ஹம்பாந்தோட்டையில் இன்று (30) நடைபெற்று முடிந்திருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான முக்கோண T20 தொடரில் இன்று இலங்கை இளம் மகளிர் அணி இங்கிலாந்தை 06 ஓட்டங்களால் வீழத்தியிருக்கின்றது.
புதிய வீரர்களை உள்வாங்கும் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள்
இந்த வெற்றி மூலம் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணியானது முக்கோண T20 தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றது.
முன்னர் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளம் மகளிர் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை துடுப்பாட்டத்தில் நெத்மி செனரத்ன 48 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் மனுதி நாணயக்கார 30 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து 19 வயதின் இளம் மகளிர் அணி பந்துவீச்சில் எவா லீ 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
ஆஸி. மகளிருக்கு எதிராக இலங்கை அபார வெற்றி
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 129 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து 19 வயதின் கீழ் மகளிர் அணியானது 20 ஓவர்களுக்கு 122 ஓட்டங்களை எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இங்கிலாந்து இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அபி நோர்குரோவ் 31 ஓட்டங்கள் எடுத்ததோடு, சஷினி கிம்ஹானி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<