துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை இளம் கிரிக்கெட் அணி

134

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில், இலங்கை இளம் வீரர்கள் துடுப்பாட்டத்தில் தடுமாறியிருக்கின்றனர். 

ஐசிசி இன் வருடாந்த மாநாடு அடுத்த வாரம் இலங்கையில்

சுற்றுலா இலங்கைஇங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்த பின்னர் இரண்டாவது போட்டி நேற்று (16) செல்டன்ஹேமில் ஆரம்மபாகியது 

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்று இலங்கை வீரர்களை இங்கிலாந்து துடுப்பாடப் பணித்தது. அதன்படி போட்டியில் முதலில் ஆடிய இலங்கை வீரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர் 

இலங்கை இளம் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கயான வீரசிங்க 77 ஓட்டங்கள் எடுத்ததோடு, இங்கிலாந்து பந்துவீச்சில் நாவ்யா சர்மா 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு ஹர்ரி மூரே, சார்லி பார்னாட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் சுருக்கம் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<