Home Tamil ஆப்கானிடம் ஒருநாள் தொடரினை பறிகொடுத்த இலங்கை இளம் அணி

ஆப்கானிடம் ஒருநாள் தொடரினை பறிகொடுத்த இலங்கை இளம் அணி

202

சுற்றுலா இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியினை ஆப்கான் வீரர்கள் 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இரு போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.

தொடர் விக்கெட்டுக்களால் இலங்கை இளம் கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது அங்கே இடம்பெற்ற முக்கோண இளையோர் ஒருநாள் தொடரினை அடுத்து, ஆப்கான் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.  இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க, தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி நேற்று (01) அபுதாபி டோலரன்ஸ் அரங்கில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க அவர்களால் 36.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் விஹாஸ் தேவ்மிக்க அதிகபட்சமாக 33 ஓட்டங்களை எடுக்க, ஆப்கான் அணியின் பந்துவீச்சில் கம்ரான் ஹோட்டக் மற்றும் பரிதூன் தாவூத்சாய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 162 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி நோமான் சாஹ்வின் அபார அரைச்சதத்தோடு போட்டியின் வெற்றி இலக்கை 32.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த நோமான் சாஹ் 67 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்து தனது தரப்பின் வெற்றிக்கு உதவியதோடு அலி அஹ்மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பினை வழங்கினார்.

இலகுவான வெற்றிகளுடன் IPL தொடரை ஆரம்பித்த பெங்களூர், ராஜஸ்தான்!

இலங்கை இளம் அணியின் பந்துவீச்சில் தீரக ரணதுங்க மற்றும் விஷ்வ லஹிரு ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஆப்கான் அணியின் நோமான் சாஹ் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, ஆப்கான் அணியுடனான ஒருநாள் தொடரினை இழந்திருக்கும் இலங்கை இளம் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் பயணத்தில் முன்னர் நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரிலும் சிறந்த பெறுபேறுகளை காட்டாது ஏமாற்றத்துடன் நாடு திரும்புகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Afghanistan U19
162/4 (32.3)

Sri Lanka U19
161/10 (36.5)

Batsmen R B 4s 6s SR
Sineth Jayawardena c Ali Ahmad b Kahlel Ahmad 14 24 2 0 58.33
Vishen Halambage lbw b Faridoon Dawoodzai 0 1 0 0 0.00
Shevon Daniel c Mohammad Haroon b Faridoon Dawoodzai 6 13 0 0 46.15
Dinura Kalupahana lbw b Faridoon Dawoodzai 0 2 0 0 0.00
Hiran Jayasundara c Hezbullah Dorani b Yama Arab 21 42 2 0 50.00
Chamath Gomez c Ali Ahmad b Mohammad Haroon 16 25 1 1 64.00
Malsha Tharupathi c Mohammad Haroon b Kamran Hotak 9 7 2 0 128.57
Theeraka Ranatunga c Mohammad Haroon b Kamran Hotak 1 6 0 0 16.67
Vihas Thewmika lbw b Kamran Hotak 33 52 3 0 63.46
Duvindu Ranathunga c Kahlel Ahmad b Yama Arab 28 35 4 0 80.00
Vishva Lahiru not out 13 15 2 0 86.67


Extras 20 (b 0 , lb 2 , nb 1, w 17, pen 0)
Total 161/10 (36.5 Overs, RR: 4.37)
Bowling O M R W Econ
Kahlel Ahmad 8 1 35 1 4.38
Faridoon Dawoodzai 7 1 30 3 4.29
Yama Arab 9 1 36 2 4.00
Kamran Hotak 8.5 0 26 3 3.06
Mohammad Haroon 2 0 17 1 8.50
Khalid Taniwal 2 0 15 0 7.50


Batsmen R B 4s 6s SR
Wafiullah Tarakhil c & b Vishva Lahiru 1 7 0 0 14.29
Jamshid Zadran c Malsha Tharupathi b Theeraka Ranatunga 22 42 3 0 52.38
Hezbullah Dorani c Vishva Lahiru b Vihas Thewmika 19 26 0 2 73.08
Numan Shah Agha not out 72 67 6 2 107.46
Mohammad Haroon b Dinura Kalupahana 18 31 1 0 58.06
Ali Ahmad not out 25 24 2 1 104.17


Extras 5 (b 0 , lb 0 , nb 2, w 3, pen 0)
Total 162/4 (32.3 Overs, RR: 4.98)
Bowling O M R W Econ
Duvindu Ranathunga 3 1 9 0 3.00
Vishva Lahiru 8 2 19 1 2.38
Vihas Thewmika 5 0 31 1 6.20
Malsha Tharupathi 7 0 52 0 7.43
Theeraka Ranatunga 3 0 14 1 4.67
Dinura Kalupahana 5 0 27 1 5.40
Chamath Gomez 1 0 7 0 7.00
Shevon Daniel 0.3 0 3 0 10.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<