இங்கிலாந்து இளையோர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான இலங்கை 19 வயதின் கீழ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளையோர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ளது.
>> பாகிஸ்தான் அணிக்கு எதிராக திரில் வெற்றிபெற்ற இந்தியா!
குறித்த இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை இளையோர் குழாத்தின் தலைவராக தினுர கலுபான நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக நடைபெற்ற ஐசிசி இளையோர் உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக தினுர கலுபான சகலதுறையிலும் பிரகாசிப்புகளை வழங்கியிருந்தார்.
தினுர கலுபான அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இளையோர் உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய தமிழ்பேசும் வீரர் சாருஜன் சண்முகநாதனும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் புதிய வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை இளையோர் அணி இம்மாதம் 28ம் திகதி முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளதுடன், நான்கு நாள் போட்டி ஜூலை 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தினுர கலுபான (தலைவர்), புலிந்து பெரேரா, ஹிரான் ஜயசுந்தர, தினிரு அபேவிக்ரமசிங்க, மஹித் பெரேரா, கயான் வீரசிங்க, சாருஜன் சண்முகநாதன், சதேவ் சமரசிங்க, திசர ஏகநாயக்க, யூரி கொத்திகொட, மஞ்சுல சந்துக, விஹாஸ் தெவ்மிக, சேஷான் மாரசிங்க, துமிந்து செவ்மிக, பிரவீன் மனீஷ, நாதன் கல்டேரா, ஹிவின் கெனுல, கீதிக டி சில்வா
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<