Home Tamil சமநிலை பெற்ற போட்டியில் சோபித்த இலங்கை இளையோர்

சமநிலை பெற்ற போட்டியில் சோபித்த இலங்கை இளையோர்

185

மழையால் தடங்கலுக்கு உள்ளான இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது. 

இதில் இலங்கை முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு பந்துவீச்சிலும் பங்களாதேஷ் இளையோர் அணிக்கு நெருக்கடி கொடுத்தது. 

எனினும் பிரிசால் டிவிசனல் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த நான்கு நாள் இளையோர் டெஸ்ட் போட்டியின் முதல் இரு நாட்களும் மழையால் கைவிடப்பட்ட நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் 36 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கையுடனான இரண்டாவது T20 யில் இருந்து விலகும் ஸ்டார்க்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான T20i…..

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று (29) 155 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை இளையோர் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடந்தது. 46 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை தொடர்ந்த சொனால் தினூச 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுமுறையில் 18 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அணித்தலைவர் நிபுன் தனஞ்சய சிறப்பாக துடுப்பெடுத்தாடி 112 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 67 ஓட்டங்களை பெற்றார்.

அதேபோன்ற மத்திய பின் வரிசையில் அவிஷ்க லக்ஷான் மற்றும் துலித் வெல்லாலகேவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த வெல்லாலகே ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றதோடு, லக்ஷான் 46 ஓட்டங்களை பெற்றார்.

இதன்படி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 84.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது. 

பங்களாதேஷ் இளையோர் அணி சார்பில் அஷ்ரபுல் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் போட்டியின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் இளையோர் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது.   

பங்களாதேஷ் இளையோர் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் துடுப்பாடும் இலங்கை

பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட…..

இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஆரம்ப வீரர் நவ்ரோஸ் நபீலை டக் அவுட் செய்வதற்கு டில்ஷான் மதுசங்கவினால் முடிந்தது. தொடர்ந்து முக்கிய இடைவேளைகளில் பங்களாதேஷ் விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டன. இதனால் பங்களாதேஷ் இளையோர் அணி 66 ஓட்டங்களிலேயே தனது ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.  

இலங்கை இளையோர் அணி சார்கில் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் நதீஷ பதிரன 6.2 ஓவர்களில் வெறுமனே 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அவிஷ்க லக்ஷான்  2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

இதன்படி கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது பங்களாதேஷ் இளையோர் அணி 47.4 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசிய இளையோர் டெஸ்ட் போட்டி நவம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result

Match drawn

Sri Lanka U19
331/7 (84.3)

Bangladesh U19
142/6 (48)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Pritom Kumar b Asadullah Galib 45 51 9 0 88.24
Thaveesha Abhishek b Asadullah Galib 1 9 0 0 11.11
Ravindu De Silva lbw b Noman Chowdhury 21 54 3 0 38.89
Sonal Dinusha c Pritom Kumar b Ashraful Islam 58 110 7 1 52.73
Nipun Dananjaya c Shahadat Hossain b Ashraful Islam 67 112 6 3 59.82
Chihan Kalindu lbw b Ashraful Islam 15 16 1 1 93.75
Lakshan Gamage c Pritom Kumar b Noman Chowdhury 46 78 2 3 58.97
Dunith Wellalage not out 50 85 5 0 58.82


Extras 28 (b 10 , lb 9 , nb 8, w 1, pen 0)
Total 331/7 (84.3 Overs, RR: 3.92)
Fall of Wickets 1-1 (1.5) Thaveesha Abhishek, 2-74 (13.4) Chamindu Wickramasinghe, 3-92 (21.5) Ravindu De Silva, 4-205 (50.2) Sonal Dinusha, 5-227 (56.1) Chihan Kalindu, 6-238 (60.4) Nipun Dananjaya, 7-331 (84.3) Lakshan Gamage,

Bowling O M R W Econ
Noman Chowdhury 14.3 3 68 2 4.76
Asadullah Galib 15 2 46 2 3.07
Ashraful Islam 29 6 83 3 2.86
Naimur Rahman 13 1 56 0 4.31
Saidul Islam 11 2 52 0 4.73
Saidul Islam 2 0 7 0 3.50


Batsmen R B 4s 6s SR
Prantik Nawrose Nabil c Nipun Dananjaya b Dilshan Madusanka 0 4 0 0 0.00
Sajid Hossain Seam c Dulith Wellalage b Matheesha Pathirana 23 52 2 0 44.23
Pritom Kumar lbw b Avishka Lakshan 28 39 5 0 71.79
Alvi Hoque c Chilan Kalindu b Avishka Lakshan 54 100 7 1 54.00
Shahadat Hossain c Avishka Lakshan b Matheesha Pathirana 2 7 0 0 28.57
Amite Hasan lbw b Matheesha Pathirana 0 3 0 0 0.00
Naimur Rahman not out 25 66 3 0 37.88
Ashraful Islam not out 0 2 0 0 0.00


Extras 10 (b 4 , lb 0 , nb 6, w 0, pen 0)
Total 142/6 (48 Overs, RR: 2.96)
Fall of Wickets 1-0 (0.4) Prantik Nawrose Nabil, 2-47 (12.4) Pritom Kumar, 3-63 (17.5) Sajid Hossain Seam, 4-66 (19.5) Shahadat Hossain, 5-66 (21.2) Amite Hasan, 6-142 (44.1) Alvi Hoque,

Bowling O M R W Econ
Dilshan Madusanka 8 2 34 1 4.25
Chamindu Wickramasinghe 6 0 13 0 2.17
Matheesha Pathirana 6.2 1 13 3 2.10
Lakshan Gamage 6.4 3 12 2 1.88
Dunith Wellalage 14 4 39 0 2.79
Avishka Lakshan 7 1 30 0 4.29