பங்களாதேஷ் சென்று இளையோர் ஒருநாள் மற்றும் இளையோர் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (18) அறிவித்துள்ளது.
ஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட…
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் முக்கிய மாற்றமாக இலங்கை இளையோர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான கமில் மிஷார நீக்கப்பட்டுள்ளதுடன், இவருடன் அஹான் விக்ரமசிங்க மற்றும் அசேன் டேனியல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதன் காரணமாக இந்த தொடருக்கான குழாத்தில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் செல்லவுள்ள இளையோர் ஒருநாள் மற்றும் இளையோர் டெஸ்ட் அணிகளின் தலைவராக நிபுன் தனன்ஜய நியமிக்கப்பட்டுள்ளதுடன், இறுதியாக இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்ட மொஹமட் சமாஸ் மீண்டும் (ஒருநாள்) அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.
இவருடன், இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த டிலும் சுதீர, சிஹான் கலிந்து, சமிந்து விஜயசங்க மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் இந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர்.
>>MCA பிரீமியர் லீக்கில் இலங்கை இளையோர் அணிக்கு முதல் வெற்றி
இதேவேளை, இலங்கை இளையோர் அணி எதிர்வரும் 23ம் திகதி பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 26ம் திகதி ஆரம்பமாகிறது. அதன் பின்னர், இளையோர் ஒருநாள் தொடர் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பித்து, நவம்பர் 19ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இலங்கை இளையோர் டெஸ்ட் குழாம்
சமிந்து விக்ரமசிங்க, தவீஷ அபிஷேக், ரவிந்து ரஸந்த, நிபுன் தனன்ஜய (தலைவர்), சொனால் தினூஷ, சிஹான் கலிந்து, லக்ஷான் கமகே, துனித் வெல்லாலகே, ரவீன் டி சில்வா, அவிஷ்க லக்ஷான், டில்ஷான் மதுசங்க, சமிந்து விஜயசிங்க, ரவீன் பீரிஸ், அம்ஷி டி சில்வா, அவிஷ்க பெரேரா, மதீஷ பத்திரன
இலங்கை இளையோர் ஒருநாள் குழாம்
நவோத் பரணவிதான, மொஹமட் சமாஸ், தவீஷ அபிஷேக், ரவிந்து ரஸந்த, நிபுன் தனன்ஜய (தலைவர்), அவிஷ்க தரிந்து, சமிந்து விஜயசிங்க, ரொஹான் சஞ்சய, கவிந்து நதீஷன், யசிரு ரொட்ரிகோ, டில்ஷான் மதுசங்க, சிஹான் கலிந்து, அம்ஷி டி சில்வா, சந்துன் மெண்டிஸ், டிலும் சுதீர, சொனால் தினூஷ
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<