16 வயதின்கீழ் தெற்காசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பில் சம்பியனானது இலங்கை

189

நேபாளம் கத்மண்டுவில் முதல் தடவையாக நடைபெற்று முடிந்திருக்கும் தெற்காசிய நாடுகளுக்கான 16 வயதின்கீழ்ப்பட்டோருக்கான வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணி இந்திய 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணியினை 42-28 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. 

மலோனி விஜேசிங்க காலமானார்

இலங்கை வலைப்பந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக எதிர்கால…

நேபாள வலைபந்து சங்கம் ஒழுங்கு செய்திருந்த இந்த வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர், ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தது. தொடரில் இலங்கையின் 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணி உள்ளடங்களாக நேபாளம், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணிகளும் பங்கெடுத்திருந்தன. 

இலங்கையின் இளம் மங்கைகள் இந்த வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணியினை எதிர் கொண்டிருந்தனர். 

பின்னர் இறுதிப் போட்டி பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பித்தது. போட்டியின் முதல் கால்பகுதியில் இரண்டு அணிகளும் சம ஆதிக்கத்தை வெளிப்படுத்த குறித்த கால்பகுதி 8-8 என்கிற புள்ளிகள் கணக்கில் சமநிலை அடைந்தது. 

பின்னர், இரண்டாம் கால்பகுதியில் இலங்கையின் இளம் மங்கைகள் மிகவும் வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி குறித்த கால்பகுதியினை 16-4 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர். இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதி இலங்கை மங்கைகளின் ஆதிக்கத்தோடு 24-12 என்கிற புள்ளிகள் கணக்கில் நிறைவுக்கு வந்தது.  

போட்டியின் மூன்றாம் கால்பகுதியிலும் இலங்கை மங்கைகள் தமது ஆதிக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து 11-8 என இந்த கால்பகுதியினையும் தமக்கு சொந்தமாக்கி கொண்டனர்.  

35 தங்கப் பதக்கங்களை குறிவைத்து நேபாளம் செல்லும் இலங்கை அணி

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 13ஆவது…

பின்னர், போட்டியின் இறுதிக் கால்பகுதியினை இலங்கை வீராங்கனைகள் 7-8 என்கிற புள்ளிகள் கணக்கில் பறிகொடுத்த போதிலும் ஏற்கனவே நடைபெற்ற கால்பகுதிகளில் பெற்ற புள்ளிகள் இலங்கை அணிக்கு 42-28 வெற்றிக்கு போதுமாக இருந்தது. 

இலங்கை 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணியின் வீராங்கனையான நெத்மி விஜேநாயக்க தொடரில் சிறந்த சூட்டர் வீராங்கனையாக தெரிவாக, பங்களாதேஷின் மிஷ்கா சிறந்த தடுப்பு வீராங்கனையாக தெரிவாகினார். 

இத்தொடரில் இலங்கை 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணி, குருநாகல் திருக்கன்னியர் மட வலைப்பந்து பயிற்சியாளர் அமால்கா குணத்திலக்க மூலம் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<