பதினைந்து வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF Championship) போட்டித் தொடர் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள கல்யாணி விளையாட்டரங்கில் நாளை (21) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் பூட்டான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட ஐந்து நாடுகள் இம்முறை போட்டித் தொடரில் பங்குபற்றவுள்ளன.
இலங்கை கால்பந்து பயிற்றுவிப்பாளருக்கு எதிராக முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு
இலங்கை கால்பந்து அணியின் தலைமை….
இலங்கை அணிக்கு கந்தானை டி மெசனொட் கல்லூரியின் ரிஷிக்க யொஹான் தலைவராக செயற்படவுள்ளதுடன், உதவித் தலைவராக கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் கல்லூரியின் டெறிக் நீல் செயற்படவுள்ளார்.
அதேபோன்று, இந்த அணிக்கு பயிற்றுவிப்பாளராக புனித ஜோசப் கல்லூரியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அருன சம்பத் கடமையாற்றுகின்றார். அருன சம்பத்தைப் பொருத்தவரையில், சென் ஜோசப் கல்லூரியின் பிரதான அணியை தொடர்ச்சியாக 3 தடவைகள் பிரிவு ஒன்று சுற்றுப் போட்டியில் தேசிய சம்பியனாக்கிய பெருமையைப் பெற்றவர்.
இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள ரிஷிக்க யொஹான் தலைமையிலான 15 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணி, நேற்று (19) இந்தியா நோக்கி பயணமானது.
தொடரின் முதல் நாளன்று (20) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 12.00 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியாவும், நேபாளமும் போட்டியிடவுள்ளதுடன், பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறுகின்ற போட்டியில் இலங்கை அணி பூட்டானை எதிர்த்தாடவுள்ளது.
இதேநேரம், எதிர்வரும் 23ஆம் திகதி நேபாளத்தையும், 25ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, கடைசி லீக் போட்டியில் இந்தியாவை எதிர்வரும் 27ஆம் திகதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பார்சிலோனாவில் இருந்து பயேர்ன் செல்கிறார் கோட்டின்ஹோ
பார்சிலோனா மத்தியகள வீரர் பிலிப்பே….
லீக் சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
இதேவேளை, இதற்குமுன் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஒருதடவையேனும் இலங்கை அணி முதல் சுற்றில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி விபரம்
ரிஷிக்க யொஹான் (அணித் தலைவர்), மொஹமட் சுஹைப், மலிந்து டொமினிக், டெரிக் நெய்ல் (உதவித் தலைவர்), தருக அஷந்த, கவிஷ ஷெனால், கிரிஷான் ஷெனால், எருஷ ருவங்க, மஹ்த் மவின்து, தேஷான் ஜயலத், தருஷ ரஷ்மிக, இனூன் இஷான், மொஹமட் ஷகீல், இன்ஷான் மிஹ்ரான், மொஹமட் ஹய்சம், நசீர் வாஹிம், ஹரசர சில்வா, வெனுர லக்மின, ஷயான் டானி, மொஹமட் ஷவீல்
பயிற்சியாளர் – அநுர சம்பத், நவா சிலேரின் ப்றின்ஸ் (உதவிப் பயிற்சியாளர்), சுமோ பெரேரா (உடற்கூற்று மருத்துவர்)
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<