சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இன்று ஆரம்பமானது. முதலாவது நாள் ஆட்ட நிறைவில், தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
புகைப்பட தொகுதி தென்னாபிரிக்கா எதிர் இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் நாள்
முதல் டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தோல்வியுற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதனை தொடர்ந்து தென்னாபிரிக்க அணியின் ஸ்டெபான் குக் மற்றும் டீன் எல்கர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். முதலாவது விக்கெட்டாக ஸ்டெபான் குக் ஓட்டம் எதுவும் பெறாமல் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் குசல் மெண்டிசிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹஷிம் அம்லா டீன் எல்கருடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை, 29 ஓட்டங்களுக்கு லஹிரு குமாரவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் துஸ்மந்த சமீரவுக்கு பதிலாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள லஹிறு குமார இணைத்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது முதல் இன்னின்சுக்காக களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 169 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டீன் எல்கர் 15 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 230 பந்துகளுக்கு 129 ஓட்டங்களை விளாசி தென்னாபிரிக்க அணியை மீட்டெடுத்ததோடு தென்னாபிரிக்க அணி 297 ஓட்டங்களை பெறுவதற்கு வழிவகுத்தார். இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டீன் எல்கர் 129 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் தலைவர் டு ப்லெசிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
ஸ்கோர் விபரம் :
முதல் இன்னிங்ஸ் – தென்னாபிரிக்கா