விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முக்கோண ஒருநாள் தொடரின் போட்டியில் இலங்கை அணியினை ஆப்கானிஸ்தான் 04 ஓட்டங்களால் வீழ்த்தி திரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> பங்களாதேஷுக்கு ‘உளவியல் பாதுகாப்பு’ வழங்கும் ஹத்துருசிங்க
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்குபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
அந்தவகையில் தொடரில் முன்னதாக பங்களாதேஷ், ஆப்கான் அணிகளுடன் தோல்வியினைத் தழுவிய இலங்கை வீரர்கள், தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பிற்காக கட்டாய வெற்றியை எதிர்பார்த்து ஆப்கான் அணியுடன் செவ்வாய்க்கிழமை (28) மீண்டும் விளையாடியிருந்தனர்.
அபுதாபியின் டோலரன்ஸ் அரங்கில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கான் அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 323 ஓட்டங்களை எடுத்தது.
ஆப்கான் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் நூமான் சாஹ் சதம் விளாசி 109 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 14 பெளண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை, அரைச்சதம் விளாசிய ஹாருன் கான் 41 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரி அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுக்க, சொஹில் கான் 52 ஓட்டங்கள் பெற்றார்.
இதேவேளை, இலங்கை இளம் அணியின் பந்துவீச்சில் தினுர கலுப்பகன, விஷ்வ லஹிரு மற்றும் விஷ்வ ராஜபக்ஷ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 324 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி பாஷிர் அஹமட்டின் வேகத்தில் ஆரம்பத்தில் தடுமாறிய போதும் அணித்தலைவர் செவோன் டேனியல் பெற்றுக் கொடுத்த அதிரடி சதத்தினால் சரிவில் இருந்து மீண்டு கொண்டது.
அதன்படி போட்டியில் முன்னேறிய இலங்கை இளம் அணி வெற்றி இலக்கை நெருங்கியதோடு, போட்டியின் இறுதி ஓவருக்கு 2 விக்கெட்டுக்கள் மீதமிருக்க, 06 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் போட்டியின் இறுதி ஓவரினை வீசிய இடதுகை சுழல் வீரரான கம்ரான் கோட்டக், இலங்கை அணியின் எஞ்சிய இரண்டு விக்கெட்டுக்களையும் இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் சரித்தார். இதனால் இலங்கை அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 319 ஓட்டங்களுடன் போட்டியில் 04 ஓட்டங்களால் அதிர்ச்சி தோல்வியினைத் தழுவியது.
இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் சதம் விளாசி போராடிய செவோன் டேனியல் 115 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 140 ஓட்டங்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் தினுர கலுப்பகன 47 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் இளம் அணி பந்துவீச்சில் பஷிர் அஹமட் 54 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும், கம்ரான் ஹோட்டக் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
இந்த முக்கோண ஒருநாள் தொடரில் இப்போட்டியுடன் சேர்த்து மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த இலங்கை இளம் கிரிக்கெட் அணி, தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பினை இழக்க, இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) மோதுகின்றன.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hezbullah Dorani | c Shevon Daniel b Dinura Kalupahana | 39 | 41 | 3 | 2 | 95.12 |
Suliman Arabzai | lbw b Vishva Lahiru | 12 | 7 | 1 | 1 | 171.43 |
Noman Shah | c Shevon Daniel b Vishwa Rajapakse | 116 | 109 | 13 | 3 | 106.42 |
Sohail Khan | c Duvindu Ranathunga b Vishva Lahiru | 52 | 71 | 4 | 0 | 73.24 |
Mohammad Haroon | c Vishen Halambage b Duvindu Ranatunga | 56 | 41 | 5 | 1 | 136.59 |
Kamran Hotak | c Traveen Mathew b Dinura Kalupahana | 13 | 19 | 0 | 0 | 68.42 |
Nasir Hassan | not out | 14 | 7 | 1 | 1 | 200.00 |
Farhad Usmani | b Vishwa Rajapakse | 7 | 5 | 1 | 0 | 140.00 |
Khalid Taniwal | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Extras | 12 (b 0 , lb 3 , nb 2, w 7, pen 0) |
Total | 323/7 (50 Overs, RR: 6.46) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Duvindu Ranathunga | 9 | 0 | 67 | 1 | 7.44 | |
Dinura Kalupahana | 9 | 0 | 76 | 2 | 8.44 | |
Vishva Lahiru | 10 | 0 | 41 | 2 | 4.10 | |
Malsha Tharupathi | 5 | 0 | 38 | 0 | 7.60 | |
Vishwa Rajapakse | 10 | 0 | 56 | 2 | 5.60 | |
Traveen Mathew | 7 | 0 | 42 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sineth Jayawardena | lbw b Bashir Ahmad | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Hirun Kapurubandara | c Sohail Khan b Bashir Ahmad | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Shevon Daniel | c Noman Shah b Bashir Ahmad | 140 | 115 | 10 | 6 | 121.74 |
Vishen Halambage | c Hezbullah Dorani b Bashir Ahmad | 14 | 19 | 2 | 0 | 73.68 |
Dinura Kalupahana | c Bashir Ahmad b Nasir Hassan | 47 | 67 | 2 | 2 | 70.15 |
Hiran Jayasundara | c Hezbullah Dorani b Bashir Ahmad | 17 | 31 | 1 | 0 | 54.84 |
Malsha Tharupathi | c Hezbullah Dorani b Bashir Ahmad | 18 | 15 | 1 | 1 | 120.00 |
Vishwa Rajapakse | c Farhad Usmani b Bashir Ahmad | 26 | 26 | 1 | 1 | 100.00 |
Duvindu Ranatunga | b Kamran Hotak | 27 | 19 | 0 | 1 | 142.11 |
Traveen Mathew | lbw b Kamran Hotak | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Vishva Lahiru | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 26 (b 1 , lb 6 , nb 6, w 13, pen 0) |
Total | 319/10 (49.3 Overs, RR: 6.44) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bashir Ahmad | 10 | 0 | 54 | 7 | 5.40 | |
Khalil Ahmad | 10 | 0 | 71 | 0 | 7.10 | |
Nasir Hassan | 8 | 0 | 75 | 1 | 9.38 | |
Farhad Usmani | 10 | 0 | 58 | 0 | 5.80 | |
Kamran Hotak | 8.3 | 0 | 37 | 2 | 4.46 | |
Khalid Taniwal | 3 | 0 | 17 | 0 | 5.67 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<