இலங்கையில் வயதின் கீழ்ப்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக ஒழுங்கு செய்து நடைபெற்று வரும் மகளிர் முக்கோண T20 தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி அவுஸ்திரேலியாவை 07 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.
முதல் T20i போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்தின் 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகள் இங்கே முக்கோண T20 தொடரில் தற்போது ஆடி வருகின்றன.
இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் இன்று (28) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய முக்கோண T20 தொடரின் போட்டி நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீராங்கனைகள் முதலில் துடுப்பாடியதோடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்கள் குவித்தனர்.
இலங்கை 19 வயதின் கீழ் அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சஞ்சனா கவிந்தி 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகளோடு 28 ஓட்டங்கள் பெற்றார்.
ஆஸி.மகளிர் அணி பந்துவீச்சில் ஹஸ்ரட் கில் மற்றும் எலானோர் லரோசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 118 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய இளம் மகளிர் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்து போட்டியில் 07 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனன்ஜய, கமிந்து!
அவுஸ்திரேலிய மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் எலனோர் லரோசா ஆட்டமிழக்காது 41 ஓட்டங்கள் பெற்ற போதிலும் அவரின் துடுப்பாட்டம் வீணாகியது.
இலங்கை பந்துவீச்சில் தேவ்மி விஜேரத்ன 02 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தார்.
போட்டியின் சுருக்கம்
Add Scorecard in Here
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<