இலங்கை 19 வயதின் கீழ் அணியில் சாருஜன் சண்முகநாதன்!

West Indies U19 Tour of Sri Lanka 2023

345
West Indies U19 Tour of Sri Lanka 2023

மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான 20 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 20 பேர்கொண்ட குழாத்தின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சினெத் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த மல்ஷ தருபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

>>ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

அதேநேரம், இந்த குழாத்தில் முக்கிய இணைப்பாக கொழும்பு சென். பெனடிக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் சாருஜன் சண்முகநாதன் முதன்முறையாக 19 வயதின் கீழ் தேசிய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இறுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் விளையாடிய 9 வீரர்கள் இந்த தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் மல்ஷ தருபதி, தினுர கலுபான, சினெத் ஜயவர்தன, வியாஸ் தெவ்மிக, விசான் ஹலம்பகே, ஹிரான் ஜயசுந்தர, விஷ்வ லஹிரு, கருகே சன்கெத் மற்றும் விஷ்வ ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், செப்டம்பர் 15ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 19 வயதின் கீழ் குழாம்

சினெத் ஜயவர்தன (தலைவர்), மல்ஷ தருபதி, விஷ்வ ராஜபக்ஷ, தினுர கலுபான, வியாஸ் தெவ்மிக, கருக சன்கெத், விஷ்வ லஹிரு, கவீஷ பியூமல், பெதும் மலிந்த, புலின பெரேரா, ரவிசான் நெத்சார, ருசாந்த கமகே, ருவிசான் பெரேரா, சாருஜன் சண்முகநாதன், விசென் ஹலம்பகே, ஹிரான் ஜயசுந்தர, தினிரு அபேவிக்ரம, ஜனித் பெர்னாண்டோ, சுபுன் வதுகே, தரன விமலதர்ம

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<