Home Tamil இலங்கை இளையோர் அணியைக் காப்பாற்றிய தனன்ஞய

இலங்கை இளையோர் அணியைக் காப்பாற்றிய தனன்ஞய

151

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றது. 

போராட்டத்தினை காண்பித்த இலங்கை இளம் அணி

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட………….

குல்னாவில் நடைபெற்று வந்த இந்த நான்கு நாட்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (4) நிறைவுக்கு வந்தது. நேற்றைய நாள் ஆட்டத்தில் பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸின் (354) பின்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 187 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்ததுடன், பங்களாதேஷ் வீரர்களை விட தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் (184) காரணமாக 17 ஓட்டங்களாலும் முன்னிலை பெற்றிருந்தது.

இலங்கைத் தரப்பின் துடுப்பாட்டம் சார்பாக போராட்டத்தினை வெளிப்படுத்திய அணித் தலைவர் நிப்புன் தனன்ஞய 33 ஓட்டடங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். 

போட்டியின் இறுதி நாளில் பங்களாதேஷ் இளம் வீரர்களுக்கு எதிரான தமது முன்னிலையை அதிகரித்து சிறந்த வெற்றி இலக்கு ஒன்றினை தீர்மானிக்கும் நோக்குடன் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இன்றைய தினம் தொடர்ந்தது. 

இன்று நிப்புன் தனன்ஞய இலங்கை அணிக்காக சிறந்த முறையில் துடுப்பாடி ஓட்டங்கள் சேர்த்தார். அரைச்சதம் ஒன்றுடன் 4 பௌண்டரிகள் விளாசிய நிப்புன் தனன்ஞய 81 ஓட்டங்கள் பெற்றிருந்தார். 

நிப்புன் தனன்ஞய தவிர இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு பின்வரிசையில் துடுப்பாடிய கவிஷ லக்ஷான் மற்றும் துனித் வெல்லால்கே ஆகியோரும் தமது துடுப்பாட்டம் மூலம் பெறுமதி சேர்த்தனர். 

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை 9 விக்கெட்டுக்களை இழந்து 346 ஓட்டங்கள் குவித்த நிலையில் இடைநிறுத்தியது. 

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் கவிஷ லக்ஷான் மற்றும் துனித் வெல்லால்கே ஆகிய இருவரும் தலா 45 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர். 

அதேநேரம், பங்களாதேஷ் இளம் தரப்பின் பந்துவீச்சு சார்பில் மெஹிதி ஹஸன் மற்றும் அஷ்ரபுல் இஸ்லாம் சியாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக பங்களாதேஷ் தரப்பிற்கு 177 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் இளையோர் அணி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து சற்று தடுமாற்றமாக காணப்பட்ட நிலையில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேரம் நிறைவுக்கு வந்து போட்டியும் சமநிலை அடைந்தது.  

T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கையர்களுக்கு குவியும் வாய்ப்புக்கள்

இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு……

பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர் அம்ஷி டி சில்வா 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

அதேநேரம், போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் தரப்பு வீரர் சஹின் ஆலோம் தெரிவாகினார். 

பங்களாதேஷ் – இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் இந்த சமநிலை காரணமாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரும், முதல் போட்டியில் முடிவு ஏதும் இல்லாததனால் சமநிலையில் நிறைவடைகின்றது.  

இனி, இரண்டு இளம் கிரிக்கெட் அணிகளும் மோதும் 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளதோடு, அதன் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

Result

Match drawn

Sri Lanka U19
184/10 (54.3) & 346/9 (149)

Bangladesh U19
354/10 (120.4) & 37/3 (14)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Shahadat Hossain b Ashiqur Rahman Ruhit 73 105 11 0 69.52
Thaveesha Abhishek c Ashraful Islam b Shahin Alom 8 43 0 0 18.60
Ravindu De Silva c Shahadat Hossain b Shahin Alom 2 5 0 0 40.00
Sonal Dinusha c Pritom Kumar b Shahin Alom 0 3 0 0 0.00
Nipun Dananjaya c Pritom Kumar b Shahin Alom 29 41 5 0 70.73
Avishka Perera c Ashiqur Rahman Ruhit b Mehedi Hasan 2 24 0 0 8.33
Lakshan Gamage c Meherab Hossain Ahin b Shahin Alom 47 68 5 1 69.12
Dunith Wellalage c Pritom Kumar b Shahin Alom 17 27 3 0 62.96
Raveen De Silva b Shahin Alom 0 10 0 0 0.00
Amshi De Silva b Ashiqur Rahman Ruhit 0 1 0 0 0.00
Ruvin Peiris not out 0 3 0 0 0.00


Extras 6 (b 1 , lb 0 , nb 3, w 2, pen 0)
Total 184/10 (54.3 Overs, RR: 3.38)
Fall of Wickets 1-46 (16.1) Thaveesha Abhishek, 2-57 (18.3) Ravindu De Silva, 3-58 (18.5) Sonal Dinusha, 4-115 (32.2) Nipun Dananjaya, 5-115 (33.1) Chamindu Wickramasinghe, 6-132 (40.5) Avishka Perera, 7-154 (48.2) Dunith Wellalage, 8-163 (50.6) Raveen De Silva, 9-168 (51.4) Amshi De Silva, 10-184 (54.3) Lakshan Gamage,

Bowling O M R W Econ
Mehedi Hasan 14 1 36 1 2.57
Shahin Alom 17.3 5 62 7 3.58
Ashiqur Rahman Ruhit 14 0 60 2 4.29
Ashraful Islam 8 2 23 0 2.88
Meherab Hossain Ahin 1 0 2 0 2.00
Batsmen R B 4s 6s SR
Prantik Nawrose Nabil c Avishka Perera b Dunith Wellalage 98 181 15 0 54.14
Sajid Hossain Seam c Avishka Perera b Chamindu Wickramasinghe 26 32 4 0 81.25
Pritom Kumar c Dunith Wellalage b Chamindu Wickramasinghe 6 14 1 0 42.86
Alvi Hoque c Sonal Dinusha b Amshi De Silva 72 226 2 1 31.86
Shahadat Hossain c Thaveesha Abhishek b Nipun Dananjaya 50 121 3 0 41.32
Amite Hasan lbw b Ruvin Peiris 18 23 3 0 78.26
Meherab Hossain Ahin not out 33 77 5 0 42.86
Ashraful Islam lbw b Dunith Wellalage 6 11 1 0 54.55
Mehedi Hasan c Lakshan Gamage b Nipun Dananjaya 0 6 0 0 0.00
Ashiqur Rahman Ruhit lbw b Nipun Dananjaya 11 40 1 0 27.50
Shahin Alom c Amshi De Silva b Nipun Dananjaya 0 5 0 0 0.00


Extras 34 (b 10 , lb 2 , nb 12, w 10, pen 0)
Total 354/10 (120.4 Overs, RR: 2.93)
Fall of Wickets 1-41 (11.1) Sajid Hossain Seam, 2-48 (13.5) Pritom Kumar, 3-183 (62.5) Prantik Nawrose Nabil, 4-264 (88.4) Alvi Hoque, 5-287 (95.3) Amite Hasan, 6-298 (100.1) Shahadat Hossain, 7-309 (103.2) Ashraful Islam, 8-310 (104.6) Mehedi Hasan, 9-340 (118.3) Ashiqur Rahman Ruhit, 10-354 (120.4) Shahin Alom,

Bowling O M R W Econ
Amshi De Silva 21 3 79 1 3.76
Ruvin Peiris 20 5 46 1 2.30
Chamindu Wickramasinghe 9 3 19 2 2.11
Dunith Wellalage 31 7 68 2 2.19
Lakshan Gamage 13 0 53 0 4.08
Raveen De Silva 10 1 42 0 4.20
Nipun Dananjaya 16.4 5 35 4 2.13
Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Pritom Kumar b Mehedi Hasan 24 16 4 1 150.00
Thaveesha Abhishek c Pritom Kumar b Mehedi Hasan 18 29 3 0 62.07
Ravindu De Silva b Meherab Hossain Ahin 33 84 4 0 39.29
Sonal Dinusha c Alvi Hoque b Mehedi Hasan 55 148 4 0 37.16
Nipun Dananjaya c Amite Hasan b Ashraful Islam 81 318 4 0 25.47
Avishka Perera c Pritom Kumar b Prantik Nawrose Nabil 18 62 2 0 29.03
Lakshan Gamage c Shahin Alom b Ashiqur Rahman Ruhit 45 96 7 0 46.88
Dunith Wellalage c Pritom Kumar b Ashraful Islam 45 92 7 0 48.91
Raveen De Silva not out 4 46 0 0 8.70
Amshi De Silva lbw b Ashraful Islam 2 7 0 0 28.57
Ruvin Peiris not out 0 2 0 0 0.00


Extras 21 (b 7 , lb 6 , nb 6, w 2, pen 0)
Total 346/9 (149 Overs, RR: 2.32)
Fall of Wickets 1-33 (4.6) Chamindu Wickramasinghe, 2-44 (8.5) Thaveesha Abhishek, 3-107 (31.5) Ravindu De Silva, 4-156 (58.3) Sonal Dinusha, 5-187 (74.6) Avishka Perera, 6-255 (104.6) Lakshan Gamage, 7-327 (133.2) Dunith Wellalage, 8-342 (145.5) Nipun Dananjaya, 9-346 (147.4) Amshi De Silva,

Bowling O M R W Econ
Mehedi Hasan 20 3 52 3 2.60
Shahin Alom 25 8 70 0 2.80
Ashiqur Rahman Ruhit 25 8 44 1 1.76
Ashraful Islam 34 6 76 3 2.24
Meherab Hossain Ahin 24 4 44 1 1.83
Shahadat Hossain 2 0 5 0 2.50
Prantik Nawrose Nabil 16 5 20 1 1.25
Sajid Hossain Seam 3 0 22 0 7.33


Batsmen R B 4s 6s SR
Prantik Nawrose Nabil lbw b Amshi De Silva 6 6 1 0 100.00
Sajid Hossain Seam not out 18 46 2 0 39.13
Pritom Kumar c Sonal Dinusha b Amshi De Silva 4 6 1 0 66.67
Alvi Hoque b Raveen De Silva 7 23 0 0 30.43
Shahadat Hossain not out 1 4 0 0 25.00


Extras 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 37/3 (14 Overs, RR: 2.64)
Fall of Wickets 1-10 (2.1) Prantik Nawrose Nabil, 2-15 (2.6) Pritom Kumar, 3-36 (13.2) Alvi Hoque,

Bowling O M R W Econ
Amshi De Silva 3 1 10 2 3.33
Ruvin Peiris 3 0 14 0 4.67
Dunith Wellalage 4 2 4 0 1.00
Nipun Dananjaya 2 1 4 0 2.00
Raveen De Silva 2 0 5 1 2.50



முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<