இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இருதரப்பு தொடர் அட்டவணை வெளியீடு

1774

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இருதரப்புத் தொடரில் அடங்குகின்ற கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை இன்று (16) வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் இணையும் அர்னோல்ட், குலசேகர 

இம்மாதம் 23ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மூன்று T20I போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மூவகைப் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடர்களில் விளையாடுகின்றது. 

அதன்படி, இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இருதரப்பு தொடரின் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதம் 03ஆம் திகதி தொடங்குகின்ற T20I தொடருடன் ஆரம்பமாகுகின்றன. 

கொவிட்-19 வைரஸின் அச்சுறுத்தல் கருதி இரு அணிகளுக்குமிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் என்டிகுவா நகரில் அமைந்திருக்கும் இரு வெவ்வேறு மைதானங்களில் மாத்திரம் இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதில் T20I தொடர் என்டிகுவா நகரிலுள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்திலும், ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் என்பன சேர் விவியன் ரிச்சர்ஸ் மைதானத்திலும் நடைபெறவிருக்கின்றன. 

மேற்கிந்திய சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்: SLC நம்பிக்கை

இரு அணிகளும் பங்கெடுகின்ற ஒருநாள் தொடர், T20I தொடர் நிறைவுக்கு வந்த பின்னர் மார்ச் மாதம் 10ஆம் திகதி நடைபெறவிருப்பதோடு, டெஸ்ட் தொடர் மார்ச் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

இலங்கை கிரிக்கெட் சபை மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இருதரப்பு தொடர்களில் விளையாடவிருக்கும் இலங்கை வீரர்களை தெரிவு செய்ய விசேட தகுதிகாண் சோதனை ஒன்றினை நடாத்தியிருந்ததோடு, அந்த தகுதிகாண் சோதனையின் அடிப்படையில் இந்த இருதரப்பு தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் குழாத்தினையும் விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 இருதரப்பு சுற்றுத் தொடர் அட்டவணை

  • முதல் T20I போட்டி – மார்ச் 03 – என்டிகுவா (கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்)
  • இரண்டாவது T20I  போட்டி – மார்ச் 05 – என்டிகுவா (கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்)
  • மூன்றாவது T20I போட்டி – மார்ச் 07 – என்டிகுவா (கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்)
  • முதல் ஒருநாள் போட்டி – மார்ச் 10 – என்டிகுவா (சேர் விவியன் ரிச்சர்ஸ் மைதானம்)
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – மார்ச் 12 – என்டிகுவா (சேர் விவியன் ரிச்சர்ஸ் மைதானம்)
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – மார்ச் 14 – என்டிகுவா (சேர் விவியன் ரிச்சர்ஸ் மைதானம்)
  • முதல் டெஸ்ட் போட்டி – மார்ச் 21-25 – என்டிகுவா (சேர் விவியன் ரிச்சர்ஸ் மைதானம்) 
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி – மார்ச் 29 – ஏப்ரல் 02 – என்டிகுவா (சேர் விவியன் ரிச்சர்ஸ் மைதானம்)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<