மூன்றாவது போட்டிக்கு முன்னர் T20i தொடரை கைப்பற்ற வேண்டும் – தனுஷ்க

177

இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் T20i போட்டியில் வெற்றிபெற கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க, இன்று (07) நடைபெறவுள்ள 2ஆவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20i தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது T20iபோட்டி இன்று (07) லாஹூரில் ஆரம்பமாகவுள்ளது

இளம் வீரர்களின் தன்னம்பிக்கை வெற்றிக்கு உதவியது – தசுன் ஷானக்க

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற ………

இந்த நிலையில், இரண்டாவது T20i போட்டிக்கான ஆயத்தம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தனுஷ்க குணதிலக்க,

எம்மைப் பொறுத்தமட்டில் ஒரு இளம் அணியாக முதல் T20i போட்டியில் வெற்றியீட்டியது மிகப் பெரிய விடயமாகும். இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. ஆனாலும், தற்போது பாகிஸ்தான் அணிக்கு தான் அதிகளவு அழுத்தங்கள் உள்ளன.  

எனினும், எம்மிடம் சிறந்ததொரு இளம் அணியொன்று இருப்பதால் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றால் நாட்டைப் போல இந்த அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களுக்கும் மிகப் பெரிய வெற்றியாக அது அமையும். எனவே, இன்று (07) நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெறுவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்என்றார்

இந்த நிலையில், முதல் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியை எவ்வவாறு தக்கவைத்துக் கொள்ளப் போகின்றீர்கள் என்பதற்கு பதலளித்த அவர்,

நான் ஏற்கனவே கூறியது போல இன்னும் 2 போட்டிகள் உள்ளன. எனவே, 3ஆவது போட்டி வரை செல்லாமல் இன்றைய போட்டியிலேயே வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்போம். இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணிதான் மிகப் பெரிய அழுத்தத்துக்கு முகங்கொடுத்துள்ளது

ஏனெனில் அவர்களது சொந்த மைதானத்தில் ரசிகர்களுக்கு முன்னால் விளையாடுகிறார்கள். எனவே எம்மைப் போன்ற இளம் அணியொன்று வந்து அவர்களை வீழ்த்துவதென்பதை அவர்களும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.  

ஆகவே, 3ஆவது போட்டி வரை செல்லாமல் 2ஆவது போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுவோம் என நாங்கள் பேசிக் கொண்டோம்என தெரிவித்தார்

இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடக் கிடைக்காமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கருத்து தெரிவித்த போது,

உண்மையில் அப்போது நான் உபாதைக்குள்ளாகியிருந்தேன். ஆனாலும், உலகக் கிண்ணத்துக்கு முன் நான் மாகாண அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரிலும் விiளாயாடினேன். எனினும், அந்தத் தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசித்த தவறியதால் எனக்கு உலகக் கிண்ண அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எதுஎவ்வாறாயினும், எனக்கு கிடைக்கின்ற எந்தவொரு போட்டித் தொடரிலும் விளையாடி அணிக்கு 100 சதவீத பங்களிப்பினை வழங்குவதற்கு தயாராக உள்ளேன்என தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<