சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றனர்.
இன்னிங்ஸ் தோல்வியினைத் தவிர்க்க போராடும் இலங்கை கிரிக்கெட் அணி
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 2-0 என வெற்றி பெற்று, இலங்கை அணியினை வைட்வொஷ் செய்துள்ளது.
வெலிங்டன் நகரில் நடைபெற்று வந்த இலங்கை நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (19) நிறைவுக்கு வந்தது. போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் பலோவ் ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 113 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
இதனையடுத்து நான்காம் நாளுக்கான போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணி, களத்தில் இருந்த இரண்டு துடுப்பாட்டவீரர்களையும் ஆரம்பத்திலேயே இழந்தது. இதன்படி இன்றைய நாளின் முதல் விக்கெட்டாக மாறிய குசல் மெண்டிஸ் மேட் ஹென்ரியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது தன்னுடைய 17ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 8 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றிருந்தார். மறுமுனையில் இலங்கை அணியின் அடுத்த விக்கெட்டாக மாறிய அஞ்செலோ மெதிவ்ஸ் வெறும் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றியிருந்தார்.
எனினும், இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் – தனன்ஞய டி சில்வா ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடி, இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக 105 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தனன்ஞய டி சில்வா – தினேஷ் சந்திமாலின் இணைப்பாட்டம் நான்காம் நாளின் மதிய போசணத்தினை தாண்டி நீடித்திருந்ததோடு, இந்த இணைப்பாட்டத்தின் முடிவாக இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தினேஷ் சந்திமால் தன்னுடைய 25ஆவது அரைச்சதத்தோடு 8 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
தினேஷ் சந்திமாலின் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த நிஷான் மதுஷ்க, தனன்ஞய டி சில்வாவுடன் இணைந்து இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கிய போதும் குறித்த இணைப்பாட்டம் நான்காம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் நிறைவுக்கு வந்தது. இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த நிஷான் மதுஷ்க ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
நான்காம் நாளின் தேநீர் இடைவேளையினைத் தாண்டிய ஆட்டத்தில் சதத்தினை நெருங்கிய தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டும் பறிபோனது. டோக் பிரஸ்வெலின் பந்துவீச்சில் ஹென்ரி நிக்கோல்ஸ் இடம் இலகு பிடியெடுப்பு ஒன்றினை வழங்கிய தனன்ஞய டி சில்வா, ஒரு சிக்ஸர் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 98 ஓட்டங்களை எடுத்தார். அத்துடன் இலங்கை அணிக்கு துடுப்பாட்டம் மூலம் சற்று ஆறுதல் அளித்திருந்த அவர் தன்னுடைய 10ஆவது அரைச்சதத்தினைப் இப்போட்டியில் பூர்த்தி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
IPL ஆட நியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறும் மற்றுமொரு வீரர்
தனன்ஞய டி சில்வாவின் பின்னர் இலங்கை அணிக்கு கசுன் ராஜித சிறு போராட்டம் ஒன்றை வழங்கிய நிலையில், இறுதியில் அது டிம் சௌத்தியின் பந்துவீச்சில் முடிவுக்கு வந்தது. அதன்படி இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் 142 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 358 ஓட்டங்களுடன் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்த கசுன் ராஜித 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ப்ளைர் டிக்னர் மற்றும் டிம் சௌத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, மைக்கல் பிரஸ்வெல் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்ரி நிக்கோல்ஸ் தெரிவாக, தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணியின் ஏனைய வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சனிற்கு வழங்கப்பட்டிருந்தது.
போட்டியின் ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | c Prabath Jayasuriya b Kasun Rajitha | 21 | 73 | 0 | 0 | 28.77 |
Devon Conway | c & b Dhananjaya de Silva | 78 | 108 | 13 | 0 | 72.22 |
Kane Williamson | c b Prabath Jayasuriya | 215 | 296 | 23 | 2 | 72.64 |
Henry Nicholls | not out | 200 | 240 | 15 | 4 | 83.33 |
Daryl Mitchell | c & b Kasun Rajitha | 17 | 12 | 1 | 1 | 141.67 |
Tom Blundell | not out | 17 | 17 | 0 | 0 | 100.00 |
Extras | 32 (b 2 , lb 17 , nb 8, w 5, pen 0) |
Total | 580/4 (123 Overs, RR: 4.72) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 32 | 6 | 126 | 2 | 3.94 | |
Asitha Fernando | 26 | 6 | 110 | 0 | 4.23 | |
Lahiru Kumara | 25 | 1 | 164 | 0 | 6.56 | |
Dhananjaya de Silva | 19 | 3 | 75 | 1 | 3.95 | |
Prabath Jayasuriya | 21 | 1 | 86 | 1 | 4.10 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Tom Blundell b Matt Henry | 6 | 32 | 0 | 0 | 18.75 |
Dimuth Karunaratne | c Tom Latham b Michael Bracewell | 89 | 188 | 9 | 0 | 47.34 |
Kusal Mendis | c Devon Conway b Doug Bracewell | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Prabath Jayasuriya | c Daryl Mitchell b Tim Southee | 4 | 17 | 1 | 0 | 23.53 |
Angelo Mathews | c Tom Blundell b Matt Henry | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Dinesh Chandimal | st Tom Blundell b Michael Bracewell | 37 | 92 | 4 | 0 | 40.22 |
Dhananjaya de Silva | c Tim Southee b Michael Bracewell | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Nishan Madushka | c Michael Bracewell b Matt Henry | 19 | 31 | 3 | 0 | 61.29 |
Kasun Rajitha | run out (Tom Latham) | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Asitha Fernando | c Kane Williamson b Blair Tickner | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 4 , lb 1 , nb 1, w 1, pen 0) |
Total | 164/10 (66.5 Overs, RR: 2.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 15 | 6 | 22 | 1 | 1.47 | |
Matt Henry | 20 | 6 | 44 | 3 | 2.20 | |
Doug Bracewell | 12 | 7 | 19 | 1 | 1.58 | |
Michael Bracewell | 12 | 1 | 50 | 3 | 4.17 | |
Blair Tickner | 6.5 | 1 | 21 | 1 | 3.23 | |
Daryl Mitchell | 1 | 0 | 3 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c WA Young b Doug Bracewell | 5 | 36 | 0 | 0 | 13.89 |
Dimuth Karunaratne | c Devon Conway b Tim Southee | 51 | 83 | 4 | 0 | 61.45 |
Kusal Mendis | c Kane Williamson b Matt Henry | 50 | 106 | 8 | 0 | 47.17 |
Angelo Mathews | c Michael Bracewell b Blair Tickner | 2 | 44 | 0 | 0 | 4.55 |
Dinesh Chandimal | c Doug Bracewell b Blair Tickner | 62 | 92 | 8 | 0 | 67.39 |
Dhananjaya de Silva | c Henry Nicholls b Michael Bracewell | 98 | 185 | 12 | 1 | 52.97 |
Nishan Madushka | c Tim Southee b Blair Tickner | 39 | 93 | 4 | 1 | 41.94 |
Kasun Rajitha | c Kane Williamson b Tim Southee | 20 | 110 | 1 | 0 | 18.18 |
Prabath Jayasuriya | c Blair Tickner b Michael Bracewell | 2 | 45 | 0 | 0 | 4.44 |
Lahiru Kumara | c Michael Bracewell b Tim Southee | 7 | 45 | 1 | 0 | 15.56 |
Asitha Fernando | not out | 0 | 15 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 0 , lb 6 , nb 2, w 14, pen 0) |
Total | 358/10 (142 Overs, RR: 2.52) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 27 | 13 | 51 | 3 | 1.89 | |
Matt Henry | 29 | 8 | 59 | 1 | 2.03 | |
Michael Bracewell | 42 | 14 | 100 | 2 | 2.38 | |
Doug Bracewell | 18 | 3 | 58 | 1 | 3.22 | |
Blair Tickner | 26 | 6 | 84 | 3 | 3.23 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<