பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் இலங்கை – பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஆறு போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடர் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகுகின்றது.
>>பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்<<
இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் இம்மாதம் 24ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் பங்கெடுக்கும் நிலையில், இலங்கை குழாத்தின் தலைவராக கொழும்பு ரோயல் கல்லூரி அணியினைச் சேர்ந்த விமத் டின்சார நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம் யாழ். மண்ணினைச் சேர்ந்த மாலிங்க பாணியில் பந்துவீசும் வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், மணிக்கட்டு சுழல்வீரர் விக்னேஷ்வரன் ஆகாஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை U19 குழாம்
விமாத் டின்சார (கொழும்பு ரோயல் கல்லூரி)
துல்னித் சிகார (மஹாநாம கல்லூரி)
விரான் சாமுதித (மாத்தறை சென். செர்வதியஸ் கல்லூரி)
டிமாத் மஹாவிதான (கண்டி திரித்துவ கல்லூரி)
கவிஜா கமகே (கிங்ஸ்வூட் கல்லூரி – கண்டி)
கித்ம விதானபதிரன (ஆனந்த கல்லூரி)
ரமிரு பெரேரா (ரோயல் கல்லூரி)
ஆதம் ஹில்மி (கண்டி திரித்துவ கல்லூரி)
தினுர தம்சாத் (குருகுல கல்லூரி)
சாமிக்க ஹீனட்டிகல (மஹநாம கல்லூரி)
ரசித் நிம்சார (வத்தளை இலைசியம் கல்லூரி)
குகதாஸ் மாதுளன் (யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி)
விக்னேஷ்வரன் ஆகாஸ் (ஹார்ட்லி கல்லூரி)
தருஷ நவோத்யா (ஸாஹிரா கல்லூரி)
சனுஜ நின்துவர (சென். ஏன்ஸ் கல்லூரி – குருநாகல்)
>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<