Home Tamil இரண்டாவது டெஸ்டில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை!

இரண்டாவது டெஸ்டில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை!

Sri Lanka tour of South Africa 2020-21

294
ICC Twitter

சுற்றுலா இலங்கை அணிக்கெதிராக, வொண்டரசில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர நிறைவில் தென்னாபிரிக்க அணி அபாரமான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி பலமான நிலையில் உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், மினோத் பானுக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணியில் அறிமுகமாகியிருந்தனர். தென்னாபிரிக்க அணி முதல் போட்டியில் ஆடிய அதே பதினொருவருடன் களமிறங்கியிருந்தது.

யாரை நாளை இலங்கை டெஸ்ட் அணி களமிறக்கும்?

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், மினோத் பானுக, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ

தென்னாபிரிக்கா அணி

டீன் எல்கர், எய்டன் மர்க்ரம், ரஸ்ஸி வென் டர் டஸன், பெப் டு ப்ளெசிஸ், குயிண்டன் டி கொக் (தலைவர்), தெம்பா பவுமா, வியாம் முல்டர், கேஷவ் மஹாராஜ், என்ரிச் நோக்கியா, லூதோ சிபம்லா, லுங்கி என்கிடி

நாணய சுழற்சியின் வெற்றியின் அடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்று, 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், என்ரிச் நோக்கியா மற்றும் வியாம் முல்டர் ஆகியோரின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல், 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணிசார்பில் அதிகபட்சமாக குசல் பெரேரா 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களையும், துஷ்மந்த சமீர 22 ஓட்டங்களையும் போராடி பெற்றுக்கொண்டனர். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் என்ரிச் நோக்கியா 6 விக்கெட்டுகளையும், வியாம் முல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தொன்னாபிரிக்க அணி எய்டன் மர்க்கமின் விக்கெட்டை ஆரம்பத்தில் இழந்த போதும், டீன் எல்கரின் அரைச்சதம் மற்றும் ரஸ்ஸி வென் டெர் டஸனின் பொறுமையான துடுப்பாட்டம் என்பவற்றின் ஊடாக, இன்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில், ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து, 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

யாரை நாளை இலங்கை டெஸ்ட் அணி களமிறக்கும்?

தென்னாபிரிக்க அணி சார்பில், டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ரஸ்ஸி வென் டெர் டஸன் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில், இன்றைய தினம் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றிருந்த அசித பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Result


South Africa
302/10 (75.4) & 67/0 (13.2)

Sri Lanka
157/10 (40.3) & 211/10 (56.5)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Quinton de Kock b Anrich Nortje 2 32 0 0 6.25
Kusal Perera c Aiden Markram b Wiaan Mulder 60 67 11 0 89.55
Lahiru Thirimanne c Faf du Plessis b Wiaan Mulder 17 30 3 0 56.67
Kusal Mendis c Rassie van der Dussen b Wiaan Mulder 0 4 0 0 0.00
Minod Bhanuka c Rassie van der Dussen b Anrich Nortje 5 10 1 0 50.00
Niroshan Dickwella c Quinton de Kock b Anrich Nortje 7 10 1 0 70.00
Dasun Shanaka c Quinton de Kock b Anrich Nortje 4 17 0 0 23.53
Wanindu Hasaranga c Quinton de Kock b Lutho Sipamla 29 27 5 0 107.41
Dushmantha Chameera c Quinton de Kock b Anrich Nortje 22 29 4 0 75.86
Vishwa Fernando not out 2 11 0 0 18.18
Asitha Fernando b Anrich Nortje 4 6 1 0 66.67


Extras 5 (b 0 , lb 5 , nb 0, w 0, pen 0)
Total 157/10 (40.3 Overs, RR: 3.88)
Bowling O M R W Econ
Lungi Ngidi 10 3 44 0 4.40
Anrich Nortje 14.3 1 56 6 3.92
Lutho Sipamla 9 3 27 1 3.00
Wiaan Mulder 7 3 25 3 3.57
Batsmen R B 4s 6s SR
Dean Elgar c Lahiru Thirimanne b Dushmantha Chameera 127 163 22 0 77.91
Aiden Markram c Kusal Mendis b Asitha Fernando 5 21 0 0 23.81
Rassie van der Dussen c Niroshan Dickwella b Dasun Shanaka 67 127 12 0 52.76
Quinton de Kock c Kusal Mendis b Vishwa Fernando 10 20 1 0 50.00
Faf du Plessis c Niroshan Dickwella b Dasun Shanaka 8 15 1 0 53.33
Temba Bavuma lbw b Vishwa Fernando 19 30 3 1 63.33
Wiaan Mulder lbw b Vishwa Fernando 7 17 1 0 41.18
Keshav Maharaj c Niroshan Dickwella b Asitha Fernando 2 8 0 0 25.00
Anrich Nortje c Kusal Mendis b Vishwa Fernando 13 16 2 0 81.25
Lutho Sipamla c Dasun Shanaka b Vishwa Fernando 5 19 1 0 26.32
Lungi Ngidi not out 14 18 3 0 77.78


Extras 25 (b 8 , lb 14 , nb 0, w 3, pen 0)
Total 302/10 (75.4 Overs, RR: 3.99)
Bowling O M R W Econ
Vishwa Fernando 23.4 0 101 5 4.32
Asitha Fernando 19 5 61 2 3.21
Dushmantha Chameera 14 1 53 1 3.79
Dasun Shanaka 15 4 42 2 2.80
Wanindu Hasaranga 4 0 23 0 5.75
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Wiaan Mulder b Anrich Nortje 103 128 19 0 80.47
Kusal Perera b Lungi Ngidi 1 7 0 0 14.29
Lahiru Thirimanne c Quinton de Kock b Lungi Ngidi 31 57 7 0 54.39
Kusal Mendis c Quinton de Kock b Lungi Ngidi 0 1 0 0 0.00
Minod Bhanuka c Keshav Maharaj b Anrich Nortje 1 7 0 0 14.29
Niroshan Dickwella c Temba Bavuma b Lungi Ngidi 36 68 6 0 52.94
Dasun Shanaka c Lutho Sipamla b Wiaan Mulder 8 24 1 0 33.33
Wanindu Hasaranga b Lutho Sipamla 16 32 2 0 50.00
Dushmantha Chameera c Quinton de Kock b Lutho Sipamla 0 10 0 0 0.00
Vishwa Fernando not out 1 7 0 0 14.29
Asitha Fernando b Lutho Sipamla 0 2 0 0 0.00


Extras 14 (b 9 , lb 2 , nb 2, w 1, pen 0)
Total 211/10 (56.5 Overs, RR: 3.71)
Bowling O M R W Econ
Lungi Ngidi 15 5 44 4 2.93
Anrich Nortje 19 2 64 2 3.37
Wiaan Mulder 13 3 52 1 4.00
Lutho Sipamla 9.5 1 39 3 4.11


Batsmen R B 4s 6s SR
Dean Elgar not out 31 27 5 0 114.81
Aiden Markram not out 36 53 4 0 67.92


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 67/0 (13.2 Overs, RR: 5.03)
Bowling O M R W Econ
Vishwa Fernando 4 0 23 0 5.75
Asitha Fernando 4 1 20 0 5.00
Wanindu Hasaranga 2.2 0 16 0 7.27
Dasun Shanaka 3 1 8 0 2.67



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<