சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில், இங்கிலாந்தின் இளம் அணி அபாரமான முறையில் ஓட்டங்கள் குவித்திருக்கின்றது.
அசிதவின் சதத்துடன், பந்துவீச்சிலும் அசத்திய இலங்கை U19 கிரிக்கெட் அணி
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் U19 கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் மற்றும் இளையோர் ஒருநாள் போட்டித் தொடர்களில் ஆடுகின்றது. அதன்படி இரு அணிகளும் முதற்கட்டமாக ஆடும் டெஸ்ட் தொடர் செல்ம்ஸ்போர்ட் நகரில் நேற்று (21) ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இளம் அணித்தலைவர் பென் மெக்கினி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்தின் இளம் அணிக்கு சிறந்த ஆரம்பம் அமைந்திருந்தது. அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த அதன் தலைவர் பென் மெக்கினி 33 ஓட்டங்கள் பெற்றிருக்க, மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடிய ரோஸ் விட்பீல்ட் அரைச்சதம் தாண்டி 106 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் பெற்றார்.
ரோஸ் வீட்பில்டின் பின்னர் மத்திய வரிசையில் துடுப்பாடிய ஜோர்ஜ் பெல் சதம் விளாசி, இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் அணியினைப் பலப்படுத்தினார். சற்று அதிரடி கலந்த ஆட்டத்துடன் ஆடிய ஜோர்ஜ் பெல் 96 பந்துகளில் 16 பெளண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோர்ஜ் பெல்லினை அடுத்து இங்கிலாந்து இளம் வீரர்கள், இலங்கை பந்துவீச்சின் காரணமாக சற்று தடுமாற்றத்தை எதிர் கொண்ட போதும் பின்வரிசையைச் சேர்ந்த பேர்டி போர்மன் அதிரடியான அரைச்சதம் ஒன்றினைப் பெற, இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 78.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 387 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை இளம் அணி பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளரான துவின்து ரணதுங்க 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, வனுஜ சஹன் மற்றும் துலாஜ் சமுதித ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, முதல் நாள் ஆட்ட நிறைவில் 8.3 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 25 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அசித வன்னிநாயக்க 13 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.
இங்கிலாந்து இளம் அணி பந்துவீச்சில் பென்ஜமின் கிளிப் ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | c Lahiru Dewatage b Duvindu Ranatunga | 27 | 46 | 2 | 0 | 58.70 |
Ben McKinney | c Vinuja Ranpul b Dulaj Samuditha | 33 | 34 | 6 | 0 | 97.06 |
Ross Whitfield | c Wanuja Sahan b Vinuja Ranpul | 86 | 106 | 8 | 1 | 81.13 |
George Bell | c Dulaj Samuditha b Vinuja Ranpul | 107 | 96 | 16 | 0 | 111.46 |
Matthew Hurst | c Duvindu Ranatunga b Vinuja Ranpul | 8 | 18 | 1 | 0 | 44.44 |
Alex Horton | c & b Wanuja Sahan | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Dominic Kelly | st Lahiru Dewatage b Raveen de Silva | 14 | 42 | 1 | 0 | 33.33 |
George Thomas | c Vinuja Ranpul b Dulaj Samuditha | 19 | 24 | 2 | 0 | 79.17 |
Bertie Foreman | not out | 58 | 56 | 4 | 2 | 103.57 |
Eddie Jack | c Lahiru Dewatage b Shevon Daniel | 8 | 23 | 1 | 0 | 34.78 |
Benjamin Cliff | c Pawan Pathiraja b Wanuja Sahan | 18 | 21 | 3 | 0 | 85.71 |
Extras | 9 (b 4 , lb 4 , nb 0, w 1, pen 0) |
Total | 387/10 (78.3 Overs, RR: 4.93) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dulaj Samuditha | 17 | 1 | 105 | 2 | 6.18 | |
Vinuja Ranpul | 10 | 0 | 62 | 0 | 6.20 | |
Wanuja Sahan | 18.3 | 5 | 56 | 2 | 3.06 | |
Duvindu Ranatunga | 17 | 1 | 100 | 4 | 5.88 | |
Raveen De Silva | 9 | 1 | 31 | 1 | 3.44 | |
Sadisha Rajapaksa | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
Shevon Daniel | 6 | 0 | 19 | 1 | 3.17 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadisha Rajapaksa | c Alex Horton b Benjamin Cliff | 11 | 24 | 2 | 0 | 45.83 |
Asitha Wanninayake | b Thomas Aspinwall | 132 | 315 | 19 | 0 | 41.90 |
Shevon Daniel | lbw b Benjamin Cliff | 22 | 33 | 3 | 0 | 66.67 |
Pawan Pathiraja | lbw b Bertie Foreman | 32 | 95 | 5 | 0 | 33.68 |
Ranuda Somarathne | c Bertie Foreman b Eddie Jack | 65 | 114 | 6 | 0 | 57.02 |
Raveen de Silva | b Eddie Jack | 62 | 135 | 7 | 0 | 45.93 |
Lahiru Dewatage | lbw b Thomas Aspinwall | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Vinuja Ranpul | c Thomas Aspinwall b Bertie Foreman | 42 | 85 | 4 | 2 | 49.41 |
Wanuja Sahan | b Bertie Foreman | 13 | 29 | 2 | 0 | 44.83 |
Duvindu Ranatunga | lbw b Bertie Foreman | 1 | 13 | 0 | 0 | 7.69 |
Dulaj Samuditha | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 27 (b 11 , lb 9 , nb 1, w 6, pen 0) |
Total | 407/10 (141.1 Overs, RR: 2.88) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Benjamin Cliff | 28 | 5 | 68 | 2 | 2.43 | |
Thomas Aspinwall | 31 | 8 | 98 | 2 | 3.16 | |
Dominic Kelly | 23 | 6 | 65 | 0 | 2.83 | |
Eddie Jack | 23 | 6 | 62 | 2 | 2.70 | |
Bertie Foreman | 36.1 | 11 | 94 | 4 | 2.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harry Singh | lbw b Wanuja Sahan | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Ben McKinney | c Lahiru Dewatage b Wanuja Sahan | 56 | 99 | 3 | 0 | 56.57 |
Ross Whitfield | b Vinuja Ranpul | 110 | 134 | 12 | 1 | 82.09 |
George Bell | c Duvindu Ranatunga b Wanuja Sahan | 29 | 27 | 3 | 1 | 107.41 |
Matthew Hurst | b Duvindu Ranatunga | 39 | 105 | 0 | 1 | 37.14 |
Alex Horton | c Wanuja Sahan b Raveen De Silva | 14 | 18 | 2 | 0 | 77.78 |
Dominic Kelly | b Wanuja Sahan | 3 | 11 | 0 | 0 | 27.27 |
Thomas Aspinwall | c Shevon Daniel b Raveen De Silva | 13 | 22 | 2 | 0 | 59.09 |
Bertie Foreman | c Vinuja Ranpul b Duvindu Ranatunga | 12 | 14 | 2 | 0 | 85.71 |
Eddie Jack | c Vinuja Ranpul b Duvindu Ranatunga | 7 | 16 | 1 | 0 | 43.75 |
Benjamin Cliff | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 0 , lb 5 , nb 0, w 1, pen 0) |
Total | 292/10 (75.5 Overs, RR: 3.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dulaj Samuditha | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Wanuja Sahan | 27 | 2 | 89 | 4 | 3.30 | |
Sadisha Rajapaksa | 6 | 1 | 15 | 0 | 2.50 | |
Vinuja Ranpul | 11 | 1 | 45 | 1 | 4.09 | |
Duvindu Ranatunga | 7.5 | 0 | 34 | 3 | 4.53 | |
Asitha Wanninayake | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Raveen De Silva | 16 | 0 | 70 | 2 | 4.38 | |
Shevon Daniel | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadisha Rajapaksa | b Thomas Aspinwall | 4 | 9 | 1 | 0 | 44.44 |
Asitha Wanninayake | c Ben McKinney b Dominic Kelly | 22 | 51 | 3 | 0 | 43.14 |
Shevon Daniel | b Thomas Aspinwall | 6 | 13 | 1 | 0 | 46.15 |
Pawan Pathiraja | lbw b Thomas Aspinwall | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Ranuda Somarathne | not out | 120 | 115 | 12 | 1 | 104.35 |
Raveen De Silva | lbw b Ben McKinney | 22 | 38 | 3 | 0 | 57.89 |
Lahiru Dewatage | lbw b Dominic Kelly | 49 | 49 | 8 | 0 | 100.00 |
Vinuja Ranpul | c Harry Singh b Thomas Aspinwall | 18 | 31 | 1 | 0 | 58.06 |
Wanuja Sahan | not out | 23 | 23 | 1 | 0 | 100.00 |
Extras | 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0) |
Total | 276/7 (57.1 Overs, RR: 4.83) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Benjamin Cliff | 10.1 | 0 | 43 | 0 | 4.26 | |
Thomas Aspinwall | 16 | 3 | 67 | 4 | 4.19 | |
Dominic Kelly | 11 | 1 | 52 | 2 | 4.73 | |
Eddie Jack | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Bertie Foreman | 13 | 0 | 74 | 0 | 5.69 | |
Ben McKinney | 3 | 0 | 21 | 1 | 7.00 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<