மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 255 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் 271 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தநிலையில், மே.தீவுகள் அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும், இன்றைய தினம் எந்தவொரு ஓட்டங்களையும் மே.தீவுகள் அணியால் பெறமுடியவில்லை.
>> லக்மாலின் 5 விக்கெட் பிரதியை கடந்தும் முன்னேறிய மே.தீவுகள்
இன்றைய தினம் இலங்கை அணியின் இரண்டாவது ஓவரை வீசிய விஷ்வ பெர்னாண்டோ, ரகீம் கொர்ன்வல் (61) மற்றும் செனொன் கேப்ரியல் (0) ஆகியோரை தன்னுடைய ஒரே ஓவரில் வீழ்த்தி, சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம் 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மே.தீவுகள் அணி 102 ஓட்டங்கள் முன்னிலையை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிசங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஸ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ
மேற்கிந்திய தீவுகள் அணி
க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல்
பின்னர் 102 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, அணித்தலைவர் திமுத் கருணாரத்னவை (3 )ஆரம்பத்திலேயே இழந்த போதும், ஓசத பெர்னாண்டோ, லஹிரு திரிமான்ன, தனன்ஜய டி சில்வா மற்றும் பெதும் நிசங்க ஆகியோரின் சிறப்பாட்டத்தின் உதவியுடன் ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஓசத பெர்னாண்டோ மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்காக 162 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில், 91 ஓட்டங்களை பெற்றிருந்த ஓசத பெர்னாண்டோ இரண்டாவது டெஸ்ட் சதத்தை பெறமுடியாமல் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் வருகைத்தந்த தினேஷ் சந்திமால் 4 ஓட்டங்களுடன் வெளியேற, லஹிரு திரிமான்ன 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், இவர்களுக்கு அடுத்தப்படியாக களமிறங்கிய தனன்ஜய டி சில்வா மற்றும் பெதும் நிசங்க ஆகியோர் ஆட்டநேர இறுதிவரை விக்கெட்டினை விட்டுக்கொடுக்கமால் ஆடினர்.
ஐந்தாவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை இவர்கள் பகிர்ந்துள்ள நிலையில், தனன்ஜய டி சில்வா 46 ஓட்டங்களையும், பெதும் நிசங்க 21 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர். மே.தீவுகள் அணியின் பந்துவீச்சில் கெயல் மேயர்ஸ் மற்றும் கெமார் ரோச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணியை விட, இலங்கை அணி 153 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | c John Campbell b Rahkeem Cornwall | 12 | 43 | 1 | 0 | 27.91 |
Lahiru Thirimanne | b Jason Holder | 70 | 180 | 4 | 0 | 38.89 |
Oshada Fernando | run out () | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Dinesh Chandimal | c Joshua Da Silva b Jason Holder | 4 | 25 | 0 | 0 | 16.00 |
Dhananjaya de Silva | b Kemar Roach | 13 | 26 | 2 | 0 | 50.00 |
Pathum Nissanka | c Jason Holder b Kemar Roach | 9 | 12 | 2 | 0 | 75.00 |
Niroshan Dickwella | c Rahkeem Cornwall b Jason Holder | 32 | 76 | 2 | 0 | 42.11 |
Suranga Lakmal | c Kraig Brathwaite b Jason Holder | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Dushmantha Chameera | b Kemar Roach | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Lasith Embuldeniya | lbw b Jason Holder | 3 | 15 | 0 | 0 | 20.00 |
Vishwa Fernando | not out | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Extras | 16 (b 4 , lb 6 , nb 1, w 5, pen 0) |
Total | 169/10 (69.4 Overs, RR: 2.43) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 16 | 2 | 47 | 3 | 2.94 | |
Shannon Gabriel | 9 | 2 | 22 | 0 | 2.44 | |
Rahkeem Cornwall | 14 | 6 | 25 | 1 | 1.79 | |
Alzarri Joseph | 11 | 2 | 32 | 0 | 2.91 | |
Jason Holder | 17.4 | 6 | 27 | 5 | 1.55 | |
Kyle Mayers | 2 | 0 | 6 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | c Dhananjaya de Silva b Suranga Lakmal | 3 | 43 | 0 | 0 | 6.98 |
John Campbell | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 42 | 148 | 4 | 0 | 28.38 |
Nkrumah Bonner | lbw b Lasith Embuldeniya | 31 | 63 | 5 | 0 | 49.21 |
Kyle Mayers | c Dhananjaya de Silva b Suranga Lakmal | 45 | 70 | 6 | 2 | 64.29 |
Jermaine Blackwood | b Suranga Lakmal | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Jason Holder | b Suranga Lakmal | 19 | 61 | 2 | 0 | 31.15 |
Joshua Da Silva | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 46 | 124 | 5 | 0 | 37.10 |
Alzarri Joseph | c Dinesh Chandimal b Suranga Lakmal | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Rahkeem Cornwall | b Vishwa Fernando | 61 | 85 | 9 | 2 | 71.76 |
Kemar Roach | not out | 5 | 15 | 1 | 0 | 33.33 |
Shannon Gabriel | lbw b Vishwa Fernando | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 1 , lb 6 , nb 9, w 1, pen 0) |
Total | 271/10 (103 Overs, RR: 2.63) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 25 | 9 | 47 | 5 | 1.88 | |
Vishwa Fernando | 17 | 6 | 52 | 2 | 3.06 | |
Dushmantha Chameera | 22 | 1 | 71 | 2 | 3.23 | |
Lasith Embuldeniya | 28 | 6 | 64 | 1 | 2.29 | |
Dhananjaya de Silva | 11 | 2 | 30 | 0 | 2.73 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | b Kemar Roach | 76 | 201 | 4 | 0 | 37.81 |
Dimuth Karunarathne | c John Campbell b Kemar Roach | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Oshada Fernando | c Joshua Da Silva b Kyle Mayers | 91 | 149 | 11 | 0 | 61.07 |
Dinesh Chandimal | c Joshua Da Silva b Kyle Mayers | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Dhananjaya de Silva | b Alzarri Joseph | 50 | 79 | 6 | 0 | 63.29 |
Pathum Nissanka | c Kemar Roach b Rahkeem Cornwall | 103 | 252 | 6 | 0 | 40.87 |
Niroshan Dickwella | b Kemar Roach | 96 | 163 | 8 | 0 | 58.90 |
Suranga Lakmal | run out () | 8 | 24 | 0 | 0 | 33.33 |
Lasith Embuldeniya | c Kyle Mayers b Rahkeem Cornwall | 6 | 9 | 0 | 0 | 66.67 |
Dushmantha Chameera | c Jason Holder b Rahkeem Cornwall | 10 | 11 | 0 | 1 | 90.91 |
Vishwa Fernando | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 29 (b 13 , lb 5 , nb 11, w 0, pen 0) |
Total | 476/10 (149.5 Overs, RR: 3.18) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 27 | 3 | 74 | 3 | 2.74 | |
Shannon Gabriel | 18 | 2 | 67 | 0 | 3.72 | |
Jason Holder | 22 | 4 | 40 | 0 | 1.82 | |
Alzarri Joseph | 21 | 2 | 83 | 1 | 3.95 | |
Rahkeem Cornwall | 42.5 | 4 | 137 | 3 | 3.22 | |
Kraig Brathwaite | 9 | 1 | 30 | 0 | 3.33 | |
Kyle Mayers | 9 | 2 | 24 | 2 | 2.67 | |
Jermaine Blackwood | 1 | 0 | 3 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | b Lasith Embuldeniya | 23 | 124 | 0 | 0 | 18.55 |
John Campbell | c Niroshan Dickwella b Vishwa Fernando | 11 | 15 | 2 | 0 | 73.33 |
Nkrumah Bonner | not out | 113 | 274 | 13 | 1 | 41.24 |
Kyle Mayers | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 52 | 113 | 5 | 0 | 46.02 |
Jermaine Blackwood | b Vishwa Fernando | 4 | 29 | 0 | 0 | 13.79 |
Jason Holder | not out | 18 | 48 | 4 | 0 | 37.50 |
Extras | 15 (b 4 , lb 8 , nb 3, w 0, pen 0) |
Total | 236/4 (100 Overs, RR: 2.36) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 25 | 10 | 33 | 0 | 1.32 | |
Vishwa Fernando | 19 | 0 | 73 | 2 | 3.84 | |
Lasith Embuldeniya | 28 | 9 | 62 | 2 | 2.21 | |
Dushmantha Chameera | 18 | 3 | 44 | 0 | 2.44 | |
Dhananjaya de Silva | 10 | 5 | 12 | 0 | 1.20 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<