சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற இளையோர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து டக்வெத் லூயிஸ் முறையில் 7 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> இறுதிப் போட்டி ஒத்திகையில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள்
மேலும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரினை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இங்கிலாந்து 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
மழையின் குறுக்கீடு காணப்பட்ட இலங்கை – இங்கிலாந்து இளையோர் அணிகள் இடையிலான போட்டி வோகேஸ்டர் அரங்கில் நேற்று (08) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து இளம் அணி இலங்கை வீரர்களை முதலில் துடுப்பாடப் பணித்திருந்தது.
மழையினால் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 35 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை இளம் கிரிக்கெட் அணி 35 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை இளம் கிரிக்கெட் அணி துடுப்பாட்டத்தில் ரணுத சோமரட்ன அரைச்சதத்துடன் 80 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் 81 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அரைச்சதம் விளாசிய ஏனைய வீரரான ஹாசித சமரசிங்க 7 பௌண்டரிகள் உடன் 71 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி பந்துவீச்சில் தோமஸ் அஸ்பின்வோல் 2 விக்கெட்டுக்களையும் மிச்சல் கிளீன், ஜமால் ரிச்சர்ட்ஸ், ஜேக்கப் பெட்டல் மற்றும் டொமினிக் கெல்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து இளையோர் கிரிக்கெட் அணி 31.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மழையின் காரணமாக போட்டி மீண்டும் இடைநிறுத்தப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில் டக்வெத் லூயிஸ் முறையில் இங்கிலாந்து 196 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தால் அது வெற்றிக்கு போதுமானது என அறிவிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி 7 ஓட்டங்களால் போட்டியில் வெற்றியினைப் பதிவு செய்தது.
>> T20 உலகக்கிண்ண பயிற்சிப்போட்டிகளின் அட்டவணை வெளியானது
இங்கிலாந்தின் துடுப்பாட்டம் சார்பில் ஜோர்ஜ் தோமஸ் 82 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் பெற, ஜோசப் எக்லான்ட் 45 பந்துகளுக்கு 48 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
>> த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் பாகிஸ்தான் அணி
இலங்கை பந்துவீச்சு சார்பில் ட்ரவின் மெதிவ், கனிஷ்டன் குணரட்னம், வனுஜ சஹான், மல்ஷ தருபதி மற்றும் செவோன் டேனியல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.
இப்போட்டியின் தோல்வியோடு இளையோர் ஒருநாள் தொடரினை இழந்திருக்கும் இலங்கை இளம் கிரிக்கெட் அணி, தொடரின் இறுதிப் போட்டியில் நாளை (09) விளையாடவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasitha Amarasinghe | c Alex Horton b Dominic Kelly | 71 | 81 | 7 | 0 | 87.65 |
Abisheak Liyanaarachchi | c Alex Horton b Thomas Aspinwall | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Shevon Daniel | c Alex Horton b Mitchell Killeen | 6 | 6 | 1 | 0 | 100.00 |
Ranuda Somarathne | b Jacob Bethell | 81 | 80 | 5 | 1 | 101.25 |
Raveen de Silva | b Jacob Bethell | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Anjala Bandara | not out | 31 | 23 | 4 | 0 | 134.78 |
Malsha Tharupathi | c Alex Horton b Thomas Aspinwall | 6 | 2 | 0 | 1 | 300.00 |
Wanuja Sahan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 11 (b 1 , lb 6 , nb 0, w 4, pen 0) |
Total | 211/6 (35 Overs, RR: 6.03) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Killeen | 6 | 1 | 18 | 1 | 3.00 | |
Thomas Aspinwall | 7 | 0 | 44 | 2 | 6.29 | |
Fateh Singh | 5 | 0 | 32 | 0 | 6.40 | |
Jamal Richards | 7 | 0 | 45 | 1 | 6.43 | |
Jacob Bethell | 6 | 0 | 32 | 1 | 5.33 | |
Dominic Kelly | 4 | 0 | 33 | 1 | 8.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
George Thomas | c Ranuda Somarathne b Shevon Daniel | 86 | 82 | 5 | 4 | 104.88 |
Jacob Bethell | lbw b Treveen Mathews | 28 | 14 | 3 | 2 | 200.00 |
Alex Horton | c Raveen de Silva b Gunaratnam Caniston | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Ross Whitfield | c Raveen de Silva b Malsha Tharupathi | 15 | 14 | 2 | 0 | 107.14 |
Danial Ibrahim | c Anjala Bandara b Wanuja Sahan | 16 | 25 | 0 | 0 | 64.00 |
Joseph Eckland | not out | 48 | 45 | 6 | 0 | 106.67 |
Jamal Richards | run out (Hasitha Amarasinghe) | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 1 , lb 2 , nb 0, w 3, pen 0) |
Total | 202/6 (31.3 Overs, RR: 6.41) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Treveen Mathews | 7 | 0 | 47 | 1 | 6.71 | |
Gunaratnam Caniston | 6.3 | 0 | 35 | 1 | 5.56 | |
Duvindu Ranatunga | 1 | 0 | 21 | 0 | 21.00 | |
Wanuja Sahan | 7 | 0 | 30 | 1 | 4.29 | |
Malsha Tharupathi | 7 | 0 | 43 | 1 | 6.14 | |
Raveen de Silva | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Shevon Daniel | 1 | 0 | 10 | 1 | 10.00 |
முடிவு – இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<