நியூசிலாந்து பதினொருவர் அணியுடன் நடைபெற்ற T20 மற்றும் T10 பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் இலங்கை கிரிக்கெட் அணியானது முறையே 32 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
கௌண்டி தொடரில் விளையாடவுள்ள அசித்த பெர்னாண்டோ
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது. இந்த நிலையில் இந்த தொடர்களுக்கு முன்னதாக இன்று (23) இலங்கை வீரர்கள் நியூசிலாந்து பதினொருவர் அணியினை T10 மற்றும் T20 பயிற்சிப் போட்டிகளில் லிங்கன் நகரில் வைத்து எதிர் கொண்டனர்.
T20 பயிற்சிப் போட்டி
வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க மற்றும் மதீஷ பதிரன ஆகியோரது அசத்தல் பந்துவீச்சி்ன் காரணமாக முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து பதினொருவர் அணி வீரர்கள் 13.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களுடன் சுருண்டனர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை (95) அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை வீரர்கள் தடுமாற்றம் காட்டிய போதிலும் குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அதிரடியில் போட்டியில் வெற்றி இலக்கினை 10.5 ஓவர்களில் அடைந்தனர்.
போட்டியின் சுருக்கம்
நியூசிலாந்து XI – 94 (14.3) பெவோன் ஜேக்கப்ஸ் 39(16), வனிந்து ஹஸரங்க 12/3, சரித் அசலன்க 4/2, மதீஷ பதிரண 7/2
இலங்கை – 97/3 (10.5) குசல் பெரேரா 30(22), கமிந்து மெண்டிஸ் 28(22)
முடிவு – இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றி
T10 பயிற்சிப் போட்டி
பெதும் நிஸ்ஸங்க, வனிந்து ஹஸரங்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோரது அதிரடியில் இலங்கை 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்கள் பெற்றது. பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 129 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணியானது 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 128/2 (10) பெதும் நிஸ்ஸங்க 31(15), வனிந்து ஹஸரங்க 25(16), பானுக்க ராஜபக்ஷ 25(16), மெதிவ் பிஷேர் 12/1(1)
நியூசிலாந்து XI – 96/2 (10) மெதிவ் போய்ல் 57(34)*, நுவான் துஷார 10/2(2)
முடிவு – நியூசிலாந்து 32 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<