மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

871

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிட்டவாறு எந்த மாற்றங்களுமின்றி இடம்பெறும் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) உறுதி செய்திருக்கின்றது.

இந்த டெஸ்ட் தொடரை நடாத்தும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கு நிதி நெருக்கடி உருவாகியிருந்த காரணத்தினால், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி வர்த்தக ரீதியில் பெறுமதி தரும் ஒரு நாள் போட்டித் தொடராக மாற்றப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் சந்தேகம் 

“இலங்கை அணியை வரவேற்க கரீபியன் தீவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகள் எதுவோ அதனைச் செய்து கொண்டிருக்கின்றோம். நாம் டெஸ்ட் போட்டிகளுக்கு பதிலாக ஒரு நாள் போட்டிகள் எதனையும் ஏற்பாடு செய்யவில்லை“ எனக்கூறி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கெமரூன் இந்த டெஸ்ட் தொடரின் போட்டிகள் எதுவும் ஒரு நாள் போட்டிகளாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்திருந்தார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வாவும் மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் தொடரில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதனை ThePapare.com இற்கு இவ்வாறு உறுதிப்படுத்தியிருந்தார்.

“மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினர் எம்முடன் பேசியிருந்தனர் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்று டெஸ்ட் போட்டிகளையும் நடாத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்“

இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இம்மாதம் 25 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கின்றது. பின்னர் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜூன் மாதம் 6 ஆம் திகதி போர்ட் ஒப் ஸ்பெயின் நகரில் விளையாடுகின்றது. தொடர்ந்து இரண்டு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக சென். லூசியா நகருக்கு பயணமாகின்றன. இதன் பின்னர், மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பார்படோஸ் நகரில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.

பூரண உடல் தகுதியை நிரூபித்துள்ள மெதிவ்ஸ், லக்மால்

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடர் எதனையும் வெற்றி கொள்ளவில்லை என்பதோடு, கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான முதல் டெஸ்ட் தொடர் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.