Home Tamil இறுதிப் பந்து வெற்றியுடன் இளையோர் ஒருநாள் தொடர் முழுமையாக இலங்கை வசம்

இறுதிப் பந்து வெற்றியுடன் இளையோர் ஒருநாள் தொடர் முழுமையாக இலங்கை வசம்

309

சுற்றுலா பங்களாதேஷ் U19 கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை U19 அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், ஐந்தாவது இளையோர் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி

மேலும் இந்தப் போட்டி வெற்றியுடன் இலங்கை U19 கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரினையும் 5-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

அதன்படி, பங்களாதேஷ் U19 – இலங்கை U19 அணிகள் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று (25) தம்புள்ளை நகரில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை U19 அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்காக பெற்றுக் கொண்டார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை U19 அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது. இலங்கை U19 அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த சமிந்து விக்ரமசிங்க சதம் பூர்த்தி செய்து 123 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 102 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், அரைச்சதம் விளாசிய செவோன் டேனியல் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் U19 அணியின் பந்துவீச்சு சார்பில் முஷ்பிக் ஹஸன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ரிப்போன் மொன்டோல் மற்றும் அஹோசன் ஹபீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

>> இந்தியாவினை இலகுவாக வீழ்த்திய பாகிஸ்தான்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் U19 அணி, போட்டியின் இறுதிப் பந்து வரை வெற்றிக்காக போராடியது. எனினும், பங்களாதேஷ் U19 அணியின் முயற்சி வீணாக அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 236 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 04 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் U19 அணியின் துடுப்பாட்டம் சார்பில் மஹ்பிஜூல் இஸ்லாம் அரைச்சதம் தாண்டி 62 ஓட்டங்கள் எடுக்க, எயிக் மொல்லா 55 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இலங்கை U19 அணியின் பந்துவீச்சில் துனித் வெலால்கே மற்றும் வினுஜ ரன்போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை U19 – 240/9 (50) சமிந்து விக்ரமசிங்க 102, செவோன் டேனியல் 59, முஷ்பிக் ஹஸன் 37/3, ரிப்போன் மெண்டொல் 43/2, அஹோசன் ஹபீப் 56/2

பங்களாதேஷ் U19 – 236 (50) மஹ்பிஜூல் இஸ்லாம் 62, எயிக் மொல்லா 55, வினுஜ ரன்போல் 21/2, துனித் வெலால்கே 38/2

முடிவு – இலங்கை U19 அணி 04 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<


Result


Sri Lanka U19
240/10 (50)

Bangladesh U19
236/10 (50)

Batsmen R B 4s 6s SR
Sadeesh Jayawardena c Ariful Islam b Musfik Hasan 2 9 0 0 22.22
Chamindu Wickramasinghe b Ahosan Leon 102 123 10 3 82.93
Shevon Daniel c SM Meherob b Ahosan Leon 59 85 3 2 69.41
Pawan Pathiraja c Tahjibul Islam b Musfik Hasan 4 4 1 0 100.00
Sadisha Rajapaksa c Prantik Nawrose Nabil b Naimur Rahman 16 18 2 0 88.89
Dunith Wellalage c Mahfijul Islam b Ripon Mondol 20 25 0 1 80.00
Raveen De Silva c SM Meherob b Ripon Mondol 13 23 0 0 56.52
Vinuja Rampo c Naimur Rohman b Ripon Mondol 1 3 0 0 33.33
Wanuja Sahan c Naimur Rahman b Musfik Hasan 1 3 0 0 33.33
Sasanka Nirmal run out () 1 5 0 0 20.00
Danal Hemananda not out 2 2 0 0 100.00


Extras 19 (b 10 , lb 1 , nb 0, w 8, pen 0)
Total 240/10 (50 Overs, RR: 4.8)
Bowling O M R W Econ
Musfik Hasan 10 1 37 3 3.70
Ripon Mondol 10 0 43 2 4.30
SM Meherob 4 0 15 0 3.75
Ahosan Leon 10 0 56 2 5.60
Aich Mollah 6 0 29 0 4.83
Naimur Rohman 8 0 36 1 4.50
Ariful Islam 2 0 13 0 6.50


Batsmen R B 4s 6s SR
Mahfijul Islam c Sadisha Rajapaksa b Sasanka Nirmal 62 85 5 1 72.94
Iftikher Hossain c Sadisha Rajapaksa b Raveen De Silva 32 50 3 0 64.00
Prantik Nawrose Nabil c Sadisha Rajapaksa b Wanuja Sahan 33 43 3 0 76.74
Aich Mollah c Sadisha Rajapaksa b Vinuja Rampo 55 63 4 0 87.30
SM Meherob c Chamindu Wickramasinghe b Shevon Daniel 11 19 0 0 57.89
Ariful Islam run out () 21 32 0 0 65.62
Tahjibul Islam c Sadeesh Jayawardena b Vinuja Rampo 6 4 1 0 150.00
Ahosan Leon not out 2 2 0 0 100.00
Ripon Mondol b Dulith Wellalage 0 1 0 0 0.00
Musfik Hasan c Vinuja Rampo b Dulith Wellalage 2 2 0 0 100.00
Naimur Rahman run out () 0 1 0 0 0.00


Extras 12 (b 0 , lb 0 , nb 2, w 10, pen 0)
Total 236/10 (50 Overs, RR: 4.72)
Bowling O M R W Econ
Vinuja Rampo 5 1 21 2 4.20
Danal Hemananda 5 0 36 0 7.20
Sasanka Nirmal 7 0 33 1 4.71
Wanuja Sahan 10 0 40 1 4.00
Shevon Daniel 8 0 38 1 4.75
Dulith Wellalage 10 0 38 2 3.80
Raveen De Silva 5 0 30 1 6.00