சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான T20I தொடரின் முதல் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 8 ஓட்டங்களால் அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கின்றனர்.
அதேநேரம் இப்போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
>>மேஜர் லீக் மூன்று நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பம்
மவுண்ட் மௌங்னாயில் இன்று (28) நடைபெற்ற இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நியூசிலாந்துக்கு வழங்கினர்.
அதன்படி முதலில் துடுப்பாடத் தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள் இலங்கையின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர். எனினும் இந்த தருணத்தில் நியூசிலாந்து தரப்பிற்காக பொறுப்புடன் ஆடிய டேரைல் மிச்சல் மற்றும் மைக்கல் பிரஸ்வெல் ஆகிய இருவரும் அரைச்சதம் கடக்க நியூசிலாந்து அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து துடுப்பாட்டம் சார்பில் டேரைல் மிச்சல் 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுக்க, மைக்கல் பிரஸ்வெல் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
>>சதீர சமரவிக்ரம நீக்கம்; ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 179 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றனர். இலங்கை வீரர்கள் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 121 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குசல் மெண்டிஸ் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.
குசல் மெண்டிஸ் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களை எடுத்தார். எனினும் குசல் மெண்டிஸின் விக்கெட்டின் பின்னர் பெதும் நிஸ்ஸங்க இலங்கை அணியின் வெற்றிக்காக போராடிய போதும் ஏனைய இலங்கை வீரர்கள் மோசமான ஆட்டத்துடன் மைதானத்தினை விட்டு வெளியேறினர்.
இதனால் இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கை அணியின் வெற்றிக்காக போராடிய பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 60 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 90 ஓட்டங்களைப் பெற்று தன்னுடைய சிறந்த T20I இன்னிங்ஸை பதிவு செய்த போதும் அது வீணாகியது.
நியூசிலாந்துப் பந்துவீச்சில் ஜேக்கப் டப்(f)பி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஷேக்கரி போல்க்ஸ் மற்றும் மேட் ஹேன்ரி ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து வீரரான ஜேக்கப் டப்(f)பி தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tim Robinson | c & b Binura Fernando | 11 | 9 | 2 | 0 | 122.22 |
Rachin Ravindra | c Kusal Mendis b Binura Fernando | 8 | 14 | 0 | 0 | 57.14 |
Mark Chapman | c Kamindu Mendis b Matheesha Pathirana | 15 | 13 | 1 | 0 | 115.38 |
Glenn Phillips | lbw b Wanindu Hasaranga | 8 | 9 | 0 | 0 | 88.89 |
Daryl Mitchell | st b | 62 | 42 | 4 | 2 | 147.62 |
Mitchell Hay | lbw b Wanindu Hasaranga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Michael Bracewell | c & b | 59 | 33 | 4 | 4 | 178.79 |
Mitchell Santner | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Zakary Foulkes | run out () | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 7 (b 0 , lb 0 , nb 3, w 4, pen 0) |
Total | 172/8 (20 Overs, RR: 8.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Thushara | 4 | 0 | 28 | 0 | 7.00 | |
Binura Fernando | 4 | 0 | 22 | 2 | 5.50 | |
Maheesh Theekshana | 4 | 0 | 29 | 2 | 7.25 | |
Matheesha Pathirana | 4 | 0 | 60 | 1 | 15.00 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 33 | 2 | 8.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Tim Robinson b Matt Henry | 90 | 60 | 7 | 3 | 150.00 |
Kusal Mendis | c Mitchell Hay b Jacob Duffy | 46 | 36 | 6 | 1 | 127.78 |
Kusal Perera | c Mitchell Hay b Jacob Duffy | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Kamindu Mendis | c Mitchell Hay b Jacob Duffy | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Charith Asalanka | c Michael Bracewell b Zakary Foulkes | 3 | 7 | 0 | 0 | 42.86 |
Bhanuka Rajapakse | b Matt Henry | 8 | 5 | 2 | 0 | 160.00 |
Wanindu Hasaranga | run out (Zakary Foulkes) | 5 | 2 | 0 | 0 | 250.00 |
Mahesh Theekshana | c Jacob Duffy b Zakary Foulkes | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Binura Fernando | not out | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Maheesh Theekshana | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 2 , lb 2 , nb 0, w 3, pen 0) |
Total | 164/8 (20 Overs, RR: 8.2) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Matt Henry | 4 | 0 | 28 | 2 | 7.00 | |
Jacob Duffy | 4 | 0 | 21 | 3 | 5.25 | |
Zakary Foulkes | 4 | 0 | 41 | 2 | 10.25 | |
Mitchell Santner | 4 | 0 | 26 | 0 | 6.50 | |
Michael Bracewell | 3 | 0 | 30 | 0 | 10.00 | |
Rachin Ravindra | 1 | 0 | 14 | 0 | 14.00 |