சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை 19 வயதின் கீழ் அணியானது அங்கே நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரினை அடுத்து தற்போது இரு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கின்றது.
>>தலைவர் பதவியினை இராஜினமா செய்த வனிந்து ஹஸரங்க<<
அதன்படி இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி திங்கட்கிழமை (09) வோர்ம்ஸ்லி நகரில் ஆரம்பமாகியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் மோதல் நேற்று (12) நிறைவுக்கு வர, இலங்கையின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இங்கிலாந்து தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பித்து 193 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து அணியின் வீரர்களில் கேசன பொன்சேக்கா 72 ஓட்டங்களுடனும் ரொக்கி பிளின்டோப் 8 ஓட்டங்களுடனும் காணப்பட்டனர்.
நேற்று (12) போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தினைத் தொடர்ந்த இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறி 72.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 247 ஓட்டங்களை மாத்திரமே இரண்டாம் இன்னிங்ஸில் பெற்றனர். இங்கிலாந்து தரப்பில் பிரட்டி மெக்கேன் 92 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றிருக்க, கேசன பொன்சேக்கா 82 ஓட்டங்கள் எடுத்தார்.
>>இலங்கை இளம் அணிக்கு சதம் மூலம் கைகொடுத்த தினுர கலுப்பான<<
இலங்கை இளம் அணியின் பந்துவீச்சில் மணிக்கட்டு சுழல்வீரரான பிரவீன் மனீஷ 56 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் இங்கிலாந்தினை விட 77 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை இளம் அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 56 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தில் அசத்தலாக செயற்பட்ட சாருஜன் சண்முகநாதன் 73 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இங்கிலாந்து இளம் அணியின் பந்துவீச்சில் ஜெய்டன் டென்லி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 (முதல் இன்னிங்ஸ்) – 324 (85.4) தினுர கலுப்பான 104, நதன் கல்டேரா 55, AM. பிரன்ச் 81/4
இங்கிலாந்து U19 (முதல் இன்னிங்ஸ்) –
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<