ரணுத சோமரட்னவின் அபார சதத்தின் உதவியோடு, இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி (U19) இங்கிலாந்துக்கு எதிரான முதல் இளையோர் டெஸ்ட் போட்டியில் 03 விக்கெட்டுக்களால் அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
சவாலான முன்னிலையுடன் இங்கிலாந்து இளம் அணி
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை U19 கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடர், மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தெடர் என்பவற்றில் ஆடுகின்றது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதுகின்ற இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செல்ம்ஸ்போர்ட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பித்திருந்தது.
தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஆடி வந்த இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி 199 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்ஜ் பெல் 28 ஓட்டங்களையும், மெதிவ் ஹேர்ஸ்ட் ஓட்டம் எதுவுமின்றியும் காணப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து நேற்று (24) இலங்கையை விட 179 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி 75.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 292 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது.
இங்கிலாந்து இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மெதிவ் ஹேர்ஸ்ட் 39 ஓட்டங்களை எடுத்திருந்ததோடு, இலங்கை பந்துவீச்சு சார்பில் வனுஜ சஹான் 4 விக்கெட்டுக்களையும், துவின்து ரணதுங்க 3 விக்கெட்டுக்களையும், ரவீன் டி சில்வா ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தனர்.
இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 273 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை U19 கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
அதன்ப ஆரம்பத்தில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை வீரர்கள் பின்னர் 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கிற்கான தமது பயணத்தில் மோசமான நிலையினை அடைந்தனர். எனினும் இந்த சந்தர்ப்பத்தில் போராட்டமான ரணுத சோமரட்ன, லஹிரு தவட்டகே உடன் இணைந்து வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து ரணுத சோமரட்ன சதம் விளாச இலங்கை இளம் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 57.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களுடன் அடைந்தது.
அபு தாபி T10 தொடரில் விளையாடவுள்ள மதீஷ பதிரண
இலங்கை U19 கிரிக்கெட் அணி துடுப்பாட்டம் சார்பில் ரணுத சோமரட்ன 115 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 12 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில் லஹிரு தவட்டகே தனது தரப்பு வெற்றிக்காக 49 ஓட்டங்கள் பெற்று தன்னுடைய பங்களிப்பினையும் வழங்கியிருந்தார்.
இங்கிலாந்து U19 அணியின் பந்துவீச்சு சார்பில் தோமஸ் அஸ்பின்வோல் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, டோமினிக் கெல்லி 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி வெற்றியோடு இலங்கை இளம் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க, இரண்டாவது இளையோர் டெஸ்ட் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | c Lahiru Dewatage b Duvindu Ranatunga | 27 | 46 | 2 | 0 | 58.70 |
Ben McKinney | c Vinuja Ranpul b Dulaj Samuditha | 33 | 34 | 6 | 0 | 97.06 |
Ross Whitfield | c Wanuja Sahan b Vinuja Ranpul | 86 | 106 | 8 | 1 | 81.13 |
George Bell | c Dulaj Samuditha b Vinuja Ranpul | 107 | 96 | 16 | 0 | 111.46 |
Matthew Hurst | c Duvindu Ranatunga b Vinuja Ranpul | 8 | 18 | 1 | 0 | 44.44 |
Alex Horton | c & b Wanuja Sahan | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Dominic Kelly | st Lahiru Dewatage b Raveen de Silva | 14 | 42 | 1 | 0 | 33.33 |
George Thomas | c Vinuja Ranpul b Dulaj Samuditha | 19 | 24 | 2 | 0 | 79.17 |
Bertie Foreman | not out | 58 | 56 | 4 | 2 | 103.57 |
Eddie Jack | c Lahiru Dewatage b Shevon Daniel | 8 | 23 | 1 | 0 | 34.78 |
Benjamin Cliff | c Pawan Pathiraja b Wanuja Sahan | 18 | 21 | 3 | 0 | 85.71 |
Extras | 9 (b 4 , lb 4 , nb 0, w 1, pen 0) |
Total | 387/10 (78.3 Overs, RR: 4.93) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dulaj Samuditha | 17 | 1 | 105 | 2 | 6.18 | |
Vinuja Ranpul | 10 | 0 | 62 | 0 | 6.20 | |
Wanuja Sahan | 18.3 | 5 | 56 | 2 | 3.06 | |
Duvindu Ranatunga | 17 | 1 | 100 | 4 | 5.88 | |
Raveen De Silva | 9 | 1 | 31 | 1 | 3.44 | |
Sadisha Rajapaksa | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
Shevon Daniel | 6 | 0 | 19 | 1 | 3.17 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadisha Rajapaksa | c Alex Horton b Benjamin Cliff | 11 | 24 | 2 | 0 | 45.83 |
Asitha Wanninayake | b Thomas Aspinwall | 132 | 315 | 19 | 0 | 41.90 |
Shevon Daniel | lbw b Benjamin Cliff | 22 | 33 | 3 | 0 | 66.67 |
Pawan Pathiraja | lbw b Bertie Foreman | 32 | 95 | 5 | 0 | 33.68 |
Ranuda Somarathne | c Bertie Foreman b Eddie Jack | 65 | 114 | 6 | 0 | 57.02 |
Raveen de Silva | b Eddie Jack | 62 | 135 | 7 | 0 | 45.93 |
Lahiru Dewatage | lbw b Thomas Aspinwall | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Vinuja Ranpul | c Thomas Aspinwall b Bertie Foreman | 42 | 85 | 4 | 2 | 49.41 |
Wanuja Sahan | b Bertie Foreman | 13 | 29 | 2 | 0 | 44.83 |
Duvindu Ranatunga | lbw b Bertie Foreman | 1 | 13 | 0 | 0 | 7.69 |
Dulaj Samuditha | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 27 (b 11 , lb 9 , nb 1, w 6, pen 0) |
Total | 407/10 (141.1 Overs, RR: 2.88) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Benjamin Cliff | 28 | 5 | 68 | 2 | 2.43 | |
Thomas Aspinwall | 31 | 8 | 98 | 2 | 3.16 | |
Dominic Kelly | 23 | 6 | 65 | 0 | 2.83 | |
Eddie Jack | 23 | 6 | 62 | 2 | 2.70 | |
Bertie Foreman | 36.1 | 11 | 94 | 4 | 2.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | lbw b Wanuja Sahan | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Ben McKinney | c Lahiru Dewatage b Wanuja Sahan | 56 | 99 | 3 | 0 | 56.57 |
Ross Whitfield | b Vinuja Ranpul | 110 | 134 | 12 | 1 | 82.09 |
George Bell | c Duvindu Ranatunga b Wanuja Sahan | 29 | 27 | 3 | 1 | 107.41 |
Matthew Hurst | b Duvindu Ranatunga | 39 | 105 | 0 | 1 | 37.14 |
Alex Horton | c Wanuja Sahan b Raveen De Silva | 14 | 18 | 2 | 0 | 77.78 |
Dominic Kelly | b Wanuja Sahan | 3 | 11 | 0 | 0 | 27.27 |
Thomas Aspinwall | c Shevon Daniel b Raveen De Silva | 13 | 22 | 2 | 0 | 59.09 |
Bertie Foreman | c Vinuja Ranpul b Duvindu Ranatunga | 12 | 14 | 2 | 0 | 85.71 |
Eddie Jack | c Vinuja Ranpul b Duvindu Ranatunga | 7 | 16 | 1 | 0 | 43.75 |
Benjamin Cliff | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 0 , lb 5 , nb 0, w 1, pen 0) |
Total | 292/10 (75.5 Overs, RR: 3.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dulaj Samuditha | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Wanuja Sahan | 27 | 2 | 89 | 4 | 3.30 | |
Sadisha Rajapaksa | 6 | 1 | 15 | 0 | 2.50 | |
Vinuja Ranpul | 11 | 1 | 45 | 1 | 4.09 | |
Duvindu Ranatunga | 7.5 | 0 | 34 | 3 | 4.53 | |
Asitha Wanninayake | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Raveen De Silva | 16 | 0 | 70 | 2 | 4.38 | |
Shevon Daniel | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadisha Rajapaksa | b Thomas Aspinwall | 4 | 9 | 1 | 0 | 44.44 |
Asitha Wanninayake | c Ben McKinney b Dominic Kelly | 22 | 51 | 3 | 0 | 43.14 |
Shevon Daniel | b Thomas Aspinwall | 6 | 13 | 1 | 0 | 46.15 |
Pawan Pathiraja | lbw b Thomas Aspinwall | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Ranuda Somarathne | not out | 120 | 115 | 12 | 1 | 104.35 |
Raveen De Silva | lbw b Ben McKinney | 22 | 38 | 3 | 0 | 57.89 |
Lahiru Dewatage | lbw b Dominic Kelly | 49 | 49 | 8 | 0 | 100.00 |
Vinuja Ranpul | c Harry Singh b Thomas Aspinwall | 18 | 31 | 1 | 0 | 58.06 |
Wanuja Sahan | not out | 23 | 23 | 1 | 0 | 100.00 |
Extras | 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0) |
Total | 276/7 (57.1 Overs, RR: 4.83) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Benjamin Cliff | 10.1 | 0 | 43 | 0 | 4.26 | |
Thomas Aspinwall | 16 | 3 | 67 | 4 | 4.19 | |
Dominic Kelly | 11 | 1 | 52 | 2 | 4.73 | |
Eddie Jack | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Bertie Foreman | 13 | 0 | 74 | 0 | 5.69 | |
Ben McKinney | 3 | 0 | 21 | 1 | 7.00 |
முடிவு – இலங்கை U19 கிரிக்கெட் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<