சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்ததுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றித் தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.
போட்டியின் நான்காவது நாளான நேற்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணி 377 என்ற பாரிய வெற்றியிலக்கை நிர்ணயிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 29 ஓட்டங்களை பெற்றது.
பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிசங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஸ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ
மேற்கிந்திய தீவுகள் அணி
க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல்
இறுதிநாளான இன்று இலங்கை அணிக்கு 348 ஓட்டங்களை பெறவேண்டிய தேவை இருந்த போதும், மே.தீவுகள் அணிக்கு 10 விக்கெட்டுகள் வெற்றிக்கு தேவைப்பட்டது. போட்டியின் வெற்றிக்கான வாய்ப்பு மே.தீவுகள் அணிக்கு அதிகமாக இருந்த போதும், இன்றைய தினம் இலங்கை அணி வெளிப்படுத்திய துடுப்பாட்ட பிரகாசிப்பு அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற உதவியது.
இந்த டெஸ்ட் தொடரில் மிகச்சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஜோடி பகிர்ந்தது. ஆட்டத்தின் மதியபோசன இடைவேளை வரை இவர்கள் இருவரும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தடினர். எனினும் மதியபோசன இடைவேளையின் பின்னர் லஹிரு திரிமான்ன 39 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன தேநீர் இடைவேளைக்கு சற்றுமுன்னர் 75 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தேநீர் இடைவேளையின் பின்னர் போட்டி சமனிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓசத பெர்னாண்டோ மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோர் இணைந்து போட்டியை சமப்படுத்தினர். இவர்களின் பங்களிப்புடன் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இரண்டு அணித்தலைவர்களும் போட்டியை சமனிலைப்படுத்த முடிவுசெய்தனர்.
திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோரின் பங்களிப்புக்கு பின்னர், ஓசத பெர்னாண்டோ 66 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் அல்ஷாரி ஜோசப் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்திளர்.
டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை அணி தெடரை 0-0 என சமப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், ஒருநாள் மற்றும் T20I தொடர்களை இலங்கை அணி இழந்துள்ளது. டெஸ்ட் தொடரின் சிறப்பாட்டக்காரராக 11 விக்கெட்டுகளை வீழ்த்திய சுரங்க லக்மால் தெரிவுசெய்யப்பட்டார். தற்போது நாடு திரும்பவுள்ள இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தகக்து.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | b Dushmantha Chameera | 126 | 311 | 13 | 0 | 40.51 |
John Campbell | c Niroshan Dickwella b Suranga Lakmal | 5 | 24 | 1 | 0 | 20.83 |
Nkrumah Bonner | b Suranga Lakmal | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Kyle Mayers | c Niroshan Dickwella b Vishwa Fernando | 49 | 61 | 8 | 0 | 80.33 |
Jermaine Blackwood | c Niroshan Dickwella b Suranga Lakmal | 18 | 29 | 2 | 1 | 62.07 |
Jason Holder | c Lahiru Thirimanne b Dhananjaya de Silva | 30 | 34 | 5 | 0 | 88.24 |
Joshua Da Silva | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 1 | 35 | 0 | 0 | 2.86 |
Alzarri Joseph | lbw b Lasith Embuldeniya | 29 | 41 | 3 | 1 | 70.73 |
Rahkeem Cornwall | c Vishwa Fernando b Suranga Lakmal | 73 | 92 | 10 | 1 | 79.35 |
Kemar Roach | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 9 | 36 | 1 | 0 | 25.00 |
Shannon Gabriel | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 13 (b 0 , lb 6 , nb 7, w 0, pen 0) |
Total | 354/10 (111.1 Overs, RR: 3.18) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 28 | 11 | 94 | 4 | 3.36 | |
Vishwa Fernando | 27 | 4 | 71 | 1 | 2.63 | |
Lasith Embuldeniya | 25 | 5 | 88 | 1 | 3.52 | |
Dushmantha Chameera | 21.1 | 4 | 69 | 3 | 3.27 | |
Dhananjaya de Silva | 10 | 3 | 26 | 1 | 2.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | c Nkrumah Bonner b Alzarri Joseph | 1 | 17 | 0 | 0 | 5.88 |
Lahiru Thirimanne | b Kemar Roach | 55 | 106 | 6 | 0 | 51.89 |
Oshada Fernando | lbw b Kyle Mayers | 18 | 71 | 1 | 0 | 25.35 |
Dinesh Chandimal | c Hayden Walsh b Shannon Gabriel | 44 | 101 | 5 | 0 | 43.56 |
Dhananjaya de Silva | lbw b Jermaine Blackwood | 39 | 140 | 1 | 0 | 27.86 |
Pathum Nissanka | c Hayden Walsh b Kemar Roach | 51 | 131 | 0 | 0 | 38.93 |
Niroshan Dickwella | c Joshua Da Silva b Jason Holder | 20 | 25 | 0 | 0 | 80.00 |
Suranga Lakmal | c Kraig Brathwaite b Alzarri Joseph | 6 | 9 | 0 | 0 | 66.67 |
Dushmantha Chameera | c Joshua Da Silva b Jason Holder | 2 | 26 | 0 | 0 | 7.69 |
Lasith Embuldeniya | not out | 5 | 21 | 0 | 0 | 23.81 |
Vishwa Fernando | c Joshua Da Silva b Kemar Roach | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 4 , lb 5 , nb 7, w 1, pen 0) |
Total | 258/10 (108 Overs, RR: 2.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 19 | 5 | 59 | 3 | 3.11 | |
Shannon Gabriel | 16 | 3 | 37 | 1 | 2.31 | |
Alzarri Joseph | 22 | 4 | 64 | 2 | 2.91 | |
Jason Holder | 21 | 3 | 39 | 2 | 1.86 | |
Kyle Mayers | 11 | 7 | 10 | 1 | 0.91 | |
Rahkeem Cornwall | 15 | 5 | 25 | 0 | 1.67 | |
Jermaine Blackwood | 4 | 0 | 16 | 1 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | b Dushmantha Chameera | 85 | 196 | 4 | 0 | 43.37 |
John Campbell | c Niroshan Dickwella b Suranga Lakmal | 10 | 25 | 1 | 0 | 40.00 |
Jermaine Blackwood | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 18 | 41 | 2 | 0 | 43.90 |
Kyle Mayers | lbw b Suranga Lakmal | 55 | 76 | 8 | 0 | 72.37 |
Jason Holder | not out | 71 | 88 | 7 | 0 | 80.68 |
Joshua Da Silva | not out | 20 | 16 | 2 | 0 | 125.00 |
Extras | 21 (b 2 , lb 12 , nb 6, w 1, pen 0) |
Total | 280/4 (72.4 Overs, RR: 3.85) |
Did not bat | Nkrumah Bonner, Alzarri Joseph, Rahkeem Cornwall, Kemar Roach, Shannon Gabriel, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 14 | 3 | 62 | 2 | 4.43 | |
Vishwa Fernando | 12.4 | 1 | 49 | 0 | 3.95 | |
Dhananjaya de Silva | 28 | 3 | 81 | 0 | 2.89 | |
Dushmantha Chameera | 18 | 0 | 74 | 2 | 4.11 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | c Rahkeem Cornwall b Alzarri Joseph | 39 | 114 | 5 | 0 | 34.21 |
Dimuth Karunarathne | lbw b Kyle Mayers | 75 | 176 | 9 | 0 | 42.61 |
Oshada Fernando | not out | 66 | 119 | 8 | 0 | 55.46 |
Dinesh Chandimal | not out | 10 | 66 | 1 | 0 | 15.15 |
Extras | 3 (b 0 , lb 1 , nb 1, w 1, pen 0) |
Total | 193/2 (79 Overs, RR: 2.44) |
Did not bat | Dhananjaya de Silva, Pathum Nissanka, Niroshan Dickwella, Suranga Lakmal, Lasith Embuldeniya, Dushmantha Chameera, Vishwa Fernando, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 12 | 2 | 33 | 0 | 2.75 | |
Jason Holder | 10 | 3 | 24 | 0 | 2.40 | |
Rahkeem Cornwall | 26.4 | 8 | 53 | 0 | 2.01 | |
Shannon Gabriel | 5.2 | 2 | 20 | 0 | 3.85 | |
Alzarri Joseph | 10 | 2 | 33 | 1 | 3.30 | |
Jermaine Blackwood | 6 | 1 | 17 | 0 | 2.83 | |
Kraig Brathwaite | 3 | 0 | 7 | 0 | 2.33 | |
Kyle Mayers | 6 | 4 | 5 | 1 | 0.83 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<