U19’s 1st Innings

Batting R B
Kamil Mishara b S.Desi 44 94
Nishan Madushka c A.Taide b M.Jangra 5 8
Nipun Dananjaya c A.Juyal b M.Jangra 0 1
Nuwanindu Fernando c A.Rawat b M.Jangra 8 10
Pasindu Sooriyabandara c A.Badoni b M.Jangra 115 236
Sonal Dinusha b A.Badoni 51 144
Sandun Mendis c A.Rawat b S.Desai 49 109
Nipun Malinga lbw by Y.Mangwani 9 17
Vijayakanth Viyaskanth c A.Taide b Y.Mangwani 3 16
Kalhara Senaratne b A.Badoni 8 13
Kalana Perera not out 11 41
Extras
13 (b 6, lb 5, nb 2)
Total
316/10 (114.3 overs)
Fall of Wickets:
1-16 (N.Madushka, 3.4 ov), 2-16 (N.Dananjaya, 3.5 ov), 3-34 (N Fernando, 7.4 ov), 4-91 (K Mishara, 28.2 ov),5-219 (S Dinusha, 79.2 ov), 6-234 (P Sooriyabandara, 83.6 ov), 7-253 (N Malinga, 88.6 ov), 8-265 (V Viyaskanth, 94.5 ov), 9-278 (K Senarathne, 99.1 ov), 10-316 (S Mendis, 114.3 ov)
Bowling O M R W E
Arjun Tendulkar 15 5 33 0 2.20
Mohit Jangra 25 5 76 4 3.04
Yatin Mangwani 18 5 30 2 1.67
Ayush Badoni 20 6 39 2 1.95
Siddarth Desai 28.3 6 84 2 2.97
Nehal Wadhera 7 0 39 0 5.57
Atharva Taide 1 0 4 0 4.00

Sri Lanka U19’s 2nd Innings

Batting R B
Kamil Mishara lbw by A.Tendulkar 5 13
Nishan Madushka c A.Rawat b A.Badoni 25 55
Nipun Dananjaya b N.Mangwani 8 14
Nuwanindu Fernando c Anuj Rawat b Siddarth Desai 28 106
Kalhara Senaratne c Aryan Juyal b Yatin Mangwani 3 19
P.Sooriyabandara c Pavan Shah b Siddarth Desai 10 29
Sonal Dinusha c Atharva Taide b Siddarth Desai 11 41
Sandun Mendis c Aryan Juyal b Mohit Jangra 26 51
Nipun Malinga c Anuj Rawat b Siddarth Desai 0 5
V. Viyaskanth c Aryan Juyal b Ayush Badoni 16 32
K.Perera not out 5 10
Extras
13 (b 4, lb 2, w 6, nb 1)
Total
150/10 (62.2 overs)
Fall of Wickets:
1-11 (K Mishara, 3.5 ov), 2-21 (N Dananjaya, 8.5 ov), 3-46 (N Madushka, 16.3 ov), 4-55 (K Senarathne, 23.3 ov), 5-76 (P Sooriyabandara, 33.4 ov), 6-99 (Nuwanidu Fernando, 43.5 ov), 7-106 (S Dinusha, 47.4 ov), 8-114 (N Malinga, 51.5 ov), 9-138 (S Mendis, 58.3 ov), 10-150 (V Viyaskanth, 62.2 ov)
Bowling O M R W E
Mohit Jangra 11 4 33 1 3.00
Arjun Tendulkar 9 0 39 1 4.33
Yatin Mangwani 9 4 9 2 1.00
Siddarth Desai 20 6 40 4 2.00
Ayush Badoni 10.2 2 17 2 1.67
A Taide 3 1 6 0 2.00

India U19’s 2nd Innings

Batting R B
Extras
Total
0/0 (0 overs)
Fall of Wickets:
Bowling O M R W E







 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க