இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.
இளையோர் ஆசியக் கிண்ணத்தின் சம்பியனாக நாமம் சூடிய இந்தியா
பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்திருக்கும் 19 வயதின் …
இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக நாளை (16) கொழும்பில் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் பங்களாதேஷின் இளம் அணியுடன் மோதும் 16 பேர் அடங்கிய இலங்கையின் 19 வயதின் கீழ் தேசிய கிரிக்கெட் அணிக் குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்திருக்கின்றது.
அறிவிக்கப்பட்டிருக்கும் குழாத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பிடித்துள்ளதோடு, கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் துடுப்பாட்ட வீரர் மொஹமட் சமாஸிற்கு முதற்தடவையாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், விஜய்காந்த் வியாஸ்காந்த் இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்காக ஏற்கனவே இளையோர் டெஸ்ட் போட்டியொன்றில் ஆடியுள்ளார். இதேநேரம், 17 வயதேயான மொஹமட் சமாஸ் பிரிவு – I பாடசாலை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரிலும், மாகாண ரீதியிலான கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பான பதிவுகளை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில், இலங்கையின் 19 வயதின் கீழ் அணியினை வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான நிப்புன் தனன்ஜய வழிநடாத்துகின்றார். நிப்புன் தனன்ஜயவினால், வழிநடாத்தப்பட்டிருந்த இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி அண்மையில் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதோடு, தனன்ஜய இந்த ஆண்டு நியூசிலாந்தில் இடம்பெற்ற இளையோர் உலகக் கிண்ணத்திலும் பங்குபற்றிய அனுபவத்தினை கொண்டுள்ளார்.
இளையோர் ஆசியக் கிண்ணத்தில் பங்குபற்றியிருந்த நவோத் பரணவிதான, காமில் மிஷார, சந்துன் மென்டிஸ், துனித் வெல்லாலகே மற்றும் நவின் பெர்னாந்து ஆகியோருக்கும் பங்களாதேஷுடனான இளையோர் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, இத் தொடர் முழுக்க பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைவராக தவ்ஹீத் ரித்தோய் செயற்படவுள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த தொடரிலிருந்தே 2020ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. இன் இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்
பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி …
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஹஷான் திலகரட்ன இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இத்தொடரில் செயற்படவுள்ளோடு, இலங்கையின் முன்னாள் வேகப்புயல் சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், பிரதி தலைமை பயிற்சியாளராகவும் கடமையேற்றுள்ளார்.
இவர்களோடு, இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் வீரர்களில் ஒருவரான உபுல் சந்தன இளம் வீரர்களின் களத்தடுப்பை முன்னேற்றும் பொறுப்பினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளையோர் டெஸ்ட் தொடருக்கான இலங்கை 19 வயதின் கீழ்
நிப்புன் தனன்ஜய (அணித்தலைவர் – புனித ஜோசப் வாஸ் கல்லூரி), நவோத் பரணவிதான (காலி மஹிந்த கல்லூரி), காமில் மிஷார (கொழும்பு றோயல் கல்லூரி), சந்துன் மென்டிஸ் (காலி றிச்மண்ட் கல்லூரி), சோனால் தினுஷ (கொழும்பு மஹாநாம கல்லூரி), துனித் வெல்லால்கே (கொழும்பு புனித ஜோசப் கல்லூரி), நவின் பெர்னாந்து (நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி), மொஹமட் சமாஸ் (கொழும்பு ஸாஹிரா கல்லூரி), ஜனிஷ்க பெரேரா (மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி), தினேத் ஜயக்கொடி (கொழும்பு புனித ஜோசப் கல்லூரி), சமிந்து விஜேசிங்க (கொழும்பு நாலந்த கல்லூரி), சிகான் கலிந்து (மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி), அஷான் டேனியல் (கொழும்பு புனித ஜோசப் கல்லூரி), விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), ரோஹான் சஞ்சய (களுத்துறை திஸ்ஸ மத்திய கல்லூரி), அஷான் டில்ஹார (பாணந்துறை சென். ஜோன்ஸ் கல்லூரி)
மேலதிக வீரர்கள் – பிரவின் டி சில்வா (களனி குருகுல கல்லூரி), முதித பிரேமதாச (குருநாகல் மலியதேவ கல்லூரி), அவிஷ்க தரிந்து (வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி), ரவீன் டி சில்வா (கொழும்பு நாலந்த கல்லூரி)
பங்களாதேஷின் 19 வயதின் கீழ் அணி
தவ்ஹீத் ரித்தோய் (அணித்தலைவர்), தன்சித் ஹஸன் தமிம், சஜித் ஹொசைன் சீம், மொஹமட் பிரன்டிக் நவ்ரோஷ் நபில், அமைட் ஹசன், சமிம் ஹொசைன், அக்பர் அலி, மஹ்முதுல் ஹசன் ஜோய், ரகீபுல் ஹஸன், மின்ஹாஸூர் ரஹ்மான் மொஹன்னா, மொஹமட் றிசாட் ஹொஸ்ஸைன், சொரிபுல் இஸ்லாம், மொஹமட் ரிட்டுன்ஜோய், செளத்ரி நிப்புன், அசத்துல்லா ஹில் கலீப், சஹின் அலாம்
மேலதிக வீரர்கள்
பிரிடோம் குமார், சதாத் ஹொஸ்ஸைன், அவிஷேக் டாஸ், தன்சிம் ஹஸன் சகீப், மெஹெதி ஹஸன்
தொடர் அட்டவணை
ஒக்டோபர் 16-19 – முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டி, NCC மைதானம், கொழும்பு
ஒக்டோபர் 23-26 – இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டி, மேரியன்ஸ் கழக மைதானம் – கட்டுநாயக்க
ஒரு நாள் தொடர்
ஒக்டோபர் 30 – முதலாவது இளையோர் ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை
நவம்பர் 1 – இரண்டாவது இளையோர் ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை
நவம்பர் 3 – மூன்றாவது இளையோர் ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை
நவம்பர் 6 – நான்காவது இளையோர் ஒரு நாள் போட்டி, மேரியன்ஸ் கழக மைதானம் – கட்டுநாயக்க
நவம்பர் 9 – ஐந்தாவது இளையோர் ஒரு நாள் போட்டி, மேரியன்ஸ் கழக மைதானம் – கட்டுநாயக்க
இலங்கை – பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட அணிகள் இடையிலான தொடர் பற்றிய மேலதிக விபரங்கள், புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை அறிந்து கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…