இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை இளையோர் அணி பயிற்சி ஒருநாள் போட்டியில் 48 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
இளையோர் இங்கிலாந்து அழைப்பு பதினொருவர் அணியுடன் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 282 என்ற சவாலான வெற்றியிலக்கை இலங்கை இளையோர் அணி வெறும் 42 ஓவர்கள் நிறைவில் அடைந்து வெற்றியை பதிவுசெய்தது.
>>சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கிய டேவிட் வோர்னர்<<
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அழைப்பு பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 281 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அழைப்பு பதினொருவர் அணியின் சார்பாக ஆரம்ப வீரர்கள் தடுமாறிய போதும், மத்தியவரிசையில் டி.ஜே. டவ்கின்ஸ் 93 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தோமஸ் ரேவ் 60 ஓட்டங்களையும், ஆர்யான் சவான்ட் 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரவீன் மனீஷ 4 விக்கெட்டுகளையும், துமிந்து செவ்மின 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் சவாலான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை இளையோர் அணிக்கு புலிந்து பெரேரா மற்றும் திசர ஏகநாயக்க ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
>>மகளிர் ஆசியக் கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!<<
இதில் திசர ஏகநாயக்க 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், புலிந்து பெரேரா அபாரமாக ஆடி சதமடித்து 107 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார். இதனை தொடர்ந்து கயான வீரசிங்க 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், அணித்தலைவர் தினுர கலுபான ஆட்டமிழக்காமல் 31 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை விளாச இலங்கை அணி 42 ஓவர்களில் இலங்கை இளையோர் அணி வெற்றிபெற்றது.
சுருக்கம்281 (48.1)
இளையோர் இங்கிலாந்து அழைப்பு பதினொருவர் – 281 (48.1), டி.ஜே. டவ்கின்ஸ் 93, தோமஸ் ரேவ் 60, பிரவீன் மனீஷ 4/48, துமிந்து செவ்மின 3/30
இலங்கை இளையோர் அணி – 282/6 (42), புலிந்து பெரேரா 107, தினுர கலுபான 51*, அலெக்ஷ் கிரீன் 2/43
முடிவு – இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<