சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்ட இளையோர் ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>> இளையோர் ஒருநாள் தொடரினை இழந்த இலங்கை
மேலும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரினையும் இங்கிலாந்து இளையோர் அணி 3-0 எனக் கைப்பற்றி, இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கையை வைட்வொஷ் செய்துள்ளது.
இரு அணிகளும் மோதிய இளையோர் ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி லெய்கெஸ்டர் அரங்கில் நேற்று (11) ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் இலங்கை இளம் வீரர்களை துடுப்பாடப் பணித்தது.
இளையோர் ஒருநாள் தொடரினை ஏற்கனவே 2-0 என இழந்த இலங்கை வீரர்கள் ஆறுதல் வெற்றி எதிர்பார்ப்புடன் முதல் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 252 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஞ்சல பண்டார ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற, ரணுத சோமரட்னவும் ஒரு சிக்ஸர் 4 பெளண்டரிகள் உடன் 76 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் மிச்செல் கிளீன், தோமஸ் அஸ்பின்வோல் மற்றும் ஜமால் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 253 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து இளையோர் அணி 44.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை அடைந்தது.
>> “ஆசியக்கிண்ணத்தை வென்று புதிய பயணத்தை தொடருவோம்” – பியால் விஜேதுங்க
இங்கிலாந்து இளையோர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றி இலக்கை உறுதி செய்ய காரணமாக அமைந்த ஜகோப் பெத்தல் 42 ஓட்டங்கள் எடுக்க, தோமஸ் அஸ்பின்வோல் 30 ஓட்டங்களுடன் நின்று தனது தரப்பின் வெற்றியை உறுதி செய்தார்.
இலங்கை பந்துவீச்சில் மல்ஷ தருபதி 3 விக்கெட்டுக்களையும், வனுஜ சஹான் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அவர்கள் இருவரது பந்துவீச்சும் வீணாகியது.
இப்போட்டியின் தோல்வியினை அடுத்து இளையோர் ஒருநாள் தொடரில் ஏமாற்றமடைந்த இலங்கை அணி, இளையோர் டெஸ்ட் தொடர் வெற்றியுடன் நாடு திரும்புகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadisha Rajapaksa | c Jacob Bethell b Thomas Aspinwall | 8 | 11 | 1 | 0 | 72.73 |
Asitha Wanninayake | run out (Jacob Bethell) | 17 | 30 | 1 | 0 | 56.67 |
Shevon Daniel | c George Thomas b Mitchell Killeen | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Ranuda Somarathne | c Alex Horton b Jamal Richards | 76 | 93 | 4 | 1 | 81.72 |
Raveen de Silva | c Alex Horton b Jamal Richards | 17 | 36 | 2 | 0 | 47.22 |
Anjala Bandara | not out | 76 | 82 | 4 | 1 | 92.68 |
Wanuja Sahan | b Mitchell Killeen | 37 | 39 | 4 | 0 | 94.87 |
Malsha Tharupathi | run out (Mitchell Killeen) | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Gunaratnam Caniston | c Alex Horton b Thomas Aspinwall | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Treveen Mathews | run out (Alex Horton) | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Dulaj Samuditha | run out (Jamal Richards) | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 13 (b 1 , lb 1 , nb 2, w 9, pen 0) |
Total | 252/10 (50 Overs, RR: 5.04) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Killeen | 9 | 1 | 56 | 2 | 6.22 | |
Thomas Aspinwall | 10 | 0 | 38 | 2 | 3.80 | |
Fateh Singh | 10 | 0 | 52 | 0 | 5.20 | |
Jamal Richards | 9 | 0 | 42 | 2 | 4.67 | |
Jacob Bethell | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Bertie Foreman | 5 | 0 | 25 | 0 | 5.00 | |
Danial Ibrahim | 4 | 0 | 21 | 0 | 5.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
George Thomas | c Anjala Bandara b Treveen Mathews | 29 | 27 | 5 | 1 | 107.41 |
Jacob Bethell | c Anjala Bandara b Dulaj Samuditha | 42 | 43 | 5 | 0 | 97.67 |
Alex Horton | lbw b Wanuja Sahan | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Ben McKinney | st Anjala Bandara b Malsha Tharupathi | 27 | 37 | 2 | 0 | 72.97 |
Danial Ibrahim | lbw b Malsha Tharupathi | 17 | 22 | 1 | 0 | 77.27 |
Joseph Eckland | lbw b Raveen de Silva | 19 | 18 | 1 | 0 | 105.56 |
Jamal Richards | c Malsha Tharupathi b Anjala Bandara | 28 | 24 | 3 | 1 | 116.67 |
Thomas Aspinwall | not out | 30 | 45 | 3 | 0 | 66.67 |
Bertie Foreman | c Shevon Daniel b Wanuja Sahan | 30 | 49 | 3 | 0 | 61.22 |
Fateh Singh | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 31 (b 4 , lb 3 , nb 2, w 22, pen 0) |
Total | 253/8 (44.4 Overs, RR: 5.66) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Gunaratnam Caniston | 3 | 0 | 21 | 0 | 7.00 | |
Dulaj Samuditha | 7 | 0 | 48 | 1 | 6.86 | |
Wanuja Sahan | 9.4 | 0 | 42 | 2 | 4.47 | |
Treveen Mathews | 10 | 0 | 40 | 1 | 4.00 | |
Sadisha Rajapaksa | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Malsha Tharupathi | 6 | 0 | 45 | 3 | 7.50 | |
Raveen de Silva | 5 | 1 | 25 | 1 | 5.00 |
முடிவு – இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<