இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடர் போட்டியில் இலங்கை அணியினை ஆப்கானிஸ்தான் 62 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.
>>விஸ்டன் டெஸ்ட் சம்பியன்ஷிப் அணியில் இரு இலங்கை வீரர்கள்
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்குபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
அந்தவகையில் தொடரில் முன்னதாக பங்களாதேஷ் அணியுடன் வெற்றி பெற்று சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற இலங்கை இந்த முக்கோண ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை நேற்று (22) அபுதாபியின் டோலரன்ஸ் ஓவல் அரங்கில் வைத்து எதிர் கொண்டது.
பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கான் இளம் வீரர்கள் முதலில் துடுப்பாடி இருந்ததோடு, 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஆப்கான் துடுப்பாட்டம் சார்பில் மத்திய வரிசையில் துடுப்பாடிய ஹாருன் கான் வெறும் 59 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் உடன் 88 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் காலித் தனிவால் 45 ஓட்டங்களையும், ஹம்ரான் கோட்டக் 43 ஓட்டங்களையும் பெற்று தமது தரப்பினை பலப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளரான துவின்து ரணதுங்க 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தினுர கலுப்பகன 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தார்.
>>முக்கிய மாற்றங்களுடன் நியூசிலாந்து தொடருக்கான ஒருநாள், T20i குழாம்கள் அறிவிப்பு!
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 299 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் காரணமாக 40.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.
இலங்கை 19 வயதின் அணியின் துடுப்பாட்டத்தில் ஏற்கனவே பந்துவீச்சில் பிரகாசித்த துவிந்து ரணதுங்க 46 ஓட்டங்களை எடுத்த போதும் அவரது சலகதுறை ஆட்டம் கைகொடுத்திருக்கவில்லை. அதேநேரம் விஷ்வ ராஜபக்ஷவும் 45 ஓட்டங்களுடன் இலங்கை இளம் அணியின் வெற்றிக்காக போராடியிருந்தார்.
ஆப்கானிஸ்தான் இளம் அணி பந்துவீச்சில் யாமா அரப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியும், காலேல் அஹமட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். இதனால் போட்டியின் ஆட்டநாயகன் விருதும் யாமா அரப்பிற்கு வழங்கப்பட்டது.
இனி இந்த முக்கோண ஒருநாள் தொடரில் தமது அடுத்த போட்டியில் இலங்கை பங்களாதேஷை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) எதிர்கொள்ளவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Suliman Arabzai | b Vishva Lahiru | 20 | 21 | 2 | 1 | 95.24 |
Hezbullah Dorani | c Vishwa Rajapakse b Duvindu Ranathunga | 6 | 2 | 0 | 1 | 300.00 |
Sohail Khan | run out (Hirun Kapurubandara) | 34 | 61 | 1 | 1 | 55.74 |
Noman Shah | lbw b Garuka Sanketh | 26 | 41 | 4 | 0 | 63.41 |
Mohammad Haroon | c Vishva Lahiru b Dinura Kalupahana | 88 | 59 | 7 | 4 | 149.15 |
Khalid Taniwal | c Malsha Tharupathi b Dinura Kalupahana | 45 | 52 | 2 | 0 | 86.54 |
Kamran Hotak | c Vishva Lahiru b Duvindu Ranathunga | 43 | 33 | 1 | 2 | 130.30 |
Farhad Usmani | c Hiran Jayasundara b Dinura Kalupahana | 9 | 11 | 0 | 0 | 81.82 |
Khalil Ahmad | c Hiran Jayasundara b Duvindu Ranathunga | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Yama Arab | b Duvindu Ranathunga | 5 | 6 | 0 | 0 | 83.33 |
Bashir Ahmad | not out | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Extras | 18 (b 0 , lb 1 , nb 1, w 16, pen 0) |
Total | 298/10 (49.2 Overs, RR: 6.04) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Duvindu Ranathunga | 8.2 | 0 | 51 | 4 | 6.22 | |
Garuka Sanketh | 5 | 0 | 43 | 1 | 8.60 | |
Vishva Lahiru | 10 | 0 | 39 | 1 | 3.90 | |
Traveen Mathew | 10 | 0 | 37 | 0 | 3.70 | |
Malsha Tharupathi | 7 | 0 | 63 | 0 | 9.00 | |
Shevon Daniel | 2 | 0 | 12 | 0 | 6.00 | |
Dinura Kalupahana | 7 | 0 | 52 | 2 | 7.43 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hirun Kapurubandara | lbw b Yama Arab | 10 | 5 | 0 | 0 | 200.00 |
Sineth Jayawardena | c Kamran Hotak b Khalil Ahmad | 41 | 41 | 7 | 0 | 100.00 |
Dinura Kalupahana | b Yama Arab | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Shevon Daniel | c Khalid Taniwal b Yama Arab | 10 | 11 | 2 | 0 | 90.91 |
Hiran Jayasundara | b Khalil Ahmad | 8 | 16 | 0 | 0 | 50.00 |
Vishwa Rajapakse | c Farhan Zakhail b Nangyal Shafiq Ghafari | 45 | 46 | 7 | 1 | 97.83 |
Malsha Tharupathi | c Khalid Taniwal b Khalil Ahmad | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Vishva Lahiru | c Khalid Taniwal b Kamran Hotak | 6 | 12 | 0 | 0 | 50.00 |
Duvindu Ranathunga | c Farhad Usmani b Yama Arab | 46 | 50 | 5 | 1 | 92.00 |
Traveen Mathew | c Suliman Arabzai b Kamran Hotak | 34 | 57 | 3 | 0 | 59.65 |
Garuka Sanketh | not out | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Extras | 34 (b 0 , lb 3 , nb 5, w 26, pen 0) |
Total | 236/10 (41 Overs, RR: 5.76) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Yama Arab | 8 | 0 | 35 | 4 | 4.38 | |
Bashir Ahmad | 7 | 0 | 55 | 1 | 7.86 | |
Khalil Ahmad | 9 | 0 | 55 | 3 | 6.11 | |
Farhad Usmani | 8 | 0 | 44 | 0 | 5.50 | |
Kamran Hotak | 8 | 0 | 29 | 2 | 3.62 | |
Khalid Taniwal | 1 | 0 | 9 | 0 | 9.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<