இன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரினை இழந்த இலங்கை இளம் கிரிக்கெட் அணி

Sri Lanka U19 tour of England 2024

1
Sri Lanka U19 tour of England 2024

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியுள்ளது.

மறுமுனையில் இந்தப் போட்டியின் வெற்றியோடு இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரினை 1-0 என கைப்பற்றியிருக்கின்றது.

>>இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை இளம் அணி

இலங்கை – இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (16) தொடக்கம் செல்டன்ஹேமில் நடைபெற்று வருகின்றது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (18) நிறைவுக்கு வரும் போது இலங்கையின் முதல் இன்னிங்ஸை (153)  தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியானது 477 ஓட்டங்கள் பெற்றது. அதன் பின்னர் இங்கிலாந்தினை விட 324 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் 74 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தனர்.

இலங்கை அணிக்கு போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளில் 3 விக்கெட்டுக்கள் மாத்திரம் மீதமிருக்க இன்னிங்ஸ் தோல்வியினைத் தவிர்க்க 78 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. அதன்படி போட்டியின் நான்காம் நாளில் இன்று தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை வீரர்கள் தொடக்கத்திலேயே 85.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களுடன் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவினர்.

இலங்கை துடுப்பாட்டத்தில் ஒரேயொரு அரைச்சதம் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் அதனை மாஹித் பெரேரா 68 ஓட்டங்களுடன் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சுழல்வீரரான பர்ஹான் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, ஹர்ரி மூரே மற்றும் சார்லி பார்னட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

 

இலங்கை U19 (முதல் இன்னிங்ஸ்) – 153 (45.2) கயான வீரசிங்க 77, நாவ்யா சர்மா 44/5

 

இங்கிலாந்து U19 (முதல் இன்னிங்ஸ்) – 477 (138.1) ஹம்சா ஷேய்க் 107, ரொக்கி பிளின்டோப் 106

 

இலங்கை U19 (இரண்டாம் இன்னிங்ஸ்) – 277 (85.4) மாஹித் பெரேரா 61, பர்ஹான் அஹ்மட் 59/4

 

முடிவு இங்கிலாந்து U19 அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<