இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கு இடையிலான இளையோர் ஒருநாள் மற்றும் இளையோர் டெஸ்ட் தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தினை கிரிக்கெட் சபை இன்று (02) அறிவித்துள்ளது.
இளையோர் ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியிலும் மொஹமட் சமாஸ்
சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் நாளை …
வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் நிப்புன் தனன்ஜயவின் தலைமையைில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை இளையோர் அணி, அவுஸ்திரேலிய இளையோர் அணியுடன் மூன்று இளையோர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இளையோர் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. ஒருநாள் போட்டிகள் பி.சரா ஓவல் மைதானத்தில் எதிர்வரும், 3,5 மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், டெஸ்ட் போட்டி 10-12ம் திகதிகளில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான 15 பேர்கொண்ட குழாத்தில் ஸாஹிரா கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் மொஹமட் சமாஸ் இடம்பிடித்துள்ளார். சமாஸ் ஏற்கனவே கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் இளையோர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடித்திருந்த நிலையில், மீண்டும் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
Photos: Sri Lanka U19 vs Australia U19 – Pre Series Media Briefing
மொஹமட் சமாஸ் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சில மாதங்களாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வரும் காமில் மிஷார, சோனால் தினூஷ மற்று நவோத் பரணவித்தாரன ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில் சொனால் தினூஷ மற்று நவோத் பரணவித்தாரன ஆகியோர் பங்களாதேஷ் தொடரில் அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்திருந்தனர்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் முதற்தர போட்டிகளில் விளையாடி வரும் ஆறு வீரர்கள் மற்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கிரிக்கெட் சபையின் வளர்ந்து வரும் வீரர்களுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இரண்டு வீரர்களும் 15 பேர் கொண்ட குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ரிச்மண்ட் கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான தவீஷ அபிஷேக் முதன் முறையாக தேசிய இளையோர் குழாத்தில் விளையாட வாய்ப்பை பெற்றுள்ளதுடன், கிரிக்கெட் சபையின் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான லீக் தொடரில் பி.ஆர்.சி. அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் டில்சான் மதுசங்க மற்றும் ரிச்மண்ட் கல்லூரியின் சுழற்பந்து வீச்சாளர் டிலும் சுதீர ஆகியோரும் முதன் முறையாக இளையோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து A, அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகள்
அயர்லாந்து A அணியும், 19 வயதுக்கு உட்பட்ட அவுஸ்திரேலிய அணியும் . ….
இவ்வாறு, அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிரான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள வீரர்கள், 2020ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என்பதை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி
நிப்புன் தனன்ஜய (தலைவர்), நவோத் பரணவித்தாரன, சோனால் தினுஷ, காமில் மிஷார, மொஹமட் சமாஸ், ரவீன் டி சில்வா, தவீஷ அபிஷேக், அவிஷ்க தரிந்து, லக்ஷான் கமகே, சமிந்து விஜேசிங்க, ப்ரவீன் நிமேஷ், டில்ஷான் மதுசங்க, அஷான் டேனியல், ரொஷேன் சன்ஜய, டிலும் சுதீர
போட்டி அட்டவணை
- முதலாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 3, பி.சரா ஓவல்
- இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 5, பி.சரா ஓவல்
- மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 7, பி.சரா ஓவல்
- மூன்று நாள் கொண்ட டெஸ்ட் போட்டி – ஜனவரி 10-12, எஸ்.எஸ்.சி