பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பாதுகாப்பை மீளாய்வு செய்ய அரசின் உதவியை நாடும் இலங்கை கிரிக்கெட் சபை
பாகிஸ்தானுக்கான இலங்கை தேசிய அணியின் திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு .
இலங்கை கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகள் கொண்ட இருவகை தொடர்களிலும் விளையாட முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்களை காட்டி இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் 10 பேர் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இந்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கு லஹிரு திரிமான்ன தலைமையிலான இலங்கை ஒருநாள் அணியினையும், தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை T20 அணியினையும் தெரிவு செய்திருந்தது.
இவ்வாறாக இளம் வீரர்கள் அடங்கிய இரண்டு இலங்கை குழாம்கள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்காக பாகிஸ்தான் செல்ல தயாராகியது. 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் தமது நாட்டுக்கு சர்வதேச கிரிக்கெட்டினை மீள கொண்டுவர முயற்சிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு (PCB) பெரும் ஆறுதலாக அமைந்திருந்தது.
எனினும் கடந்த வாரம், இலங்கை கிரிக்கெட் சபையிடம் இலங்கையின் பிரதமர் அலுவலகம் பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையினை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை மீள் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தது.
பாக். வீரர்களுக்கு பிரியாணி, பர்கர் சாப்பிடத் தடை
உள்நாட்டு தொடரில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகள் தவிர்க்க வேண்டும் என அந்த
அதன்படி, இலங்கையில் இருந்து பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளை அறிவதற்காக ஒரு விஷேட குழு இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பப்பட்டிருந்ததுடன், குறித்த குழு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் சிறப்பாக இருக்கின்றது என்பது உறுதி செய்யப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணமும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கை அணியின் சுற்றுப் பயணம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் நான்கு வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் முழுமையான இருதரப்பு தொடர்கள் இரண்டும் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் மீண்டும் உருவாகியிருக்கின்றது. இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் கடைசியாக இருவகைப் போட்டிகளும் கொண்ட இருதரப்பு தொடர்கள் இடம்பெற்றிருந்தது. குறித்த தொடர்களில் பாகிஸ்தான் அணியுடன் ஜிம்பாப்வே மோதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது நாட்டுக்கு வரும் இலங்கை அணி வீரர்களுக்கு தேசிய தலைவர்கள் தங்களது நாட்டுக்கு வரும் போது வழங்கப்படும் அதே உயரிய பாதுகாப்பை வழங்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.
இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் உத்தேச குழாம் அறிவிப்பு
இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணியுடன் மோதும் பாகிஸ்தான்
இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. ஒருநாள் தொடர் மூன்று போட்டிகளை கொண்டுள்ளது. இரண்டாவது போட்டி இம்மாதம் 29ஆம் திகதியும், மூன்றாவது போட்டி ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
ஒருநாள் தொடரினை அடுத்து இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெறவுள்ளது. T20 தொடரின் முதல் போட்டி ஓக்டோபர் மாதம் 5ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதியும், மூன்றாவது போட்டி ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதியும் இடம்பெறவிருக்கின்றன.
இந்த சுற்றுப் பயணத்தின் போதான ஒருநாள் போட்டிகள் யாவும் கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், T20 போட்டிகள் அனைத்தும் லாஹூரில் இடம்பெறவிருக்கின்றன.
இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஆடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இறுதி வீரர்கள் குழாம்கள் இரண்டும் இம்மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கின்றது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க