Home Tamil டெஸ்ட் தொடரினை முழுமையாக இழந்த இலங்கை அணி

டெஸ்ட் தொடரினை முழுமையாக இழந்த இலங்கை அணி

Sri Lanka tour of South Africa 2020-21

271
Sri Lanka tour of South Africa 2020-21
AFP via Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.

மேலும், இந்த வெற்றியுடன் தென்னாபிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. 

>> சரிவிலிருந்து மீள முயற்சிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

ஜொஹன்னஸ்பேர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) தொடக்கம் நடைபெற்றுவந்த இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது நேற்று (04) நிறைவுக்கு வந்திருந்தது. 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை (157), தென்னாபிரிக்கா (302) ஆகியவற்றின் முதல் இரண்டு இன்னிங்ஸ்களையும் அடுத்து மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை  அணி 150 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில், திமுத் கருணாரத்ன 91 ஓட்டங்களுடனும், நிரோஷன் டிக்வெல்ல 18 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர். 

பின்னர், போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில் தென்னாபிரிக்க வீரர்களை விட 05 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி, குறித்த முன்னிலையினை அதிகரித்து தென்னாபிரிக்க அணிக்கு ஒரு சிறந்த வெற்றி இலக்கினை நிர்ணயிக்கும் நோக்குடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்தது. 

இலங்கை அணிக்காக இன்றைய நாளில் திமுத் கருணாரத்ன அவரின் 10ஆவது டெஸ்ட் சதத்தோடு சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும், மறுமுனையில் தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் மிகப் பெரிய நெருக்கடி ஒன்றினை உருவாக்கினார். இதனால், தொடர்ச்சியாக தமது துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி 56.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சதம் கடந்த திமுத் கருணாரத்ன 128 பந்துகளில் 19 பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில், நிரோஷன் டிக்வெல்ல 36 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக லுங்கி ன்கிடி 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், லுத்தோ சிபம்லா 3 விக்கெட்டுக்களையும், வியான் முல்டர் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். 

பின்னர், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 67 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி இரண்டாம் நாளின் மதிய போசண இடைவேளையினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்கினை 13.2 ஓவர்களில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காமல் 67 ஓட்டங்களுடன் அடைந்தது. 

தென்னாபிரிக்க அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் எய்டன் மார்க்ரம் 36 ஓட்டங்களையும், டீன் எல்கார் 31 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றனர். 

இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடனும், இந்த தொடரின் முதல் போட்டியில் கிடைத்த வெற்றியுடனும் தென்னாபிரிக்க அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றி ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அதன் தொடர் ஒன்றுக்கு வழங்கப்படும் 120 புள்ளிகளையும் எடுத்துக் கொள்கின்றது. 

போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரரான டீன் எல்கார் தெரிவு செய்யப்பட்டார். 

>> இலங்கை வந்துள்ள மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று!

மறுமுனையில், இப்போட்டியில் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரினை இழந்திருக்கும் இலங்கை அணி தமது அடுத்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியினை எதிர்வரும் 14ஆம் திகதி எதிர்கொள்கின்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி நகரில் ஆரம்பமாகின்றது.  

ஸ்கோர் சுருக்கம்

Result


South Africa
302/10 (75.4) & 67/0 (13.2)

Sri Lanka
157/10 (40.3) & 211/10 (56.5)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Quinton de Kock b Anrich Nortje 2 32 0 0 6.25
Kusal Perera c Aiden Markram b Wiaan Mulder 60 67 11 0 89.55
Lahiru Thirimanne c Faf du Plessis b Wiaan Mulder 17 30 3 0 56.67
Kusal Mendis c Rassie van der Dussen b Wiaan Mulder 0 4 0 0 0.00
Minod Bhanuka c Rassie van der Dussen b Anrich Nortje 5 10 1 0 50.00
Niroshan Dickwella c Quinton de Kock b Anrich Nortje 7 10 1 0 70.00
Dasun Shanaka c Quinton de Kock b Anrich Nortje 4 17 0 0 23.53
Wanindu Hasaranga c Quinton de Kock b Lutho Sipamla 29 27 5 0 107.41
Dushmantha Chameera c Quinton de Kock b Anrich Nortje 22 29 4 0 75.86
Vishwa Fernando not out 2 11 0 0 18.18
Asitha Fernando b Anrich Nortje 4 6 1 0 66.67


Extras 5 (b 0 , lb 5 , nb 0, w 0, pen 0)
Total 157/10 (40.3 Overs, RR: 3.88)
Bowling O M R W Econ
Lungi Ngidi 10 3 44 0 4.40
Anrich Nortje 14.3 1 56 6 3.92
Lutho Sipamla 9 3 27 1 3.00
Wiaan Mulder 7 3 25 3 3.57
Batsmen R B 4s 6s SR
Dean Elgar c Lahiru Thirimanne b Dushmantha Chameera 127 163 22 0 77.91
Aiden Markram c Kusal Mendis b Asitha Fernando 5 21 0 0 23.81
Rassie van der Dussen c Niroshan Dickwella b Dasun Shanaka 67 127 12 0 52.76
Quinton de Kock c Kusal Mendis b Vishwa Fernando 10 20 1 0 50.00
Faf du Plessis c Niroshan Dickwella b Dasun Shanaka 8 15 1 0 53.33
Temba Bavuma lbw b Vishwa Fernando 19 30 3 1 63.33
Wiaan Mulder lbw b Vishwa Fernando 7 17 1 0 41.18
Keshav Maharaj c Niroshan Dickwella b Asitha Fernando 2 8 0 0 25.00
Anrich Nortje c Kusal Mendis b Vishwa Fernando 13 16 2 0 81.25
Lutho Sipamla c Dasun Shanaka b Vishwa Fernando 5 19 1 0 26.32
Lungi Ngidi not out 14 18 3 0 77.78


Extras 25 (b 8 , lb 14 , nb 0, w 3, pen 0)
Total 302/10 (75.4 Overs, RR: 3.99)
Bowling O M R W Econ
Vishwa Fernando 23.4 0 101 5 4.32
Asitha Fernando 19 5 61 2 3.21
Dushmantha Chameera 14 1 53 1 3.79
Dasun Shanaka 15 4 42 2 2.80
Wanindu Hasaranga 4 0 23 0 5.75
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Wiaan Mulder b Anrich Nortje 103 128 19 0 80.47
Kusal Perera b Lungi Ngidi 1 7 0 0 14.29
Lahiru Thirimanne c Quinton de Kock b Lungi Ngidi 31 57 7 0 54.39
Kusal Mendis c Quinton de Kock b Lungi Ngidi 0 1 0 0 0.00
Minod Bhanuka c Keshav Maharaj b Anrich Nortje 1 7 0 0 14.29
Niroshan Dickwella c Temba Bavuma b Lungi Ngidi 36 68 6 0 52.94
Dasun Shanaka c Lutho Sipamla b Wiaan Mulder 8 24 1 0 33.33
Wanindu Hasaranga b Lutho Sipamla 16 32 2 0 50.00
Dushmantha Chameera c Quinton de Kock b Lutho Sipamla 0 10 0 0 0.00
Vishwa Fernando not out 1 7 0 0 14.29
Asitha Fernando b Lutho Sipamla 0 2 0 0 0.00


Extras 14 (b 9 , lb 2 , nb 2, w 1, pen 0)
Total 211/10 (56.5 Overs, RR: 3.71)
Bowling O M R W Econ
Lungi Ngidi 15 5 44 4 2.93
Anrich Nortje 19 2 64 2 3.37
Wiaan Mulder 13 3 52 1 4.00
Lutho Sipamla 9.5 1 39 3 4.11


Batsmen R B 4s 6s SR
Dean Elgar not out 31 27 5 0 114.81
Aiden Markram not out 36 53 4 0 67.92


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 67/0 (13.2 Overs, RR: 5.03)
Bowling O M R W Econ
Vishwa Fernando 4 0 23 0 5.75
Asitha Fernando 4 1 20 0 5.00
Wanindu Hasaranga 2.2 0 16 0 7.27
Dasun Shanaka 3 1 8 0 2.67



முடிவு – தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<