சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு எதிராக சவாலான முன்னிலையுடன் காணப்படுகின்றது.
அபார சதத்துடன் இலங்கை இளம் கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்த்த அசித
இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்போர்ட் நகரில் இடம்பெற்று வரும் நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் (22) ஆட்ட நிறைவின் போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வந்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரர்கள் 301 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். இலங்கை சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது இருந்த அசித வன்னிநாயக்க 132 ஓட்டங்களுடனும், ரவீன் டி சில்வா 19 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து நேற்று (23) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை விட 86 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை இளம் அணி 141.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 407 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அசித வன்னிநாயக்க 19 பெளண்டரிகள் அடங்கலாக 132 ஓட்டங்கள் பெற, அணித்தலைவர் ரவீன் டி சில்வா அரைச்சதம் விளாசி 7 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை எடுத்திருந்தார். இவர்களோடு பின்வரிசையில் ஆடிய வினுஜ ரன்போலும் 42 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக பேர்டி போர்மன் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, எடி ஜேக், பென்ஜமின் கிளிப்(f), மற்றும் தோமஸ் ஸ்பின் வோல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
இதன் பின்னர் இலங்கையை விட 20 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து இளம் கிரிக்கெட் அணி ரோஸ் விட்பீல்டின் அபார சதம் மற்றும் அணித்தலைவர் பென் மெக்கினியின் அரைச்சதம் ஆகியவற்றின் உதவியோடு, மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 199 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில்
தற்போது இலங்கையை விட 179 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து U19 அணியின் துடுப்பாட்டத்தில், போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அரைச்சதம் பெற்ற ரோஸ் விட்பீல்ட் இம்முறை தனது சதத்தில் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 110 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதேநேரம் பென் மெக்கினி 56 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இலங்கை பந்துவீச்சு சார்பில் வனுஜ சஹான் 2 விக்கெட்டுக்களையும், வினுஜ ரன்போல் ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | c Lahiru Dewatage b Duvindu Ranatunga | 27 | 46 | 2 | 0 | 58.70 |
Ben McKinney | c Vinuja Ranpul b Dulaj Samuditha | 33 | 34 | 6 | 0 | 97.06 |
Ross Whitfield | c Wanuja Sahan b Vinuja Ranpul | 86 | 106 | 8 | 1 | 81.13 |
George Bell | c Dulaj Samuditha b Vinuja Ranpul | 107 | 96 | 16 | 0 | 111.46 |
Matthew Hurst | c Duvindu Ranatunga b Vinuja Ranpul | 8 | 18 | 1 | 0 | 44.44 |
Alex Horton | c & b Wanuja Sahan | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Dominic Kelly | st Lahiru Dewatage b Raveen de Silva | 14 | 42 | 1 | 0 | 33.33 |
George Thomas | c Vinuja Ranpul b Dulaj Samuditha | 19 | 24 | 2 | 0 | 79.17 |
Bertie Foreman | not out | 58 | 56 | 4 | 2 | 103.57 |
Eddie Jack | c Lahiru Dewatage b Shevon Daniel | 8 | 23 | 1 | 0 | 34.78 |
Benjamin Cliff | c Pawan Pathiraja b Wanuja Sahan | 18 | 21 | 3 | 0 | 85.71 |
Extras | 9 (b 4 , lb 4 , nb 0, w 1, pen 0) |
Total | 387/10 (78.3 Overs, RR: 4.93) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dulaj Samuditha | 17 | 1 | 105 | 2 | 6.18 | |
Vinuja Ranpul | 10 | 0 | 62 | 0 | 6.20 | |
Wanuja Sahan | 18.3 | 5 | 56 | 2 | 3.06 | |
Duvindu Ranatunga | 17 | 1 | 100 | 4 | 5.88 | |
Raveen De Silva | 9 | 1 | 31 | 1 | 3.44 | |
Sadisha Rajapaksa | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
Shevon Daniel | 6 | 0 | 19 | 1 | 3.17 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadisha Rajapaksa | c Alex Horton b Benjamin Cliff | 11 | 24 | 2 | 0 | 45.83 |
Asitha Wanninayake | b Thomas Aspinwall | 132 | 315 | 19 | 0 | 41.90 |
Shevon Daniel | lbw b Benjamin Cliff | 22 | 33 | 3 | 0 | 66.67 |
Pawan Pathiraja | lbw b Bertie Foreman | 32 | 95 | 5 | 0 | 33.68 |
Ranuda Somarathne | c Bertie Foreman b Eddie Jack | 65 | 114 | 6 | 0 | 57.02 |
Raveen de Silva | b Eddie Jack | 62 | 135 | 7 | 0 | 45.93 |
Lahiru Dewatage | lbw b Thomas Aspinwall | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Vinuja Ranpul | c Thomas Aspinwall b Bertie Foreman | 42 | 85 | 4 | 2 | 49.41 |
Wanuja Sahan | b Bertie Foreman | 13 | 29 | 2 | 0 | 44.83 |
Duvindu Ranatunga | lbw b Bertie Foreman | 1 | 13 | 0 | 0 | 7.69 |
Dulaj Samuditha | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 27 (b 11 , lb 9 , nb 1, w 6, pen 0) |
Total | 407/10 (141.1 Overs, RR: 2.88) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Benjamin Cliff | 28 | 5 | 68 | 2 | 2.43 | |
Thomas Aspinwall | 31 | 8 | 98 | 2 | 3.16 | |
Dominic Kelly | 23 | 6 | 65 | 0 | 2.83 | |
Eddie Jack | 23 | 6 | 62 | 2 | 2.70 | |
Bertie Foreman | 36.1 | 11 | 94 | 4 | 2.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | lbw b Wanuja Sahan | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Ben McKinney | c Lahiru Dewatage b Wanuja Sahan | 56 | 99 | 3 | 0 | 56.57 |
Ross Whitfield | b Vinuja Ranpul | 110 | 134 | 12 | 1 | 82.09 |
George Bell | c Duvindu Ranatunga b Wanuja Sahan | 29 | 27 | 3 | 1 | 107.41 |
Matthew Hurst | b Duvindu Ranatunga | 39 | 105 | 0 | 1 | 37.14 |
Alex Horton | c Wanuja Sahan b Raveen De Silva | 14 | 18 | 2 | 0 | 77.78 |
Dominic Kelly | b Wanuja Sahan | 3 | 11 | 0 | 0 | 27.27 |
Thomas Aspinwall | c Shevon Daniel b Raveen De Silva | 13 | 22 | 2 | 0 | 59.09 |
Bertie Foreman | c Vinuja Ranpul b Duvindu Ranatunga | 12 | 14 | 2 | 0 | 85.71 |
Eddie Jack | c Vinuja Ranpul b Duvindu Ranatunga | 7 | 16 | 1 | 0 | 43.75 |
Benjamin Cliff | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 0 , lb 5 , nb 0, w 1, pen 0) |
Total | 292/10 (75.5 Overs, RR: 3.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dulaj Samuditha | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Wanuja Sahan | 27 | 2 | 89 | 4 | 3.30 | |
Sadisha Rajapaksa | 6 | 1 | 15 | 0 | 2.50 | |
Vinuja Ranpul | 11 | 1 | 45 | 1 | 4.09 | |
Duvindu Ranatunga | 7.5 | 0 | 34 | 3 | 4.53 | |
Asitha Wanninayake | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Raveen De Silva | 16 | 0 | 70 | 2 | 4.38 | |
Shevon Daniel | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadisha Rajapaksa | b Thomas Aspinwall | 4 | 9 | 1 | 0 | 44.44 |
Asitha Wanninayake | c Ben McKinney b Dominic Kelly | 22 | 51 | 3 | 0 | 43.14 |
Shevon Daniel | b Thomas Aspinwall | 6 | 13 | 1 | 0 | 46.15 |
Pawan Pathiraja | lbw b Thomas Aspinwall | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Ranuda Somarathne | not out | 120 | 115 | 12 | 1 | 104.35 |
Raveen De Silva | lbw b Ben McKinney | 22 | 38 | 3 | 0 | 57.89 |
Lahiru Dewatage | lbw b Dominic Kelly | 49 | 49 | 8 | 0 | 100.00 |
Vinuja Ranpul | c Harry Singh b Thomas Aspinwall | 18 | 31 | 1 | 0 | 58.06 |
Wanuja Sahan | not out | 23 | 23 | 1 | 0 | 100.00 |
Extras | 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0) |
Total | 276/7 (57.1 Overs, RR: 4.83) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Benjamin Cliff | 10.1 | 0 | 43 | 0 | 4.26 | |
Thomas Aspinwall | 16 | 3 | 67 | 4 | 4.19 | |
Dominic Kelly | 11 | 1 | 52 | 2 | 4.73 | |
Eddie Jack | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Bertie Foreman | 13 | 0 | 74 | 0 | 5.69 | |
Ben McKinney | 3 | 0 | 21 | 1 | 7.00 |
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<