இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி
தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, ஷெஹான் ஜயசூரிய, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (அணித் தலைவர்), வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, கசுன் ராஜித, நுவன் பிரதீப்
பாகிஸ்தான் அணி
பாபர் அசாம், அஹமட் சேஷாட், உமர் அக்மல், இப்திகார் அஹ்மட், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), பஹீம் அஸ்ரப், அசிப் அலி, இமாட் வசீம், சதாப் கான், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன்
இலங்கை டி-20 அணியில் திருப்பம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிடும் தசுன் சானக்க
லாஹூரில் இன்று (5) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
குறிப்பாக ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சதம் பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்து, வேகமாக ஓட்டங்களை குவித்திருந்தார். இவர், 38 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அறிமுக வீரராக களமிறங்கிய பானுக ராஜபக்ஷ தனது பங்கிற்கு 22 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றார்.
இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தாலும், அவர் இதற்காக 34 பந்துகளை எடுத்துக்கொண்டமை அணியின் ஓட்ட வேகத்தை குறைவாக்கியிருந்தது. எனினும், இறுதிக்கட்டத்தில் அணித் தலைவர் தசுன் ஷானக 10 பந்துகளில் பெற்றுக்கொடுத்த 17 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி 165 ஓட்டங்களை பெறக்கூடியதாக இருந்தது. இறுதி 5 ஓவர்களில் 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தமையால், இலங்கை அணியால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை அடையமுடியவில்லை.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் 19 வயதான இளம் வீரர் மொஹமட் ஹஸ்னைன் ஹெட்ரிக் விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார். 16 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் இவர், பானுக ராஜபக்ஷவின் விக்கெட்டினை வீழ்த்தியதுடன், 19 ஆவது ஒவரின் முதல் இரண்டு பந்துகளில் தசுன் ஷானக மற்றும் ஷெஹான் ஜயசூரியவின் விக்கெட்டினை அடுத்தடுத்து வீழ்த்தி T20 போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட்டினை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியானது, இளம் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 17.4 ஓவர்கள் நிறைவில் 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆரம்பத்தில் குறைந்த இடைவெளிகளில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்த போதும், சர்பராஸ் அஹமட் மற்றும் இப்திகார் அஹமட் ஆகியோர் 4 ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பி, அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்திருந்தனர்.
இதில், சர்பராஸ் அஹமட் மற்றும் இப்திகார் அஹமட் ஆகியோரின் கவனயீனமான ரன்-அவுட் வாய்ப்பினால் இப்திகார் அஹமட் ஆட்டமிழக்க, இலங்கை அணி போட்டியில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, அந்த அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசியிருந்ததுடன், நுவன் பிரதீப் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர்.
இலங்கை கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையவுள்ள டேவ் வட்மோர்
இதேவேளை, இந்த வெற்றியானது 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர், இலங்கை அணி பாகிஸ்தான் அணியை T20 போட்டியொன்றில் வீழ்த்தும் முதல் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. அத்துடன், 64 ஓட்டங்கள் என்ற அதிகூடிய ஓட்டங்கள் வீழ்த்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாதித்துள்ளது. இதற்கு முன்னர், 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியமையே இலங்கை அணியின் சாதனையாகவிருந்தது. அதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்ட இரண்டாவது குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கையாகவும் இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியது. (இதற்கு முன்னர் 95 ஓட்டங்கள் – 2012)
தற்போது மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Danushka Gunathilaka | lbw b Shadab Khan | 57 | 38 | 8 | 1 | 150.00 |
Avishka Fernando | run out (Shadab Khan) | 33 | 34 | 3 | 0 | 97.06 |
Bhanuka Rajapaksha | lbw b Mohammad Hasnain | 32 | 22 | 2 | 2 | 145.45 |
Dasun Shanaka | c Babar Azam b Mohammad Hasnain | 17 | 10 | 0 | 2 | 170.00 |
Shehan Jayasuriya | c Shadab Khan b Mohammad Hasnain | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Isuru Udana | not out | 5 | 4 | 0 | 0 | 125.00 |
Wanindu Hasaranga | not out | 7 | 6 | 1 | 0 | 116.67 |
Extras | 12 (b 0 , lb 6 , nb 0, w 6, pen 0) |
Total | 165/5 (20 Overs, RR: 8.25) |
Fall of Wickets | 1-84 (9.4) Danushka Gunathilaka, 2-120 (14.4) Avishka Fernando, 3-135 (15.6) Bhanuka Rajapaksha, 4-153 (18.1) Dasun Shanaka, 5-153 (18.2) Shehan Jayasuriya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Imad Wasim | 4 | 0 | 24 | 0 | 6.00 | |
Faheem Ashraf | 3 | 0 | 31 | 0 | 10.33 | |
Mohammad Hasnain | 4 | 0 | 37 | 3 | 9.25 | |
Mohammad Amir | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Shadab Khan | 4 | 0 | 35 | 1 | 8.75 | |
Iftikhar Ahmed | 1 | 0 | 7 | 0 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Babar Azam | c Minod Bhanuka b Nuwan Pradeep | 13 | 10 | 2 | 0 | 130.00 |
Ahmed Shehzad | b Isuru Udana | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Umar Akmal | lbw b Nuwan Pradeep | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Sarfaraz Ahmed | b Wanindu Hasaranga | 24 | 30 | 1 | 0 | 80.00 |
Iftikhar Ahmed | run out (Lakshan Sandakan) | 25 | 24 | 2 | 0 | 104.17 |
Asif Ali | c Danushka Gunathilaka b Wanindu Hasaranga | 6 | 10 | 0 | 0 | 60.00 |
Imad Wasim | c Wanindu Hasaranga b Kasun Rajitha | 7 | 5 | 1 | 0 | 140.00 |
Faheem Ashraf | c Danushka Gunathilaka b Nuwan Pradeep | 8 | 8 | 1 | 0 | 100.00 |
Shadab Khan | c Avishka Fernando b Isuru Udana | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Mohammad Amir | c Danushka Gunathilaka b Isuru Udana | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Mohammad Hasnain | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 0 , lb 5 , nb 0, w 2, pen 0) |
Total | 101/10 (17.4 Overs, RR: 5.72) |
Fall of Wickets | 1-13 (1.5) Babar Azam, 2-13 (1.6) Umar Akmal, 3-22 (4.2) Ahmed Shehzad, 4-68 (11.4) Iftikhar Ahmed, 5-76 (13.2) Sarfaraz Ahmed, 6-85 (14.4) Imad Wasim, 7-87 (15.2) Asif Ali, 8-96 (16.4) Faheem Ashraf, 9-101 (17.3) Shadab Khan, 10-101 (17.4) Mohammad Amir, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Nuwan Pradeep | 3 | 0 | 21 | 3 | 7.00 | |
Isuru Udana | 2.4 | 0 | 11 | 3 | 4.58 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Lakshan Sandakan | 4 | 0 | 24 | 0 | 6.00 |
முடிவு – இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<