சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்டது இலங்கை – பாகிஸ்தான் போட்டி!

140
Pakistan Cricket Twitter

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. 

கராச்சி – தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியின், நாணய சுழற்சி இடம்பெறுதற்கு முன்னிருந்து மழை குறுக்கிட்டது. தொடர்ச்சியாக சுமார் ஒன்றரை மணித்தியாலம் போட்டியில் மழை குறுக்கிட, போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்தன.

இளம் வீரர்களுடன் பாகிஸ்தானுக்கு சவால் கொடுக்க தயாராகும் இலங்கை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு…

அத்துடன், மழை காரணமாக மைதானத்தில் அதிக நீர் தேங்கியிருந்ததுடன், போட்டியை நடத்த முடியாது என தீர்மானித்த போட்டி நடுவர்கள், ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி நிறைவுசெய்யப்படுவதாக அறிவித்தனர். 

அதேநேரம், கராச்சி மைதானத்தில் மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டியாக இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி அமைந்துள்ளது. குறித்த மைதானத்தில் இதற்கு முன்னர், எந்தவொரு ஒருநாள் போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டிருக்கவில்லை.

பாதுகாப்பு சிக்கல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றிருக்கும் இலங்கை அணி 2009ம் ஆண்டுக்கு பின்னர், முதன்முறையாக ஒருநாள் போட்டியொன்றில் அங்கு விளையாடவிருந்தது. அத்துடன், 2009ம் ஆண்டுக்கு பின்னர், கராச்சி மைானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியாக இது அமையவிருந்தது. 

எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக சீரற்ற காலநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன்படி, இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான இரண்டு ஒருநாள் போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளன. இறுதியாக, இங்கிலாந்தில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணத்தின் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கைவிடப்பட்டிருந்தது.

பாதுகாப்பை விட கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் திரிமான்ன

பாகிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு…

இதேவேளை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி (திங்கட்கிழமை) கராச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம்

லஹிரு திரிமான்னே (அணித் தலைவர்), தனுஷ்க குணதிலக்க, மினோத் பானுக்க, கசுன் ராஜித, தசுன் ஷானக, இசுரு உதான, அவிஷ்க பெர்னாண்டோ, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், செஹான் ஜயசூரிய, சதீர சமரவிக்ரம, ஒசாத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, வனிந்து ஹசரங்க, நுவான் பிரதீப் 

பாகிஸ்தான் குழாம்

இமாம்உல்ஹக், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), பக்கார் சமான், ஆபித் அலி, பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், ஆசிப் அலி, மொஹமட் றிஸ்வான், இமாத் வஸீம், மொஹமட் நவாஸ், இப்திகார் அஹ்மட், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், உஸ்மான் ஷின்வாரி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<