நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தை பொருத்தவரை கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ரவிச்சந்திரன் அஸ்வின்
குறித்த குழாத்திலிருந்து சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே மாத்திரம் நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம் தொடை தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருந்த வனிந்து ஹஸரங்க நியூசிலாந்து தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
சரித் அசலங்க தலைமையில் பெயரிடப்பட்டுள்ள இலங்கை அணியில், நியூசிலாந்து தொடரில் பிரகாசிக்க தவறியிருந்த பானுக ராஜபக்ஷ தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், தினேஷ் சந்திமாலும் இணைக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி எதிர்வரும் 28 மற்றும் 30ம் திகதிகளில் இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதுடன், ஜனவரி 2ம் திகதி ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பதிரண, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<