Home Tamil இரட்டைச் சதத்தினை தவறவிட்ட டு பிளேசிஸ்; தென்னாபிரிக்க அணி வலுவான நிலையில்

இரட்டைச் சதத்தினை தவறவிட்ட டு பிளேசிஸ்; தென்னாபிரிக்க அணி வலுவான நிலையில்

198
AFP via Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (28) நிறைவுக்கு வந்த நிலையில் தென்னாபிரிக்க அணி பாப் டு பிளேசிஸின் அபார துடுப்பாட்டத்துடன் வலுப்பெற்றிருக்கின்றது. 

முதல்நாள் சரிவிலிருந்து மீண்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

செஞ்சூரியன் நகரில் நடைபெற்றுவருகின்ற இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (27) நிறைவுக்கு வரும் போது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸினை (396) அடுத்து பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 317 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து சிறந்த நிலையில் காணப்பட்டிருந்தது. தென்னாபிரிக்க அணி சார்பில் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த பாப் டு பிளேசிஸ் 55 ஓட்டங்களுடனும், டெம்பா பெவுமா 41 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர். 

இன்று இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தவகையில், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான கசுன் ராஜிதவும் உபாதையின் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறினார். 

இதன் பின்னர் இன்று போட்டியின் மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு இன்று (28) டெம்பா பெவுமா – பாப் டு பிளேசிஸ் ஜோடி 179 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து உதவியது. அதேநேரம், இன்றைய நாளில் முதல் விக்கெட்டாக மாறிய டெம்பா பெவுமா டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற 14ஆவது அரைச்சதத்துடன் 7 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

பெவுமா ஆட்டமிழந்த போதும் பாப் டு பிளேசிஸ் தன்னுடைய 10ஆவது டெஸ்ட் சதத்துடன் தென்னாபிரிக்க அணியினை வலுப்படுத்தினார். இதன் பின்னர், போட்டியின் மதிய போசண இடைவேளையினை அடுத்து டு பிளேசிஸ் கேசவ் மஹராஜ் உடன் இணைந்து 7ஆம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டார்.

மறுமுனையில், இலங்கை அணிக்கு மேலும் இரண்டு உபாதைச் சிக்கல்கள் ஏற்பட்டது. லஹிரு குமார, வனிந்து ஹஸரங்க ஆகியோர் தசை உபாதைகளினால் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.   

முதல் டெஸ்டிலிருந்து ராஜித நீக்கம்! குமார, வனிந்துவுக்கு உபாதை!

தொடர்ந்து மூன்றாம் நாளின் மூன்றாம் இடைவேளை வரைக்கும் நீடித்த கேசவ் மஹராஜ் – டு பிளேசிஸ் இணைப்பாட்டம் (133) தென்னாபிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 7ஆம் விக்கெட்டுக்காக பதிவு செய்த அதிகூடிய இணைப்பாட்டமாகவும் மாறியது.

பின்னர், உபாதைப் பிரச்சினையில் இருந்து மீண்டு மைதானத்திற்குள் வந்த வனிந்து ஹஸரங்க, இரட்டைச்சதத்தினை நெருங்க முற்பட்ட பாப் டு பிளேசிஸின் விக்கெட்டினைக் கைப்பற்றினாார். இதனால், டு பிளேசிஸ் 24 பௌண்டரிகளுடன் 199 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மைதானத்தினை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

பின்னர், கேசவ் மஹராஜின் துடுப்பாட்ட உதவியோடு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 142.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 621 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த 621 ஓட்டங்கள் தென்னாபிரிக்க அணி இலங்கை வீரர்களுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளின் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் மாறியது. 

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் தன்னுடைய 3ஆவது அரைச்சதத்தினைப் பதிவு செய்த கேசவ் மஹராஜ் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

Video – நேர்த்தியாக பந்துவீசினால் தொன்னப்பிரிக்காவை வீழ்த்தலாம் – Dasun Shanaka

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தனது அறிமுக டெஸ்டில் ஆடும் வனிந்து ஹஸரங்க 4 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாந்து 3 விக்கெட்டுக்களையும், தசுன் ஷானக்க 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். 

தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸினை அடுத்து 225 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (6) மற்றும் குசல் மெண்டிஸ் (0) ஆகியோர் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிலையில் ஆட்டமிழந்தது சரிவு நிலை ஒன்றினை ஏற்படுத்தியது.  

எனினும், களத்தில் இருந்த குசல் ஜனித் பெரேரா மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் பொறுப்புவாய்ந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 12 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

இலங்கை அணிக்காக களத்தில் நிற்கும் குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் லுங்கி ன்கிடி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது அழுத்தங்களுக்கு உள்ளாகிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தினை தென்னாபிரிக்க வீரர்களை விட 160 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நாளை (29) தொடரவிருக்கின்றது.  

ஸ்கோர் சுருக்கம்

Result


South Africa
621/10 (142.1)

Sri Lanka
396/10 (96) & 180/10 (46.1)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne b Lungi Ngidi 22 20 4 0 110.00
Kusal Perera c Quinton de Kock b Wiaan Mulder 16 29 2 0 55.17
Kusal Mendis c Lungi Ngidi b Anrich Nortje 12 16 2 0 75.00
Dinesh Chandimal c Faf du Plessis b Wiaan Mulder 85 161 11 0 52.80
Dhananjaya de Silva retired 79 105 11 1 75.24
Niroshan Dickwella lbw b Wiaan Mulder 49 86 6 0 56.98
Dasun Shanaka not out 66 87 3 5 75.86
Wanindu Hasaranga b Lutho Sipamla 18 20 3 0 90.00
Kasun Rajitha c Dean Elgar b Lutho Sipamla 12 49 2 0 24.49
Vishwa Fernando b Lutho Sipamla 0 1 0 0 0.00
Lahiru Kumara c Rassie van der Dussen b Lutho Sipamla 0 7 0 0 0.00


Extras 37 (b 16 , lb 9 , nb 6, w 6, pen 0)
Total 396/10 (96 Overs, RR: 4.12)
Fall of Wickets 1-28 (4.5) Dimuth Karunarathne, 2-54 (9.5) Kusal Mendis, 3-54 (10.5) Kusal Perera, 4-284 (65.4) Dinesh Chandimal, 5-296 (70.3) Niroshan Dickwella, 6-320 (76.3) Wanindu Hasaranga, 7-387 (93.2) Kasun Rajitha, 8-387 (93.3) Vishwa Fernando, 9-396 (95.6) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Lungi Ngidi 19 3 64 1 3.37
Lutho Sipamla 16 1 76 4 4.75
Anrich Nortje 22 3 88 1 4.00
Wiaan Mulder 20 4 69 3 3.45
Keshav Maharaj 19 3 74 0 3.89
Batsmen R B 4s 6s SR
Dean Elgar c & b Dasun Shanaka 95 130 16 0 73.08
Aiden Markram c Dasun Shanaka b Vishwa Fernando 68 94 14 0 72.34
Rassie van der Dussen c Niroshan Dickwella b Lahiru Kumara 15 42 2 0 35.71
Faf du Plessis c & b 199 276 24 0 72.10
Quinton de Kock c Lahiru Thirimanne b Wanindu Hasaranga 18 11 3 0 163.64
Temba Bavuma c Niroshan Dickwella b Dasun Shanaka 71 125 7 0 56.80
Wiaan Mulder c Niroshan Dickwella b Wanindu Hasaranga 36 63 4 1 57.14
Keshav Maharaj c Wanindu Hasaranga b Vishwa Fernando 73 106 6 2 68.87
Anrich Nortje c Niroshan Dickwella b Vishwa Fernando 0 3 0 0 0.00
Lutho Sipamla lbw b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Lungi Ngidi not out 2 9 0 0 22.22


Extras 44 (b 9 , lb 18 , nb 7, w 10, pen 0)
Total 621/10 (142.1 Overs, RR: 4.37)
Fall of Wickets 1-141 (28.4) Aiden Markram, 2-200 (42.6) Rassie van der Dussen, 3-200 (43.4) Dean Elgar, 4-220 (47.1) Quinton de Kock,

Bowling O M R W Econ
Vishwa Fernando 31.1 2 130 2 4.18
Kasun Rajitha 2.1 0 16 0 7.62
Dasun Shanaka 28.5 2 98 2 3.44
Wanindu Hasaranga 45 5 171 4 3.80
Lahiru Kumara 21.1 0 103 1 4.88
Dimuth Karunarathne 6.5 0 36 0 5.54
Kusal Mendis 7 0 41 0 5.86


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne b Lungi Ngidi 6 8 1 0 75.00
Kusal Perera c Quinton de Kock b Anrich Nortje 64 87 10 0 73.56
Kusal Mendis c Rassie van der Dussen b Lungi Ngidi 0 5 0 0 0.00
Dinesh Chandimal b Wiaan Mulder 25 45 4 0 55.56
Niroshan Dickwella c Quinton de Kock b Wiaan Mulder 10 15 2 0 66.67
Dasun Shanaka c Quinton de Kock b Lutho Sipamla 6 35 0 0 17.14
Wanindu Hasaranga c Temba Bavuma b Lutho Sipamla 59 53 12 1 111.32
Vishwa Fernando run out (Wiaan Mulder) 0 1 0 0 0.00
Kasun Rajitha c Keshav Maharaj b Anrich Nortje 0 27 0 0 0.00
Lahiru Kumara not out 0 5 0 0 0.00
Dhananjaya de Silva retired 0 0 0 0 0.00


Extras 10 (b 4 , lb 2 , nb 4, w 0, pen 0)
Total 180/10 (46.1 Overs, RR: 3.9)
Fall of Wickets 1-10 (2.6) Dimuth Karunarathne, 2-22 (4.5) Kusal Mendis, 3-85 (19.5) Dinesh Chandimal, 4-99 (23.6) Niroshan Dickwella, 5-114 (28.4) Kusal Perera, 6-142 (35.5) Dasun Shanaka, 7-148 (36.6) Vishwa Fernando, 8-179 (45.2) Wanindu Hasaranga, 9-180 (46.1) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Lungi Ngidi 10 2 38 2 3.80
Anrich Nortje 10.1 1 47 2 4.65
Wiaan Mulder 12 1 39 2 3.25
Lutho Sipamla 5 0 24 2 4.80
Keshav Maharaj 6 3 20 0 3.33
Aiden Markram 3 2 6 0 2.00



போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<