Home Tamil மீண்டும் இலங்கைக்கு தோல்வி ; உலகக் கிண்ணத்துக்கான நேரடி வாய்ப்பு பறிபோனது

மீண்டும் இலங்கைக்கு தோல்வி ; உலகக் கிண்ணத்துக்கான நேரடி வாய்ப்பு பறிபோனது

Sri Lanka tour of New Zealand 2023

1221

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஹெமில்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கு ஒருசில வாய்ப்புகள் இருந்த போதும், தொடரை 2-0 என இழந்து குறித்த வாய்ப்புகளையும் இலங்கை அணி தவறவிட்டுள்ளது.

>> IPL 2023 தொடரை தவறவிடும் நட்சத்திரங்கள்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு மீண்டும் ஒருமுறை துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றம் கொடுக்க தொடங்கினர். டில்ஷான் மதுசங்கவுக்கு பதிலாக தனன்ஜய டி சில்வா அணிக்குள் நுழைந்தபோதும் துடுப்பாட்டத்தில் நினைத்த அளவில் பங்களிப்பை வழங்கவில்லை.

ஆரம்பத்தில் பெதும் நிஸ்ஸங்க மாத்திரம் நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த ஏனைய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மெண்டிஸ் மற்றும் மெதிவ்ஸ் ஆகியோர் ஓட்டங்களின்றி வெளியேற, நுவனிது பெர்னாண்டோ 2 ஓட்டங்கள் மற்றும் சரித் அசலங்க 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனைத்தொடர்ந்து தனன்ஜய டி சில்வா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பெதும் நிஸ்ஸங்க தசுன் ஷானகவுடன் இணைந்து தன்னுடைய அரைச்சதத்தை கடந்தார். நிஸ்ஸங்க 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற தசுன் ஷானக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுத்தந்தனர்.

தசுன் ஷானக 31 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுத்தந்த நிலையில், ஏனைய பின்வரிசை வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். எனவே, 41.3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மெட் ஹென்ரி, ஹென்ரி சிப்லி மற்றும் டெரைல் மிச்சல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முதல் போட்டியில் 76 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி மீண்டும் ஒருமுறை மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

குறைந்த ஓட்டங்கள் என்றாலும் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நியூசிலாந்து அணிக்கு சவால் கொடுக்க தொடங்கினர். லஹிரு குமார தன்னுடைய முதல் ஓவரில் சாட் போவ்ஸ் மற்றும் டொம் பிளண்டல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஆரம்பத்தை பெற்றுத்தந்தார். தொடர்ந்து ராஜித மற்றும் ஷானக ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முறையே டெரைல் மிச்சல் மற்றும் டொம் லேத்தம் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஒரு கட்டத்தில் 59 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து அணியின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், வில் யங் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் 5வது விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களை பகிர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

இறுதிவரை இவர்கள் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடியதுடன் வில் யங் 86 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோல்ஸ் 44 பெற்றுக்கொடுக்க 32.5 ஓவர்கள் நிறைவில் 159 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணி வெற்றியை பதிவுசெய்தது.

இதேவேளை இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி ஐசிசி உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளதுடன், சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள குவாலிபையர் போட்டியில் விளையாடி உலகக்கிண்ணத்துக்கான வாய்ப்பை தக்கவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

Result


New Zealand
159/4 (32.5)

Sri Lanka
157/10 (41.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka run out (Henry Nicholls) 57 64 8 1 89.06
Nuwanidu Fernando c Henry Nicholls b Matt Henry 2 9 0 0 22.22
Kusal Mendis c Daryl Mitchell b Matt Henry 0 6 0 0 0.00
Angelo Mathews c Daryl Mitchell b Henry Shipley 0 8 0 0 0.00
Charith Asalanka c Henry Shipley b Daryl Mitchell 9 21 2 0 42.86
Dhananjaya de Silva c Matt Henry b Daryl Mitchell 13 21 2 0 61.90
Dasun Shanaka c Matt Henry b Henry Shipley 31 36 2 2 86.11
Chamika Karunaratne c Matt Henry b Tom Latham 24 42 3 0 57.14
Wanindu Hasaranga c Tom Latham b Daryl Mitchell 0 4 0 0 0.00
Kasun Rajitha b Henry Shipley 9 32 0 0 28.12
Lahiru Kumara not out 0 6 0 0 0.00


Extras 12 (b 0 , lb 4 , nb 0, w 8, pen 0)
Total 157/10 (41.3 Overs, RR: 3.78)
Bowling O M R W Econ
Matt Henry 10 2 14 3 1.40
Henry Shipley 8.3 2 32 3 3.86
Blair Tickner 8 2 35 0 4.38
Daryl Mitchell 7 1 32 3 4.57
Ish Sodhi 8 0 40 0 5.00


Batsmen R B 4s 6s SR
Chad Bowes c Kusal Mendis b Lahiru Kumara 1 5 0 0 20.00
Tom Blundell c Kusal Mendis b Lahiru Kumara 4 3 1 0 133.33
Will Young not out 86 113 11 0 76.11
Daryl Mitchell c Kusal Mendis b Kasun Rajitha 6 8 1 0 75.00
Tom Latham b Dasun Shanaka 8 16 0 0 50.00
Henry Nicholls not out 44 52 5 0 84.62


Extras 10 (b 0 , lb 3 , nb 0, w 7, pen 0)
Total 159/4 (32.5 Overs, RR: 4.84)
Bowling O M R W Econ
Kasun Rajitha 9 0 44 1 4.89
Lahiru Kumara 7.4 0 39 2 5.27
Chamika Karunaratne 4.5 0 26 0 5.78
Dasun Shanaka 7.2 1 25 1 3.47
Wanindu Hasaranga 4 0 22 0 5.50



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<