Home Tamil சந்திமால், தனன்ஜயவின் போராட்டத்தின் பின் இலங்கைக்கு தோல்வி

சந்திமால், தனன்ஜயவின் போராட்டத்தின் பின் இலங்கைக்கு தோல்வி

Sri Lanka tour of South Africa 2024

7

தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த இமாலய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் போராட்டத்தின் பின்னர் 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 516 என்ற பாரிய வெற்றியிலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்திருந்தது. 

குறித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் 105 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 

நான்காவது நாளான இன்று இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் நேர்த்தியான முறையில் ஓட்டங்களை குவித்து அணிக்கு ஆறுதல் கொடுத்தனர். எனினும் மதியபோசன இடைவேளைக்கு சற்று முன்னர் அரைச்சதம் கடந்த 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் 95 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற்ற பின்னர், குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரும் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய பின்னர் சற்று வேகமாக ஓட்டங்கள் பெறப்பட்டுவந்த போதும், துரதிஷ்டவசமாக 83 ஓட்டங்களை பெற்றிருந்த தினேஷ் சந்திமால், ஜெரால்ட் கோட்ஷியாவின்  பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து 48 ஓட்டங்களை பெற்றிருந்த குசல் மெண்டிஸ் களத்திலிருந்து வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

தென்னாபிரிக்காவின் பந்துவீச்சை பொருத்தவரை மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளையும், அணியின் ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர் 

அதேநேரம் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதன்முறையாக டர்பன் கிங்ஸ்மீட் மைானத்தில்  இலங்கை அணியை வீழ்த்தியுள்ளதுடன், தொடரிலும் 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது. 

Result


South Africa
191/10 (49.4) & 366/5 (100.4)

Sri Lanka
42/10 (13.5) & 282/10 (79.4)

Batsmen R B 4s 6s SR
Aiden Markram c Angelo Mathews b Asitha Fernando 9 11 2 0 81.82
Tony de Zorzi c Kusal Mendis b Vishwa Fernando 4 9 1 0 44.44
Tristan Stubbs c Dimuth Karunaratne b Lahiru Kumara 16 38 3 0 42.11
Temba Bavuma c Lahiru Kumara b Asitha Fernando 70 117 9 1 59.83
David Bedingham b Lahiru Kumara 4 6 1 0 66.67
Kyle Verreynne lbw b Lahiru Kumara 9 22 2 0 40.91
Wiaan Mulder not out 9 12 0 1 75.00
Marco Jansen lbw b Prabath Jayasuriya 13 21 2 0 61.90
Gerald Coetzee c Kusal Mendis b Prabath Jayasuriya 1 8 0 0 12.50
Keshav Maharaj c Dhananjaya de Silva b Vishwa Fernando 24 35 3 1 68.57
Kagiso Rabada c Dinesh Chandimal b Asitha Fernando  15 23 2 0 65.22


Extras 17 (b 2 , lb 5 , nb 4, w 6, pen 0)
Total 191/10 (49.4 Overs, RR: 3.85)
Bowling O M R W Econ
Asitha Fernando 14.4 3 44 3 3.06
Vishwa Fernando 15 2 35 2 2.33
Angelo Mathews 2 2 0 0 0.00
Lahiru Kumara 12 1 70 3 5.83
Prabath Jayasuriya 5 1 24 2 4.80
Dhananjaya de Silva 1 0 11 0 11.00
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tristan Stubbs b Marco Jansen 3 12 0 0 25.00
Dimuth Karunaratne c David Bedingham b Kagiso Rabada 2 9 0 0 22.22
Dinesh Chandimal b Marco Jansen 0 4 0 0 0.00
Angelo Mathews c David Bedingham b Marco Jansen 1 14 0 0 7.14
Kamindu Mendis c David Bedingham b Gerald Coetzee 13 20 3 0 65.00
Dhananjaya de Silva b Marco Jansen 7 12 1 0 58.33
Kusal Mendis lbw b Gerald Coetzee 0 3 0 0 0.00
Prabath Jayasuriya c Tristan Stubbs b Marco Jansen 0 3 0 0 0.00
Vishwa Fernando b Marco Jansen 0 3 0 0 0.00
Lahiru Kumara not out 10 5 2 0 200.00
Asitha Fernando c & b Marco Jansen 0 2 0 0 0.00


Extras 6 (b 0 , lb 1 , nb 4, w 1, pen 0)
Total 42/10 (13.5 Overs, RR: 3.04)
Bowling O M R W Econ
Kagiso Rabada 4 1 10 1 2.50
Marco Jansen 6.5 1 13 7 2.00
Gerald Coetzee 3 0 18 2 6.00
Batsmen R B 4s 6s SR
Tony de Zorzi c Asitha Fernando b Prabath Jayasuriya 17 32 2 0 53.12
Aiden Markram b Vishwa Fernando 47 81 4 1 58.02
Wiaan Mulder lbw b Prabath Jayasuriya 15 31 1 0 48.39
Tristan Stubbs b Vishwa Fernando 122 221 9 2 55.20
Temba Bavuma lbw b Asitha Fernando  113 228 9 0 49.56
David Bedingham not out 21 11 2 1 190.91


Extras 31 (b 6 , lb 24 , nb 0, w 1, pen 0)
Total 366/5 (100.4 Overs, RR: 3.64)
Bowling O M R W Econ
Asitha Fernando 17.4 2 54 1 3.10
Vishwa Fernando 18 2 64 2 3.56
Lahiru Kumara 18 5 43 0 2.39
Prabath Jayasuriya 40 2 132 2 3.30
Dhananjaya de Silva 6 0 31 0 5.17
Kamindu Mendis 1 0 12 0 12.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Gerald Coetzee 23 31 4 0 74.19
Dimuth Karunaratne c Tristan Stubbs b Kagiso Rabada 4 18 1 0 22.22
Dinesh Chandimal c & b Gerald Coetzee 83 174 12 0 47.70
Angelo Mathews lbw b Marco Jansen 25 42 2 0 59.52
Kamindu Mendis c Kyle Verreynne b Marco Jansen 10 28 0 1 35.71
Prabath Jayasuriya c Tony de Zorzi b Kagiso Rabada 1 12 0 0 8.33
Dhananjaya de Silva c Tristan Stubbs b Keshav Maharaj 59 81 9 1 72.84
Kusal Mendis c Kyle Verreynne b Marco Jansen 48 77 9 0 62.34
Vishwa Fernando c Aiden Markram b Keshav Maharaj 1 5 0 0 20.00
Lahiru Kumara not out 5 15 1 0 33.33
Asitha Fernando b Marco Jansen 0 8 0 0 0.00


Extras 23 (b 4 , lb 6 , nb 13, w 0, pen 0)
Total 282/10 (79.4 Overs, RR: 3.54)
Bowling O M R W Econ
Kagiso Rabada 21 3 65 2 3.10
Marco Jansen 21.4 5 73 4 3.41
Gerald Coetzee 13 0 67 2 5.15
Keshav Maharaj 24 5 67 2 2.79



>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<